299 புனித அந்தோணியார் ஆலயம், ஆலந்தூர்


புனித அந்தோணியார் ஆலயம்.

இடம் : ஆலந்தூர், சென்னை -16

மாவட்டம் : காஞ்சிபுரம்
மறை மாவட்டம் : செங்கல்பட்டு
மறை வட்டம் : தோமையார் மலை

நிலை : பங்குத்தளம்

கிளைப் பங்குகள் :
1. திரு இருதய ஆண்டவர் ஆலயம், நோபிள்தெரு
2. புனித செபஸ்தியார் ஆலயம், மடுவின்கரை

பங்குத்தந்தை : அருட்பணி S. ஞானமணி

குடும்பங்கள் : 960 (கிளைகள் சேர்த்து)
அன்பியங்கள் : 32 (கிளைகள் சேர்த்து)

ஞாயிறு திருப்பலி :
காலை 06.30 மணிக்கு (தமிழ்)
காலை 08.15 மணிக்கு (ஆங்கிலம்)
மாலை 05.30 மணிக்கு (தமிழ்)

நாள்தோறும் திருப்பலி : காலை 06.30 மணிக்கு

செவ்வாய்க்கிழமை : காலை 06.30 மணிக்கு திருப்பலி.

காலை 10.30 மணிக்கு நவநாள், திருப்பலி,
மாலை 06.30 மணிக்கு திருப்பலி, தேர்பவனி.

மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை : காலை 10.30 மணிக்கு குணமளிக்கும் வழிபாடு, மாலை 05.00 மணிக்கு திருப்பலி, மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : ஜூன் 13-ஆம் தேதியை ஒட்டிய மூன்று நாட்கள்.

வழித்தடம் :
சென்னை பாரிமுனையில் இருந்து தாம்பரம் செல்லும் அனைத்து பேருந்துகளும் ஆலந்தூர் வழியாகச் செல்லும். இறங்குமிடம் கத்திப்பாரா.

மெட்ரோ இரயில் வசதியும் உள்ளது. பரங்கிமலை இரயில் நிலையத்திலிருந்து ஆலந்தூர் St. Antony's church.

வரலாறு :

கிண்டியிலிருந்து மீனம்பாக்கம் விமானநிலையத்தில் செல்லும் வழியில், தோமையார் குன்று காவல் நிலையம் அருகே அமைந்துள்ளது சுமார் 150 ஆண்டுகள் பாரம்பரியமான புனித அந்தோணியார் ஆலயம்.

இங்கு பெரும் பகுதியினர் பிற மறையைத் தழுவியவர்கள் வாழுமிடமாக இருந்தாலும், சிறுபான்மை கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி ஜெபிப்பதிலும், பிறர் அன்பைப் பகிர்ந்து கொள்வதிலும் சிறப்புடையவர்களாக இருந்தனர்.

பிற மறையை சார்ந்த ஒருவரின் மகள் நோய்வாய்ப்பட, மருத்துவர் கைவிட்ட நிலையில் இங்கு வந்து புனித அந்தோணியாரிடம் ஜெபிக்க, சிறுமி பூரண சுகம் பெற்றார். இதுவே புனித அந்தோணியார் ஆலந்தூரில் செய்த முதல் புதுமை.

புனித அந்தோணியார் செய்த இந்த மாபெரும் நன்மைக்கு நன்றியாக 12அடி நீளம், 10 அடி அகலத்தில் 1885 ஆம் ஆண்டு சிற்றாலயம் கட்டப்பட்டது.

இவ்வாலயத்திற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது பிறமறையைச் சார்ந்த மக்களும் பெருமளவில் வந்தனர். குறிப்பாக புனித அந்தோணியாரின் நவநாளான செவ்வாய்க்கிழமைகளில் பெரும் கூட்டத்தைக் காணலாம்.

1919 -ஆம் ஆண்டு இச்சிற்றாலயம் சற்று பெரிதாக்கப்பட்டு, ஞாயிறு வழிபாட்டில் இறைமக்கள் பங்கு பெறும் அளவுக்கு வசதி செய்யப்பட்டது.

புனிதரின் அருளால் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கவே, அன்றைய பங்குத்தந்தையின் முயற்சியால் ஆலயத்தின் முன்புறம் கீற்றுக் கொட்டகை போடப்பட்டது.

சுமார் 15 ஆண்டு காலமாக மக்கள் செய்த ஜெபத்தின் பயனாக இப்பொழுது ஆலயம் கட்டப்பட்டுள்ள இடம் கிடைத்தது.

1981 செப்டம்பர் மாதத்தில் பேராயர் R. அருளப்பா அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மக்களின் நன்கொடை, அயராத உழைப்பு பிற மறை சகோதரர்களின் நன்கொடை பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 25-03-1985 அன்று சென்னை -மயிலை பேராயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அழகிய வேளாங்கண்ணி மாதா கெபி ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்தந்தை ஜோ சஞ்சய்
2. அருட்தந்தை ஆரோக்கிய தாஸ்
3. அருட்தந்தை அருண்.

இவ்வாலய வழிபாட்டின் தனிச்சிறப்பு :

ஒவ்வொரு நாளும் காலை 06.30 மணி திருப்பலிக்கு முன்பாக, காலையில் 05.45 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து 06.00 மணிக்கு கட்டளை ஜெபம் (திருப்புகழ் மாலை, பொதுநிலையினர் இதனை வழிநடத்துவார்கள்) நடைபெறுவது இவ்வாலயத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று.

மட்டுமல்லாது மே மாதம் மாதா வணக்கம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு நாளைய தினம் வெகு சிறப்பாக நிறைவு செய்யப்படுகின்றது. ஆகவே மாதா வணக்கம் மாதத்தில் இவ்வாலயத்தை பதிவு செய்வதை பாக்கியமாக கருதுகின்றோம்.

புனித அந்தோணியார் வழியாக இறைவனின் அருள் வளங்களை பெற்றுச் செல்ல அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது ஆலந்தூர் இறை சமூகம்.