494 புனித கார்மேல் மாதா ஆலயம், குன்னமலை


புனித கார்மேல் மாதா ஆலயம்

இடம் : குன்னமலை

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், கந்தம்பாளையம்
2. புனித மரிய மதலேனாள் ஆலயம், கொண்டரசம்பாளையம்
3. புனித வனத்து அந்தோணியார் ஆலயம், திடுமல்
4. திரு இருதய ஆண்டவர் ஆலயம், சீராப்பள்ளி
5. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், நடந்தை
6. குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், மேல்சாத்தம்பூர்
7. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், இராமதேவம்

பங்குத்தந்தை : அருட்பணி. கார்மேல் கிருபாகரன்

குடும்பங்கள் : 215

ஞாயிறு : காலை 08.30 மணிக்கு திருப்பலி

வாரநாட்கள் : கிளைப்பங்குகளில் திருப்பலி

திருவிழா : ஜூலை மாதம் இரண்டாம் வாரம்.

வழித்தடம் : திருச்செங்கோட்டிலிருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில், சித்தாளந்தூர் வழியாக 19 கி.மீ தொலைவில் குன்னமலை உள்ளது.

location map : R.C.CHURCH Kandampalayam, Tamil Nadu 637203

ஆலய வரலாறு :

கி.பி 1930 ஆம் ஆண்டில் சேலம் மறைமாவட்டம் உருவான போது குன்னமலை பகுதி நாமக்கல் பங்கைச் சேர்ந்த மறைப்பரப்புத் தளமாக விளங்கியது. அப்போது பிரிவினை சபையினர் இங்கு தங்கி நற்செய்திப் பணியாற்றி வந்தனர். அவர்களால் ஒரு தொடக்கப்பள்ளியும் நடத்தப்பட்டு வந்தது. இந்த காலகட்டத்தில் நாமக்கல்லில் நான்கு குருக்கள் தங்கியிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்து வந்தனர். அவர்களில் ஒருவர் குன்னமலைக்கு வந்து நற்செய்திப் பணியாற்றி வந்தார். அவரது எளிய தோற்றமும் அன்பான அணுகுமுறையும் மக்களை மிகவும் கவர்ந்தது. ஆகவே மக்கள் அவரை குன்னமலையில் தங்களோடு தங்கிருக்க கேட்டுக் கொண்டனர்.

1940 ஆம் ஆண்டு குன்னமலை பங்கு நாமக்கல்லிலிருந்து பிரிக்கப்பட்டு தனிப்பங்காக நிறுவப்பட்டு, அருட்பணி. மத்தேயு தெக்கடம் அவர்களை சேலம் மறைமாவட்ட ஆயர் குன்னமலையில் தங்கிருக்கப் பணித்தார்.

அருட்பணி. மத்தேயு தெக்கடம் அவர்கள் நிலம் வாங்கி உத்தரிய அன்னையை பாதுகாவலியாகக் கொண்டு ஆலயம் ஒன்றை எழுப்பினார். கத்தோலிக்க திருச்சபையில் இருந்து பிரிந்த சகோதரர்களால் அதுவரை நடத்தப்பட்டு வந்த பள்ளி, புனித உத்தரிய மாதா துவக்கப்பள்ளி என பெயர் மாற்றம் பெற்று மறைமாவட்டத்தின் பொறுப்பில் வந்தது. இவ்வூரின் கிளைப்பங்கான மேல்சாத்தம்பூரிலும் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது.

அருட்பணி. செல்வரத்தினம் (1968-1979) பணிக்காலத்தில் கிளைப்பங்குகளில் 10 சிற்றாலயங்கள் கட்டப்பட்டன.

14.09.1976 ல் அருட்தந்தை. செல்வரத்தினம் அவர்களால் குன்னமலையில் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. மேலும் 11.07.1978 ல் சீராப்பள்ளி ஆலயமும், 12.07.1978 ல் கபிலக்குறிச்சி ஆலயமும் கட்டப்பட்டது.

அருட்பணி. பிரான்சிஸ் ஆசைத்தம்பி (2008-2013) அவர்களின் பணிக்காலத்தில் குன்னமலையில் புனித உத்தரிய மாதா துவக்கப் பள்ளியும், மேல்சாத்தம்பூரில் சிறுமலர் துவக்கப் பள்ளியும் புதிதாக கட்டப்பட்டது.

மக்கள் தொழிலின் நிமித்தமாக வெளியூர்களில் சென்று தங்குவதால், இப்பங்கில் இறைமக்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்ததாலும், இங்கு பணியாற்றி வருகிற பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றனர்.

மேலும், இப்பங்கின் பவளவிழா (1940-2015) நினைவாக அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. பிரகாஷா அவர்களின் முயற்சியாலும், மக்களின் உதவி ஒத்துழைப்பு மற்றும் நன்கொடையாளர்களின் உதவியாலும் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 18.07.2015 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பங்கில் உள்ள கல்விக்கூடங்கள் :
1. சிறுமலர் தொடக்கப்பள்ளி
2. உத்தரிய மாதா தொடக்கப்பள்ளி.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. மத்தேயு தெக்கடம்
2. அருட்பணி. ஈசாக்
3. அருட்பணி. குழந்தைநாதர்
4. அருட்பணி. அந்தோணி கலத்தில் (1946)
5. அருட்பணி. புஷ்பநாதர் (1947)
6. அருட்பணி. மத்தேயு கடவில் (1948-1951)
7. அருட்பணி. A. L. இருதயம் (1951)
8. அருட்பணி. குருசுங்கல் (1952-1957)
9. அருட்பணி. கிராவியே (1957-1961)
10. அருட்பணி. தாமஸ் கீராஞ்சிரா (1962-1965)
11. அருட்பணி. C. S. அந்தோணிசாமி (1965-1967)
12. அருட்பணி. செல்வரத்தினம் (1968-1979)
13. அருட்பணி. ஜெகராஜ் (1979-1981)
14. அருட்பணி. S. சிங்கராயன் (1981-1984)
15. அருட்பணி. K. S. பயஸ் (1984-1985)
16. அருட்பணி. S. ஆரோக்கியசாமி (1986-1987)
17. அருட்பணி. அ. சிங்கராயன் (1987-1989)
18. அருட்பணி. சூசைராஜ் (1989-1994)
19. அருட்பணி. பன்னீர் செல்வம் (1994-1998)
20. அருட்பணி. கபிரியேல் (1998-2000)
21. அருட்பணி. இம்மானுவேல் (2000-2001)
22. அருட்பணி. ஜோசப் பால்ராஜ் (2001-2004)
23. அருட்பணி. இக்னேஷியஸ் பிதேலிஸ் (2004-2008)
24. அருட்பணி. பிரான்சிஸ் ஆசைத்தம்பி (2008-2013)
25. அருட்பணி. பிரகாஷா (2013-2016)
26. அருட்பணி. பிரான்சிஸ் (2016-2019)
27. அருட்பணி. கார்மேல் கிருபாகரன் (2019 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. கார்மேல் கிருபாகரன் அவர்கள்.