புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்
இடம்: பாராசூர், பாராசூர் அஞ்சல்
மாவட்டம்: திருவண்ணாமலை
மறைமாவட்டம்: வேலூர்
மறைவட்டம்: வந்தவாசி
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித சகாய அன்னை ஆலயம், இருங்கல்
2. புனித இராயப்பர் ஆலயம், எறையூர்
3. புனித லூர்து அன்னை ஆலயம், மாளிகைப்பட்டு
4. வாழ்குடை
5. நாவல்
6. கடுகனூர்
7. வடதின்னலூர்
8. செங்காடு
பங்குத்தந்தை: அருட்பணி. M. ஜான்சன்
குடும்பங்கள்: 13 (கிளைப்பங்குகள் சேர்த்து 110)
ஞாயிறு திருப்பலி காலை 08.30 மணி
வழித்தடம்: செய்யாறு -10கி.மீ
வந்தவாசி -26கி.மீ
Location map: https://maps.app.goo.gl/ViRrxMAQ68yMuhE97
வரலாறு:
திருவத்திபுரம் பங்கின் ஒருபகுதியாக 1952 ஆம் ஆண்டுவரை பாராசூர் இருந்து வந்தது. அவ்வேளையில் திரு. காணிக்கம் உபதேசியார் பாராசூரில் உள்ள ஆலய நிலத்தையும் சிற்றாலயத்தையும் கவனித்து வந்தார்.
1950 ஆம் ஆண்டில், அப்போது திருவத்திபுரம் பங்குத்தந்தையாக பணியாற்றிக் கொண்டிருந்த அருட்பணி. ரிமெரி, SDB அவர்களால் பாராசூரை தனிப்பங்காக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, திரு. ஆரோக்கியசாமி அவர்களை உபதேசியாராக நியமித்தார்.
சென்னை -மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு லூயிஸ் மத்தியாஸ், SDB அவர்கள் 1952 ஆம் ஆண்டில் பாராசூர் -ஐ தனிப்பங்காக உயர்த்தினார். முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. S. P. அந்தோனி அவர்கள் பொறுப்பேற்று ஓர் ஆண்டு காலம் வழிநடத்தினார்.
தொடர்ந்து அருட்பணி. M. O. அகஸ்டின் அவர்கள் ஓர் ஆண்டு பணியாற்றினார்.
1954 முதல் 1960 ஆம் ஆண்டு வரை மீண்டும் திருவத்திபுரம் பங்குத்தந்தையின் பொறுப்பின் கீழ் பாராசூர் செயல்பட்டு வந்தது.
1960 ஆம் ஆண்டு அருட்பணி. A. தாமஸ் பாராசூர் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று, 1961 ஆம் ஆண்டு கிளைப்பங்கான இருங்கல் புனித சகாய அன்னை ஆலயத்தைக் கட்டினார். 1963 ஆம் ஆண்டு பாராசூர் பங்கு ஆலயத்தை விரிவாக்கம் செய்தார். மேலும் மாளிகைபட்டில் ஆலயம் கட்ட நிலம் வாங்கினார்.
அருட்பணி. P. J. தாமஸ் அவர்கள் 1969 ஆம் ஆண்டு பொறுப்பேற்று புனித அந்தோணியார் கெபி, வாசக அறை மற்றும் மருந்தகம் கட்டினார்.
அருட்பணி. உர்பன் அவர்கள் 1973 ஆம் ஆண்டு பொறுப்பேற்று, கிளைப்பங்கான மாளிகைப்பட்டில் சிற்றாலயம் கட்டினார்.
1976 ஆம் ஆண்டில் திருவத்திபுரம் பங்குத்தந்தை அருட்பணி. K. K. ஜோசப் அவர்களின் பொறுப்பில் பாராசூர் இருந்தது. பின்னர் அருட்பணி. லாரன்ஸ் அவர்கள் பாராசூர் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.
தொடர்ந்து பணிபுரிந்த பங்குத்தந்தையர்களின் வழிகாட்டலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டன.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. S. P. அந்தோனி (1952-1953)
2. அருட்பணி. M. O. அகஸ்டின் (1953-1954)
3. திருவத்திபுரம் பங்குத்தந்தை (1954-1960)
4. அருட்பணி. L. A. தாமஸ் (1960-1968)
5. அருட்பணி. P. J. தாமஸ் (1968-1973)
6. அருட்பணி. அர்பன் தெகேயில், OSM (1973-1976)
7. திருவத்திபுரம் பங்குத்தந்தை (1976-1977)
8. அருட்பணி. ஜோஸ் லாரன்ஸ் (1977 ஆகஸ்ட்-செப்டம்பர்)
9. திருவத்திபுரம் பங்குத்தந்தை (1977-1978)
10. அருட்பணி. செபாஸ்டின் வாளுக்காரன் (1978-1980)
11. அருட்பணி. அற்புதராஜ் இராயன் (1980 ஏப்ரல்-செப்டம்பர்)
12. திருவத்திபுரம் பங்குத்தந்தை (1980-1982)
13. அருட்பணி. பாத்திமாநாதன் (1982-2002)
14. திருவத்திபுரம் பங்குத்தந்தை (2002 மே -செப்டம்பர்)
15. அருட்பணி. A. இராய் இலாசர் (2002-2004)
16. அருட்பணி. இரா. இலாரன்சு (2004-2008)
17. அருட்பணி. S. ஆரோக்கியசாமி (2008-2010)
18. அருட்பணி. A. ஜோசப் (2010-2017)
19. அருட்பணி. M. ஜான்சன் (2017 முதல் தற்போது வரை..)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. M. ஜான்சன்
ஆலய வரலாறு: வேலூர் மறைமாவட்ட மலரிலிருந்து அருட்பணி. ரமேஷ் (வேலூர் மறைமாவட்டம்)