438 புனித மரிய மதலேனாள் திருத்தலம், மதியம்பட்டி


புனித மரிய மதலேனாள் திருத்தலம்

இடம் : மதியம்பட்டி −செளரிபாளையம், மல்லசமுத்திரம் (வழி), மாமுண்டி (அஞ்சல்)

மாவட்டம் : நாமக்கல்
மறை மாவட்டம் : சேலம்
மறை வட்டம் : திருச்செங்கோடு

பங்குத்தந்தை : அருட்பணி. லூர்துசாமி

குடும்பங்கள் : 235
அன்பியங்கள் : 7

நிலை : திருத்தலம்

கிளைப்பங்குகள்:
1. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மல்லசமுத்திரம்
2. புனித லூர்து அன்னை ஆலயம், பருத்திப்பள்ளி
3. புனித மலைமாதா ஆலயம், வெண்ணந்தூர்
4. புனித சூசையப்பர் ஆலயம், பாலமேடு
5. புனித சகாய மாதா ஆலயம், செண்பகமாதேவி
6. புனித அந்தோணியார் ஆலயம், சின்னமங்கலம்.

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணிக்கு
காலை 07.00 மணிக்கு (மல்லசமுத்திரம் கிளைப்பங்கில்)
மற்றும் காலை 08.30 மணிக்கு.
காலை 10.00 மணிக்கு குணமளிக்கும் ஜெபம் மற்றும் புனிதையின் மன்றாட்டு.

வார நாட்கள் திருப்பலி மற்றும் ஜெபமாலை

திங்கள், வெள்ளி திருப்பலி : காலை 06.30 மணிக்கு
செவ்வாய், வியாழன், சனி திருப்பலி : மாலை 06.00 மணிக்கு
புதன் திருப்பலி : காலை 06.00 மணிக்கு (புனித மரிய மதலேனாள் முதியோர் இல்லம்)

மாதந்தோறும் பெளா்ணமி அன்று வெண்ணந்தூர் மலைமாதா சிற்றாலத்தில் குணமளிக்கும் திருப்பலி நடைபெறும்

திருத்தல ஆண்டு திருவிழா : ஜூலை மாதம் 21, 22 ஆம் தேதி - புனித மரிய மதலேனாள்.

ஜனவரி மாதம் 17 -ஆம் தேதி புனித வனத்து அந்தோனியார்.

வழித்தடம் :

சேலத்தில் இருந்து கோயம்புத்தூர் ரோட்டில் ஆட்டையாம்பட்டி பிரிவு வழியாக வெண்ணந்தூர் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.

சென்னையில் இருந்து சேலம்−நாமக்கல் ரோடு−ஆட்டையாம்பட்டி பிரிவு−வெண்ணந்தூர் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.

கோயம்புத்தூர் ரோட்டில் ஆட்டையாம்பட்டி பிரிவு வழியாக, வெண்ணந்தூர் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.

நாகர்கோவில் -மதுரை- நாமக்கல் - ஆண்டலூர் கேட் -ஆட்டையாம்பட்டி பிரிவு - வெண்ணந்தூர் -மதியம்பட்டி.

சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தினமும் பேருந்து வசதி உண்டு காலை 06.00 மணிக்கு மற்றும் மாலை 03.00 மணிக்கு,

பேருந்து எண் : 51

Location map : https://maps.app.goo.gl/iNvSGunwBiwTfrVz8

மண்ணின் மைந்தர்கள்:
1. மறைதிரு அருட்பணி. M. ஆரோக்கியம்
2. மறைதிரு அருட்பணி. C.S. அந்தோணி
3. மறைதிரு அருட்பணி. சவரிமுத்து
4. அருட்பணி. ஆரோக்கிய டேவிட்
5. அருட்பணி. பீட்டர் ஜான்பால்
6. அருட்பணி. ராஜேஷ், SSS. (கிளைப்பங்கு)
7. அருட்பணி. ரூபன்
8. அருட்பணி. ஆரோக்கியசாமி, SSS.

1. அருட்சகோதரி. கிளாடிஸ், FHMF.
2. மறைதிரு அருட்சகோதரி. டாரத் மேரி FHMF

வரலாறு :

மதியம்பட்டி , காகாவேரி -யின் துணைப் பங்காக இருந்து செயல்பட்டு வந்தது.

1882−ல் அருட்தந்தை பிரிக்கோ அடிகளார் புனித மரிய மதலேனாள் பெயரால் மதியம்பட்டியில் ஆலயம் ஒன்று எழுப்பினாா். இது முதல் தனிப் பங்காக செயல்பட்டு வந்தது.

பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட, புனித மரிய மதலேனாள் வெண்கல சுருபம் ஆலயத்தின் மேற்கூரையில் வைக்கப்பட்டுள்ளது.

இத்திருத்தல ஆலயமானது நூற்றாண்டுகளைக் கடந்து இறை ஆசீரை பெற்று தரும் புண்ணிய இடமாக விளங்குகின்றது.

இவ்வாலயத்தை கட்டி எழுப்பிய அருட்தந்தை பிரிக்கோ அடிகளாா் 12.11.1929−ல் இறந்தார். அவரது உடல் ஆலயத்தின் மேற்குப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அருட்பணி. பிரிக்கோ அடிகளால் மறைவுக்குப் பிறகு, அருட்பணி. ஆசீர்வாதம் பங்குத்தந்தையாக பணியாற்றினார்

அருட்பணி. ஆசீர்வாதம் அடிகளார் இவ்வாலயம் திருத்தலமாக உயர்த்தப்பட பாடுப்பட்டார்.

அருட்பணி. ஆசீர்வாதம் அவர்கள் 1953 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். அவருடைய கல்லறையானது ஆலயத்தின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ளது

அருட்பணி. செல்வரத்தினம்1953 −1965 ஆம் ஆண்டு வரை திருத்தல பங்குத்தந்தையாக பணியாற்றினார். இவர் காலத்தில் சத்திரங்கள் கட்டப்பட்டு பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.

அருட்பணி. பீட்டர் கரித்ரா 1965−1975 ஆம் ஆண்டு வரை பங்குத்தந்தையாக பணியாற்றினார். இவர் காலத்தில் திருப்பலி லத்தீன் மொழியில் நிறைவேற்றப்பட்டது. மறைக்கல்வி லத்தீனில் எடுக்கப்பட்டது.

அருட்பணி. ஆரோக்கியசாமி 1975 -1980 ஆம் ஆண்டு வரை பங்குத்தந்தையாக பணியாற்றினார். இவர் காலத்தில் ஆலயத்தின் சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டது.

அருட்பணி. தாமஸ் கீரான் ஜீரா 1980−1985 ஆம் ஆண்டு வரை பங்குத்தந்தையாக பணியாற்றினார். இவர் மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வாழ்க்கை தரத்தை உயர்த்தினார்.

இவர் காலத்தில் இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது. வீடு மராமத்து பணிகளுக்கு தேவையான பொருட்களும், கோதுமை, பால் பவுடர் ஆகியவற்றை கொடுத்து உதவினார்.

அருட்பணி. A.X. இருதயம் 1985−1990 ஆம் ஆண்டு வரை பங்குத்தந்தையாக பணியாற்றினார்.

இவர் காலத்தில் கருமனூர் பகுதியில் சிற்றாலயம் அமைக்கப்பட்டு நற்செய்தி அறிவிக்கப்பட்டது.

அருட்பணி .N.S. இருதயநாதன் 1990−1991 ஆம் ஆண்டு வரை பங்குத்தந்தையாக பணியாற்றினார்

அருட்பணி. D.M. சவரிமுத்து 1991−1994ஆம் ஆண்டு வரை பங்குத்தந்தையாக பணியாற்றினார்.

அருட்பணி. தியோடர் செல்வராஜ் 1994−2001ஆம் ஆண்டு வரை பங்குத்தந்தையாக பணியாற்றினார்.

இவர் காலத்தில் திருப்பயணிகள் தங்குவதற்கான மண்டபம் கட்டப்பட்டது. பங்குத்தந்தை அறை கட்டப்பட்டது. ஆலயத்தின் மேற்கூரை பராமத்து பணிகளை சிறப்பாக செய்தார்.

அருட்பணி. அந்தோணி மரிய ஜோசப் 2001-2005 ஆம் ஆண்டு வரை பங்குத்தந்தையாக பணியாற்றினார். பல்வேறு ஜெபக்கூட்டங்களை நடத்தி மக்களுக்கு இறைச்செய்தியை அறிவித்தார். மேலும் பங்குத்தலத்தில் முதியோர் இல்லம் அமைய அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.

அருட்பணி. செல்வம் 2006−2010 ஆம் ஆண்டு வரை பங்குத்தந்தையாக பணியாற்றினார்.

இவரது பணிக் காலத்தில் திருத்தல ஆலய உட்புறம் மற்றும் வெளிப்புறம் மறுசீரமைப்பு பணிகளைச் செய்தார் . திருத்தல ஆலயமானது புத்துயிர் பெற்றது.

கிளைப்பங்கு மல்லசமுத்திரத்தில் ஒரு சிற்றாலயத்தை உருவாக்கினார்.

அருட்பணி. எட்வர்ட் ராஜன் 2010−2011 ஆம்ஆண்டு வரை பங்குத்தந்தையாக பணியாற்றினார்.

அருட்பணி. ஜான் போஸ்கோ பவுல் 2011−2016 ஆம் ஆண்டு வரை பங்குத்தந்தையாக பணியாற்றினார். இவரது பணிக் காலத்தில் ஆலய சத்திரங்கள் புதுப்பிக்கப்பட்டது . இவரது முயற்சியால் புனித மரிய மதலேனாள் அரங்கம் கல் தளம் போடப்பட்டது.

அருட்பணி. லூர்துசாமி அவர்கள் 2016 -ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை: திருத்தல பங்குத்தந்தையாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

திருத்தல சீரமைப்பு பணிகள் : இவரது முயற்சியால் புதிய கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

புனித மரிய மதலேனாள் அரங்க கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பயணிகளுக்கு தேவையான கழிப்பறைகள், குழியல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மலைமாதா சிற்றாலயம் அமைக்க அரசாங்க ஒப்புதல் பெறப்பட்டு, திருப்பலி நிறைவேற்ற வழி வகை செய்யப் பட்டுள்ளது.

கிளைப்பங்கான செண்பகமாதேவியில் உள்ள சிற்றாலயம் புதுப்பிக்கப்பட்டது.

ஆலயத்தின் சிறப்பமசங்கள் :

இவ்வாலயம் 1950 ஆம் ஆண்டு அன்றய ஆயர் மேதகு புரூனியர் அவர்களால் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது.

ஆலயம் எழுப்பிய காலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான இறை மக்கள் இத்திருத்தலத்தை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றார்கள்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டியும், பேய் பிடித்தவர்கள், நோய்யுற்றோர், என பல்வேறு வேண்டுதல்களுடன் பிற சமய சகோதரர்கள் இத்திருத்தலம் நாடி வருகின்றனர். புனிதையின் வல்லமையான பரிந்துரையால் நலன் பல பெற்றுச் செல்கின்றனா்.

வாரம்தோரறும் ஞாயிறு திருப்பலிக்கு பிறகு நோயுற்றோர், பேய் பிடித்தோருக்காக சிறப்பு ஆசிர் வழங்கப்படுகிறது.

ஆலயத்தின் வலப்புறம் உள்ள ஆலமரத்து அந்தோணியார், ஆலமரத்து ஆரோக்கிய மாதா வழியாக தங்கள் பிரார்த்னைகளை வைத்து பல நலன்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

திருத்தலமானது காலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை திருப்பயணிகளுக்காக திறந்திருக்கும்.

திருத்தலத்தில் மந்திரிக்கப்பட்ட தீர்த்தம், எண்ணைய், மெழுகுவர்த்தி விற்பனை செய்யப்படும்.

திருத்தலத்திற்கு வருவோருக்கு தேவையான இருப்பிட வசதிகள், கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

ஜெப உதவிகளுக்கு பங்குதந்தையின் தொடர்பு எண் : 9443030334

திருத்தலம் வாருங்கள்.. புனித மரிய மதலேனாள் வழியாக இறைவனின் ஆசீர் பெற்றுச் செல்லுங்கள்...

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. லூர்து சாமி அவர்கள்.