தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம்
இடம்: பொத்தைசுத்தி, பத்மநேரி அஞ்சல், 627502
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: வடக்கன்குளம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித ஜெபமாலை அன்னை ஆலயம், வடக்கு மீனவன்குளம்
பங்குத்தந்தை அருட்பணி. அருள்மணி
குடும்பங்கள்: 25
ஞாயிறு திருப்பலி காலை 08:15 மணி
திருவிழா: மே மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்
வழித்தடம்: களக்காடு திருநெல்வேலி வழித்தடத்தில் பொத்தைசுத்தி அமைந்துள்ளது.
Location map: St. Michael The Archangel's Church, Pothaisuthi
https://maps.app.goo.gl/mgBVF9CWsoQ2dNtG8
வரலாறு:
பொத்தைசுத்தியைச் சேர்ந்த திரு. மைக்கேல் நாடார் (த/பெ திரு. வன்னியர் நாடார்) அவர்கள் தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலத்திற்கு அடிக்கடி வருகை தந்து, இறைவனைப் வழிபட்டு வந்ததன் பயனாக கத்தோலிக்க கிறிஸ்தவராக மாறினார். தென்காசி தூய மிக்கேல் அதிதூதரின் மீது அவருக்கு இருந்த பக்தி காரணமாக, அவர் பொத்தைசுத்தியில் தூய மிக்கேல் அதிதூதர் பெயரில் ஒரு சிறிய குருசடிசையை உருவாக்கினார்.
நாளடைவில் இந்த குடிசடியில் வந்து ஜெபிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இவர்கள் அணைக்கரையைச் சேர்ந்த அருட்பணியாளர் ஒருவரால் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆனார்கள். ஒரு குருவானவர் பொத்தைசுத்தியில் மறைப்பணியாற்றி விட்டு அணைக்கரைக்குத் திரும்பும் வழியில் இறந்தார். அவரது கல்லறை மங்கம்மாள் சாலையின் பக்கத்தில் உள்ளது.
1930 களில், கத்தோலிக்க விசுவாசிகளின் எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பு காரணமாக, திரு. மைக்கேல் நாடார் தற்போதைய வளாகத்தில் ஒரு ஓடு வேய்ந்த தேவாலயத்தை கட்டினார். அதே வளாகத்தில் ஒரு சிறிய தொடக்கப்பள்ளியை டைல்ஸ் கட்டிடத்தில் தொடங்கினார்.
பொத்தைசுத்தி தொடக்கத்தில் அணைக்கரை பங்கின் கீழ் செயல்பட்டு வந்தது. பின்னர் நாங்குநேரி பங்கின் கீழும் தற்போது வடக்கு மீனவன்குளம் தேர்வுநிலை பங்கின் கீழும் செயல்பட்டு வருகிறது.
1940 ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளிக்கு நிரந்தர அங்கீகாரம் கிடைத்தது. 1974 ஆம் ஆண்டில், நாங்குநேரி பங்குத்தந்தை அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் பாண்டியன் அவர்களால் தொடக்கப்பள்ளி சீரமைக்கப்பட்டு, மேதகு ஆயர் அம்புரோஸ் மதலைமுத்து அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு ஆலய முன்மண்டபம் கட்டப்பட்டு, ஆலயத்தின் முன்புறம் தூய மிக்கேல் அதிதூதர் சுரூபமும் நிறுவப்பட்டது. ஆலய ஓடுகள் அவ்வப்போது பழுது பார்க்கப்பட்டு, ஆலயத்தையும் புனரமைப்பு செய்து வந்துள்ளனர்.
தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. அருள்மணி அவர்களின் வழிகாட்டலில் ஆன்மீகப் பாதையில் பயணித்து வருகிறது பொத்தைசுத்தி இறைசமூகம்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. அருள்மணி அவர்கள்.