325 விண்ணேற்பு அன்னை ஆலயம், தர்காஸ்


விண்ணேற்பு அன்னை ஆலயம்

இடம் : தர்காஸ் , சென்னை -44.

மாவட்டம் : காஞ்சிபுரம்
மறை மாவட்டம் : செங்கல்பட்டு

பங்குத்தந்தை : அருட்பணி டாமியன் அருளானந்த்

நிலை : பங்குத்தளம்

கிளைகள் :
1. கிறிஸ்து அரசர் ஆலயம், இராஜகோபால்கண்டிகை
2. புனித அந்தோணியார் ஆலயம், சோமங்கலம்

குடும்பங்கள் : 464
அன்பியங்கள் : 24

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு

திங்கள், புதன், வியாழன் திருப்பலி : காலை 06.30 மணிக்கு

வெள்ளி, சனி திருப்பலி : மாலை 06.30 மணிக்கு

செவ்வாய் : அந்தையா மலையில் மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : உயிர்ப்பு பெருவிழா முடிந்து 4-ஆம் வார வியாழக்கிழமை.

மண்ணின் மைந்தர்கள் :
1.Arch Bishop. அருளப்பா (முன்னாள் சென்னை-மயிலை பேராயர்)
2.Fr. S.A பாலசாமி
3.Fr.J.சூசைராஜ்
4. Fr A. அருளப்பா

அருட்சகோதரிகள் :
1.Sr.ஜெசிந்தா (late)
2.Sr.ஜார்ஜியா
3.Sr.அன்டொனிடா
4.Sr.ஆரோக்கிய மேரி
5.Sr.மேரி சில்வியா
6.Sr.கமிலா
7.Sr.அந்தோனியம்மா
8.Sr.அமலோற்பவம்
9.Sr.அந்தோனியம்மாள்
10.Sr.தீபா

வழித்தடம் :
தாம்பரத்தில் இருந்து பேருந்துகள் : M18H, M55B, M18S.

வரலாறு :

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து 25 கி.மீ தூரத்திலும், தாம்பரத்திற்கு மேற்கே 6 கி.மீ தொலைவில், குன்றுகள் அரணாய் காத்திட அழகுற அமைந்துள்ள கிராமம் தான் தர்காஸ். அரசினரால் இந்த கிராமம் தானமாக கொடுக்கப்பட்டதால் தர்காஸ் என்று பெயர் பெற்றது.

இங்கு முதன் முதலில் கீற்று கூரையால் சிறு ஆலயம் கட்டப்பட்டது. துவக்கத்தில் பல்லாவரம் பங்கின் கிளைப் பங்காக இருந்தது.

1894 -ல் அருட்தந்தை பாத்ரே ஜோவோ பேப்திஸ்ஸியா அவர்களால் ஒரு சிறு ஆலயம் கட்டப்பட்டு புனித விண்ணேற்பு அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1908-ஆம் ஆண்டு அருட்பணி பிரான்சிஸ் ஜோசப் அவர்களின் தலைமையில் அமலோற்பவ மாதா துறவற சகோதர சபையினர் இங்கு பணியாற்றினர். 1917-ஆம் ஆண்டு பல்லாவரம் பங்குத்தந்தை அருட்தந்தை இரெய் மோஞ்தோ கோர்டியரோ பொறுப்பேற்று இப்பங்கை வழிநடத்தினார்.

1921 முதல் 1925 வரை அருட்பணி ஜான் F. பின்டோ அவர்களும், 1925 முதல் 1938 வரை அருட்பணி அந்தோணி மஸ்கரினாஸ் அவர்களும், 1938 முதல் அருட்தந்தை நசரேயின் ரோட்ரிக்ஸ் அவர்களும் தர்காஸ் மக்களின் ஆன்மீக காரியங்களை சிறப்பாக கவனித்து வந்தனர்.

1946 -ஆம் ஆண்டு அருட்பணி சாலகுண்டல அந்தையா தன்னுடைய முதல் குருத்துவ பணியை தர்காஸ் கிராமத்தில் தொடங்கினார். இவரது பணிக்காலம் தர்காஸ் பங்கின் பொற்காலம் ஆகும்.

அருட்பணி அந்தையா அவர்களின் அயராத விடாமுயற்சியால் புனித விண்ணேற்பு அன்னைக்கு சுண்ணாம்பு கலவையில் அழகிய ஆலயம் கட்டப்பட்டது. இவரது சிறப்புமிகு பணிகளைக் கண்ட சென்னை -மயிலை பேராயர் டாக்டர் லூயிஸ் மத்தியாஸ் ஆண்டகை அவர்கள் 25-03-1955 அன்று தர்காஸ் ஆலயத்தை தனிப்பங்காக உயர்த்தி,
அருட்பணி அந்தையா அவர்களையே முதல் பங்குத்தந்தையாக நியமித்தார்.

அருட்பணி அந்தையா அவர்கள் சுமார் இருபது ஆண்டுகாலமாக பணிபுரிந்து, இப்பங்கின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உதவி புரிந்தார்கள்.

அருட்பணி அந்தையா அவர்கள் பணிக்காலத்தில் இங்குள்ள மலைக்குன்றில் பிற்பகல் 03.00 மணிக்கு திருப்பலி நடத்துவார். எப்போதும் ஆலயத்தை சுற்றிலும் மலைக்குன்றுகளை சுற்றிலும் வலம் வந்து கொண்டே மக்களுக்காக பணிபுரிந்தார்.

இவர்மீது கொண்ட பற்றுதலின் காரணமாக தர்காஸ் பங்கு மக்கள், இந்த மலைக்கு அந்தையாசாமி மலை எனப் பெயரிட்டு, இங்கு புனித அந்தோணியார் ஆலயம் ஒன்றைகட்டி முடித்து, வாரத்தில் செவ்வாய்கிழமை திருப்பலியும் நிறைவேற்றப் படுகிறது.

தர்காஸ் பங்கு சிறியதாக காணப்பட்டாலும் தூய விண்ணேற்பு அன்னையின் அருளால் பல்வேறு சிறப்புகளையும் அதிசயங்களையும் கொண்டுள்ளது. சென்னை -மயிலை முன்னாள் பேராயர் டாக்டர் அருளப்பா ஆண்டகை அவர்கள் இம்மண்ணின் மைந்தர் என்பது தனிச்சிறப்பு. மட்டுமல்லாது பல அருட்பணியாளர்களையும், அருட்சகோதரிகளையும், பொதுநிலை திருப்பணியாளர்களையும் திருச்சபைக்கு தந்துள்ளது தர்காஸ் கிராமம்.

1.அருட்பணி அந்தையா (1955-1957)
2. (1957-1958) Fr P. J குரியன்,
3. (1958-1960) Fr லியுட்டா கூட்டோ,
4. (1960-1968) Fr அந்தையா
5. (1968-1972) Fr B. R இராஜப்பா,
6. (1972-1978) Fr சிரியாக் இல்லி மூட்டில்,
7. (1978-1984) Fr P. ஜோசப்,
8. (1984-1991) Fr K. V நிலப்பனார்,
9. (1991-1996) Fr பிரான்சிஸ் மைக்கேல்
10. (1996-1997) Fr ஜான் போஸ்கோ
11. (1997-2001) Fr மைக்கேல் குரூஸ் SFX
12. (2001-2005) Fr சில்வெஸ்டர் SFX
13. (2005- 2008) Fr டென்னிஸ் லோபோ SFX
14. (2008-2013) Fr M. அதிரூபன்
15. (2013-2018) Fr A. மிக்கேல் ராஜ்
16. (2018 -முதல்...) Fr டாமியன் அருளானந்த்.

ஆகியோர் இப்பங்கை சிறப்பாக வழிநடத்தி, மக்களை இறை வாழ்வில் மேலோங்கச் செய்தனர்.

தூய விண்ணேற்பு அன்னையின் ஆசீராலும், அருட்தந்தை பிரான்சிஸ் மைக்கேல் அடிகளாரின் பெரும் முயற்சியாலும், பங்கு மக்கள் மற்றும் பிற மக்களின் உதவிகளாலும் ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு, ஆலய நூற்றாண்டு விழா 1994 -ஆம் ஆண்டு மே மாதம் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

தர்காஸ் தனிப்பங்காக ஆனதன் பொன்விழா 2005-ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாடப் பட்டது.

பங்கில் பல்வேறு சபைகள் இயக்கங்களும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

பாத்திமா அன்னை அருட்சகோதரிகளால் நடத்தப்படும் புனித சூசையப்பர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், புதிதாக கட்டப்படும் வயதுமுதிர்ந்த அருட்சகோதரிகள் காபாபகம், ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகள், குழந்தைகள் காப்பகம், மருத்துவமனை, பிலார் சபையின் துறவற மடம், வின்சென்சியன் நவதுறவியர் இல்லம், DMI அருட்சகோதரிகள் இல்லம் மற்றும் பள்ளிக்கூடம் என பல்வேறு இல்லங்களோடு புனித விண்ணேற்பு அன்னையின் அருளால் பெரும்பேறு பெற்று சிறப்புற விளங்குகிறது.

பிலார் சபை குருக்களான அருட்தந்தையர் மைக்கேல் குரூஸ், சில்வெஸ்டர், டென்னிஸ் லோபோ ஆகியோர், பங்கு மக்களுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு, இவர்களது விடாமுயற்சியால் காண்போரை கவரும் அழகிய ஆலயம், அதனுள்ளே அழகிய சலவைக்கல்பீடம், வண்ண விளக்குகளின் ஒளி அலங்காரம், வானுயர்ந்த கொடிமரம், விண்ணரசி கலையரங்கம், அழகிய ஆலய மணிக்கூண்டு, குன்றின் மேல் புனித அந்தோணியார் ஆலயம் என சிறப்பாக அமைக்கப்பட்டு சிறந்து விளங்குகிறது தர்காஸ் தலத்திருச்சபை.

2009-10 காலகட்டத்தில் அழகிய மணிக்கூண்டு கட்டப்பட்டு, ஆலயத்தின் அழகிற்கு மேலும் மெருகூட்டப் பட்டது.

2019- இல் அருட்பணி டேமியன் அருளானந்த் பணிக்காலத்தில் புதிய கொடிமரம் வைக்கப்பட்டதுடன் பங்கின் நூறடுத்த வெள்ளி விழா கொண்டாட்டங்கள் துவக்கப்பட்டது.

வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நூறடுத்த வெள்ளிவிழா (125-வது ஆண்டு) மிகச்சிறந்த முறையில் கொண்டாட இருக்கின்றனர். இதற்காக பங்குத்தந்தை அவர்கள், பங்கு மக்களுடன் சிறப்பாக திட்டமிட்டு பல்வேறு இறை விருப்பக் காரியங்களை செய்ய இருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.