574 வேளாங்கண்ணி மாதா ஆலயம், கொங்கணாபுரம்


அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம்

இடம் : பெரியானூர், எருமப்பட்டி அஞ்சல், கொங்கணாபுரம், எடப்பாடி தாலுக்கா, 637102

மாவட்டம் : சேலம்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : மேட்டூர்

நிலை : கிளைப்பங்கு

பங்கு : தூய செல்வநாயகி அன்னை ஆலயம், எடப்பாடி

பங்குத்தந்தை : அருட்பணி. D. பிரான்சிஸ் ஆசைத்தம்பி

குடும்பங்கள் : 15

அன்பியம் : 1

ஞாயிறு திருப்பலி காலை 06.00 மணிக்கு. 

திருவிழா : செப்டம்பர் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது சனிக்கிழமை.

வழித்தடம் : எடப்பாடியிலிருந்து எடப்பாடி -சேலம் நெடுஞ்சாலையில் 9கி.மீ தொலைவில் கொங்கணாபுரம் உள்ளது.

அங்கிருந்து சங்ககிரி செல்லும் சாலையில் 1கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location map : Our Lady of Vailankanni church SH 86, Erumaipatti, Tamil Nadu 637102 https://g.co/kgs/EM8rJz 

வரலாறு:

கொங்கணாபுரம் புனித வேளாங்கண்ணி மாதா ஆலயமானது, 1992 ம் ஆண்டு, எடப்பாடி பங்குத்தந்தை அருள்பணி. P. சேவியர் அவர்களின் முயற்சியால், கொங்கணாபுரம் பெரியனூரில் வசிக்கும் திரு. ராயப்பன், திரு. அற்புதம், திரு. சி. செல்வநாயகம் மற்றும் திரு. கபிரியேல் ஆகியோர் நன்கொடையாக அளித்த நிலத்தில் கட்டப்பட்டு, 09.06.1994 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 

அருள்பணி. ஜோசப் லாசர் பணிக்காலத்தில் ஆலயத்திற்கு மதிற்சுவர் கட்டப்பட்டது.

கொங்கணாபுரம் ஆலய வெள்ளிவிழா நினைவாக தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. பிரான்சிஸ் ஆசைத்தம்பி அவர்களின் பணிக்காலத்தில், மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயத்திற்கு வண்ணம் பூசப்பட்டு, சேலம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த, 2019 -ம் ஆண்டு தங்கள் குருத்துவ வெள்ளிவிழாவைக் கொண்டாடிய மூன்று அருள்தந்தையர்களால் 08.09.2019 அன்று ஆலய வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் அருள்சகோதரர் மற்றும் ஆலய கோவில்பிள்ளை. 

தகவல் சேகரிப்பு : SPB காலனி பங்கின் பீடச் சிறுவன்.