88 ஜெபமாலை அன்னை ஆலயம், பிலாவிளை


தூய ஜெபமாலை அன்னை ஆலயம்

இடம் : பிலாவிளை (அண்டுகோடு)

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி. சுஜின்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய லூர்து அன்னை ஆலயம், லூர்துகிரி.

குடும்பங்கள் : 72
அன்பியங்கள்: 3

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு.

திருவிழா : அக்டோபர் மாதத்தில்.

அண்டுகோடு வரலாறு :

கி.பி 1954 ஆம் ஆண்டு கோட்டார் மறை மாவட்ட திரித்துவபுரம் வட்டத்தின் கீழ் பங்குத்தந்தை மேரி எப்ரேம் கோமஸ் தலைமையில், ஈஞ்சகோடு துறவற சபை சகோதரர் ஆன்றனி உதவியுடன் இப்பகுதியில் நிலம் வாங்கப்பட்டு, ஓலைகுடில் ஆலயம் கட்டப்பட்டது. 

கிறிஸ்து பிறப்பு நாளில் 120 நபர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கப்பட்டு, முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

1956 ஆம் ஆண்டு ஓட்டுக்கூரை ஆலயம் கட்டப்பட்டு மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

1967 ஆம் ஆண்டில் திரித்துவபுரம் பங்கிலிருந்து மேல்புறம் பங்குடன் இணைக்கப் பட்டது.

1970 ஆம் ஆண்டு முதல் லூர்துகிரி பங்குடன் இணைக்கப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

1993 ஆம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.