467 புனித செபஸ்தியார் ஆலயம், புதுத்தெரு, மோகனூர்


புனித செபஸ்தியார் ஆலயம்

இடம் : புதுத்தெரு, மோகனூர், மோகனூர் அஞ்சல், 637015

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித செசிலி ஆலயம், RC பேட்டப்பாளையம்.

பங்குத்தந்தை : அருட்பணி. பிரகாஷா

குடும்பங்கள் : 40

சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : மே மாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமை.

வழித்தடம் : நாமக்கல்லில் இருந்து 18கி.மீ தூரத்தில் மோகனூர் உள்ளது.

Location map :

வரலாறு :

மோகனூர் பகுதியில் புதுத்தெருவில் உள்ள கிறிஸ்துவ மக்கள் புனித செபஸ்தியாரின் மீது மிகுந்த பக்தி கொண்டமையால், இம் மக்களின் ஆன்மீகத் தேவைக்காக, 1998 ஆம் ஆண்டில் RC பேட்டப்பாளையத்தின் பங்குத்தந்தை அருட்பணி. செபஸ்தியான் அடிகளார் அவர்கள் புனித செபஸ்தியார் குருசடி கட்டினார்.

மேலும், இவ்வூர் மக்களின் வேண்டுதலுக்கிணங்க ஆலயம் கட்டுவதற்காக நிலமானது, அருட்பணி. விக்டர் சுந்தர்ராஜ் அவர்களின் பணிக்காலத்தில் வாங்கப்பட்டது.

பின்னர், 2015-2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பணியாற்றிய அருட்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் காலத்தில், ஆலயம் கட்டுவதற்காக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த வகையில் அருட்தந்தை அவர்கள் சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொண்டு, வெற்றி கண்டு, ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய அருட்பணி. பிரகாஷா அவர்கள் ஆலயத்தை கட்டி எழுப்பி, 10.10.2017 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் ஆண்டகை அவர்களால் அர்ச்சித்து புனிதப்படுத்தப் பட்டது.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிரகாஷா மற்றும் கோயில்பிள்ளை.