489 திருஇருதய ஆண்டவர் ஆலயம், மணலார், மேகமலை

   

திருஇருதய ஆண்டவர் ஆலயம்

இடம் : மணலார், மேகமலை

மாவட்டம் : தேனி
மறைமாவட்டம் : மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம் : தேனி

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. புனித மேகமலை மாதா திருத்தலம், மேகமலை
2. புனித பாத்திமா மாதா ஆலயம், ஹைவேவிஸ்
3. புனித அந்தோணியார் ஆலயம், அப்பர்மணலார்
4. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், வெண்ணியார்
5. இரவங்கலார் (இல்லத்தில் திருப்பலி)
6. மகாராஜாமெட்டு (இல்லத்தில் திருப்பலி)

குருசடிகள் :
1. புனித வழித்துணை மாதா குருசடி
2. புனித வனத்து சின்னப்பர் குருசடி.

பங்குத்தந்தை : அருட்பணி. பிலிப் ஆரோக்கியராஜ், SMM (மாண்ட்போர்ட் குருக்கள் சபை)

குடும்பங்கள் : 75

ஞாயிறு மாலை 04.00 மணிக்கு திருப்பலி.

செவ்வாய், வெள்ளி மாலை 07.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : மே மாதம் 12 ஆம் தேதியை மையமாகக் கொண்ட மூன்று நாட்கள்.

வழித்தடம் : தேனி -சின்னமனூர் -மேகமலை -மணலார்.

மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்சகோதரி. லில்லி தெரஸ், CIC
2. அருட்சகோதரி. லீமா ரோஸ், Holy Spirit congregation.


வரலாறு:

தேனி மாவட்டத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், மேகங்கள் சங்கமிக்க..! தேனீக்கள் ரீங்காரம் இசைக்க..! பசுமையான தேயிலைத் தோட்டங்களும், அதைச்சுற்றி அழகுமிகு வண்ண வனச்சோலைகளும்..! இதுதான் எங்கள் உலகம் என்று உலவி வரும் இறைப்படைப்பின் அருமையான வன உயிரினங்களும்..! அழகிய நீர்த் தேக்கங்களும் நிறைந்த மேகமலையில், தேயிலை பறித்து தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி, வாழ பல இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து, ஏழு கிராமங்களாக அமைத்து நான்கு தலைமுறைக்கு வசித்தும் வருகிறார்கள்.

இந்த மக்களை ஆன்மீகத்தில் வழி நடத்திச் செல்ல இராயப்பன் பட்டியின் கிளைப் பங்காக 1960 -ல் இணைக்கப்பட்ட பிறகு, 1969 -ல் அப்போது இராயப்பன் பட்டியின் பங்குத்தந்தையாக இருந்த இயேசு சபையைச் சார்ந்த அருட்பணி. பொன்னாட் SJ அவர்களால் மேகமலையின் மையமாக விளங்கும் "மணலார்" பகுதியில் திருஇருதய ஆண்டவர் பெயரில் புதியதொரு ஆலயத்தை எழுப்பினார்.

பிறகு 2004 -ஆம் ஆண்டில் இம்மலைப் பகுதியானது சின்னமனூர் பங்கின் கிளைப்பங்காக இருந்த நிலையில், 2012 -ல் மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ ஆண்டகை (late) அவர்கள் பங்காக உயர்த்தி, மான்போர்ட் குருக்கள் சபையைச் சார்ந்த அருட்பணி. அ. பிலிப் ஆரோக்கியராஜ் SMM அவர்களை பங்குப் பணியாளராக அமர்த்தினார்.

பிறகு பாழடைந்துப் போன இவ்வாலயமானது கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்களின் உதவிக்கரம் கொண்டு புதுப்பிக்கப்பட்டு, 05.06.2019 அன்று பேராயர் அவர்களால் அர்ச்சித்து புனிதப்படுத்தப் பட்டது.

மேகமலையானது, இராயப்பன் பட்டியின் கிளைப் பங்காக இருந்த போது இறைப் பணிக்காக பங்குத்தந்தையரோடு திருச்சி அன்னம்மாள் அருட்சகோதரிகளும் மற்றும் திரு இருதய அருட்சகோதரர்களும் சென்று இறைப்பணி செய்திருக்கிறார்கள்.

பின்னர் சின்னமனூர் பங்கோடு இணைந்தபோது பிரான்சிஸ்கன் அருட்சகோதரிகளும் அதன் பிறகு சேவா மிஷனரி அருட்சகோதர்களும் இறைப்பணியாற்றி இருக்கிறார்கள்.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. பிலிப் ஆரோக்கியராஜ் SMM அவர்கள் மலையில் மக்களோடு தங்கி இறைபணி செய்யச் செய்ய, சிதறிப்போன இறைமக்கள் மீண்டும் திரும்பி வந்ததால், வெறும் முப்பதாக இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது எண்பதாக உயர்ந்துள்ளது. மேலும் அருட்தந்தையவர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக மேகமலை பங்கில் இறைப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிலிப் ஆரோக்கியராஜ், SMM அவர்கள்.