588 ஆரோக்கிய அன்னை ஆலயம், அணியார்

   

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 

இடம் : அணியார், வேலகவுண்டன்பட்டி அஞ்சல், நாமக்கல் தாலுகா, 637212

மாவட்டம் : நாமக்கல் 

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : நாமக்கல்

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : தூய பவுல் ஆலயம், இளநகர்

பங்குத்தந்தை : அருள்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் 

குடும்பங்கள் : 27

ஞாயிறு திருப்பலி : மாலை 06.30 மணி

திருவிழா : செப்டம்பர் மாதம் 8 ம் தேதி.

வழித்தடம் : இளநகரிலிருந்து நாமக்கல் செல்லும் வழித்தடத்தில் 4கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 

வரலாறு :

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அழகிய சிறிய கிராமம் அணியார். 

இளநகர் பங்கின் ஒருபகுதியாக செயல்பட்டு வந்த அணியார் கிராமத்தில்,

அருள்பணி. குருவிலா தாமஸ் (1977-1984) பணிக்காலத்தில் கைத்தறி நெசவுக்கூடம் கட்டப்பட்டு ஏழை மக்களின் நலனுக்காக செயல்பட்டு வந்தது. மேலும் உணவுத்திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வந்தது. 

கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை அணியார் பகுதியில் அதிகரிக்கவே, ஒரு சிறுஆலயம் கட்டப்பட்டு 28.04.1993 ல் அர்ச்சிக்கப் பட்டது. 

அருள்பணி. மாசிலாமணி (1998-2003) பணிக்காலத்தில் ஆலயம்  புதுப்பிக்கப்பட்டது.

தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் அவர்களால் ஆலயத்திற்கு வண்ணம் பூசப்பட்டு மெருகூட்டப்பட்டது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் அருள்சகோதரி மற்றும் ஆலய உறுப்பினர்.