380 புனித ஜார்ஜியார் ஆலயம், பிலாவிளை


புனித ஜார்ஜியார் ஆலயம்.

🌸இடம் : பிலாவிளை, அழகன்பாறை (P. O)

🍇மாவட்டம் : கன்னியாகுமரி
🍇மறை மாவட்டம் : குழித்துறை
🍇மறை வட்டம் : காரங்காடு

🌳நிலை : பங்குத்தளம்
🍀கிளைப்பங்கு : அற்புத குழந்தை இயேசு ஆலயம், வசந்தபுரம்

💐பங்குத்தந்தை : அருட்பணி சர்ஜின் ரூபஸ்

🌹குடும்பங்கள் : 220
🌹அன்பியங்கள் : 6

🔥ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு

🔥திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் திருப்பலி : காலை 06.00 மணிக்கு

🔥புதன் மாலை 06.00 மணிக்கு தூய ஜார்ஜியார் நவநாள், திருப்பலி.

🎉திருவிழா : மே மாதத்தில் பத்து நாட்கள்.

👉வழித்தடம் : திங்கள்நகர் - மணவாளக்குறிச்சி சாலையில், மாங்குழி - படர்நிலத்திற்கு இடைப்பட்ட பகுதியில் பிலாவிளை உள்ளது.

💎மண்ணின் மைந்தர்கள் :
💐1. Fr. கிறிஸ்டோபர் (USA)
💐2. Fr. சுரேஷ் (Brazil)

💐3. Sr நேவிஸ் மேரி.

👉Google Map : https://maps.app.goo.gl/kEfY9QuQq4YX3hZG7

வரலாறு :
**********
🌸சுமார் 79 ஆண்டுகளுக்கு முன்னர் பிலாவிளை ஊரை சேர்ந்த மக்கள் திருப்பலியில் பங்கேற்க, காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்திற்கு சென்று வந்தனர். ஆகவே இறை பற்றுதல் கொண்ட பிலாவிளையின் பெரியோர் இங்கு ஒரு குருசடி கட்ட ஆவல் கொண்டு, ஒரு குருசடியும் அதனுடன் இணைந்த ஒரு சாவடியும் கட்டப்பட்டு, புனித ஜார்ஜியார் -ஐ பாதுகாவலராகக் கொண்டு மக்கள் இறைவனிடம் ஜெபித்து வந்தனர்.

🦋புனிதரின் புதுமைகளால் மக்கள் கூட்டம் அதிகரிக்க குருசடியை ஆலயமாக கட்ட தீர்மானித்தனர். ஊர் பெரியவர்களின் முயற்சியால் அப்போதைய மாங்குழி பங்குத்தந்தை அருட்பணி சூசை மிக்கேல் அவர்கள் குருசடியில் திருப்பலி நிறைவேற்றி, ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். அப்போதைய மாங்குழி பங்குத்தந்தை அருட்பணி தனிஸ்லாஸ் அடிகளாரின் வழிகாட்டுதலில், பிலாவிளை மக்களின் உழைப்பாலும் நன்கொடைகளாலும் ஆலயம் கட்டப்பட்டு 1966 ம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டு, 30 குடும்பங்களுடன் மாங்குழி பங்கின் கிளையாக உயர்ந்தது.

💎பங்குத்தந்தையர்களும் பணிகளும் :

🏵மாங்குழி யின் கிளையாக இருந்த போது பங்குத்தந்தை அருட்பணி தனிஸ்லாஸ் பணிக்காலத்தில் 1966 ல் ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

🏵அருட்பணி லாரன்ஸ் பணிக்காலத்தில் ஆலய பின்புறத்தோடு இணைந்து பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது.

🏵அருட்பணி ஹிலாரி அடிகளார் பணிக்காலத்தில் ஒலிப்பெருக்கி வசதி செய்யப் பட்டது.

🏵அருட்பணி அகஸ்டின் அடிகளார் பணிக்காலத்தில் 1987 ல் ஆலய முன்மண்டபம் அமைக்கப் பட்டது. 1988 ல் பங்கு அருட்பணிப் பேரவை அமைக்கப் பட்டது.

🌺1990 ல் அருட்பணி அந்தோணிமுத்து பணிக்காலத்தில் ஆலய கோபுரமும், முன் பக்க மதிற்சுவரும் கட்டப்பட்டது.

🌺1999 ல் படர்நிலம் பங்கின் கிளைப்பங்காக பிலாவிளை மாற்றப் பட்டது.

🌺அருட்பணி ஆன்ட்ரூ பணிக்காலத்தில் 2001 ல் கலையரங்கம் கட்டப்பட்டது.

🌹அருட்பணி ஜான் பிரான்சிஸ் பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லம் தனியாக கட்டப்பட்டது.

🌹2005 ம் ஆண்டு மாதா குருசடி புதுப்பிக்கப் பட்டது.

🌹பின்னர் இரட்சகர் சபையை சேர்ந்த அருட்பணி சந்தியாகு அருட்பணி ஜேம்ஸ் குமார் ஆகியோர் ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தினார்கள்.

🌳04-05-2010 அன்று பிலாவிளை தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. வசந்தபுரம் அற்புத குழந்தை இயேசு ஆலயத்தை கிளைப்பங்காகக் கொண்டு, முதல் பங்குத்தந்தையாக இரட்சகர் சபையின் அருட்பணி ஃப்ராங்க் (2010-2015) அவர்கள் பொறுப்பேற்று பங்கை சிறப்பாக வழிநடத்தினார். இவரது பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்ட தீர்மானித்து, 21-05-2013 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப் பட்டது.

🍇பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் இப்புதிய ஆலயம் கட்டப்பட்டு 20-06-2016 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

🍇அருட்பணி சிறில் தனிஸ்லாஸ் (2015-2019) அவர்கள் பொறுப்பேற்று ஆன்மீக வழியில் மக்களை ஒருங்கிணைத்து சிறப்பாக வழி நடத்தினார்கள்.

🌸தற்போது 21-05-2019 முதல் பிலாவிளையின் மூன்றாவது பங்குத்தந்தையாக அருட்பணி சர்ஜின் ரூபஸ் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.

பங்கில்....
🌷பங்கு அருட்பணிப் பேரவை
🌷மறைக்கல்வி மன்றம்
🌷சிறுவழி இயக்கம்
🌷பாலர் சபை
🌷இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
🌷பெண்கள் பணிக்குழு
🌷கத்தோலிக்க சேவா சங்கம்
🌷கோல்பிங் இயக்கம்
🌷திருவழிபாட்டுக் குழு
🌷தணிக்கைக் குழு
🌷நிதிக்குழு
🌷அடித்தள முழு வளர்ச்சி சங்கம்
🌷அன்பிய ஒருங்கிணையம் -என அனைத்து பங்கேற்பு அமைப்புகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

💐மேலும் இவ்வாலய பஜனை சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் பங்கின் இளையோர், பெரியவர்கள் என அனைவரும் இணைந்து புனித ஜார்ஜியார் திருவுருவப் படத்தை கொண்டு இல்லங்கள் தோறும் கிறிஸ்தப் பாடல்களைப் பாடுவர். டிசம்பர் 25 ம் தேதியன்று பஜனை பட்டாபிஷேகமாக இனிதே நிறைவு பெறுகின்றது.

👉தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி சர்ஜின் ரூபஸ்.