193 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், சரல்


புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம்

இடம் : சரல்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்

நிலை : பங்குதளம்
கிளை : புனித ஆரோக்கியநாதர் ஆலயம், ஒற்றையால்குடி

பங்குத்தந்தை : அருட்பணி பெஸ்கி M இவாஞ்சலியன்

குடும்பங்கள் : 510
அன்பியங்கள் : 11

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

வியாழன் மாலை 06.00 மணிக்கு குழந்தை இயேசு நவநாள், திருப்பலி

திங்கள், செவ்வாய், புதன், சனி : காலை 06.00 மணிக்கு திருப்பலி

திருவிழா : ஜூன் கடைசி வாரத்தில் புனிதர்கள் தினத்தை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

சரல் புனித பேதுரு புவுல் ஆலய வரலாறு :

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய சரல் பகுதியிலிருந்து அரை கி.மீ கிழக்காக இருந்த இடம் தான் ஆதிச்சரலூர். (பொட்டைக்குளம் பகுதி)

நல்ல நீர், நில வளமும் இயற்கை எழிலும் கொண்ட இப்பகுதியில் அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர். நாகப்பாம்புகளின் கடியால் பல இறப்புகள் ஏற்பட்டன. எஞ்சியுள்ள அந்தணர்கள் வேறிடம் நோக்கி சென்றனர். பின்னர் நாயர்கள் குடியேறினர். இச்சமயம் வாந்திபேதி,வைசூரி போன்ற தொற்று நோய்கள் இவர்களைத் தாக்க இம்மக்களும் வேறிடம் தேடிச் சென்றனர்.

பின்னர் பல இடங்களில் வாழ்ந்து வந்த நாடார் இன மக்கள் தூய சவேரியாரின் நம்பிக்கை ஒளியில் இப் பகுதியில் வாழத் தொடங்கினர். நாகப்பாம்புகளின் தொல்லையோ, தொற்று நோய்களோ இல்லை.

விசுவாசத்தில் ஊன்றிய முன்னோர்கள் வடக்கன்குளம் சென்று திருமுழுக்குப் பெற்று வந்தார்கள்.

சரல் ஊரில் ஓர் ஆலயம் தேவை என்று சரல் மக்கள் உணர்ந்தனர். 1862 ம் ஆண்டு பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி எஸ்தோர் அவர்கள் சரல் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவரது முயற்சியால், மக்களது ஒத்துழைப்பால் 30 அடி நீளம் 15 அடி அகலத்தில் தூய இராயப்பர் சின்னப்பர் ஆலயத்தைக் கட்டி அர்ச்சித்தார்.

சரலில் அமைந்திருந்த ஆலயம் சிறியதாகவும் போதிய இடவசதி இல்லாமலும் இருந்ததால் 50 அடி நீளம் 20 அடி அகலம் என்ற அளவில் 1871 ல் அருட்பணி எஸ்தோர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, மக்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்பால் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி எஸ்தோர் அவர்களுக்குப் பின் இறுதியாக இருந்த அயல் நாட்டுக்குரு அருட்பணி எப்ரேம் அவர்கள் 1908 ல் இறைவனடி சேர்ந்தார். பின்னர் அருட்தந்தை அகஸ்டின் அவர்கள் மாடத்தட்டுவிளை பங்கு பொறுப்பேற்றபின் சரல் சிற்றாலயத்தில் 10 நாட்கள் திருவிழா முதன் முதலாக கொண்டாடி ஜூன் 29 ல் சிறப்பாக நிறைவடைந்தது.

பள்ளமான இடத்தில் அமைந்திருந்த சரல் சிற்றாலயத்தில் இரு பக்கங்களிலும் நீரூற்று எழும்பவே , கவலையடைந்த மக்கள் காரங்காடு பங்குத்தந்தை இஞ்ஞாசியார் அவர்களிடம் முறையிட 01-06-1931 அன்று 100 அடி நீளம் 45 அடி அகலமும் கொண்ட புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

1932 ல் காரங்காடு பங்கின் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி வற்கீஸ் அவர்கள் ஊர் ஊராக சென்று நிதி திரட்டி கட்டுமான பணிகள் வேகமாக நடக்கையில் பணி மாறுதல் பெற்றார்.

தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி D. C அந்தோணி அவர்கள் ஆலய கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து 06-06-1939 ல் குருகுல முதல்வர் வின்சென்ட் பெர்னாண்டஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

28-04-1940 ல் சரல் தனிப் பங்காக உயர்ந்தது. முதல் பங்குத்தந்தை யாக அருட்பணி ஜேக்கப் லோப்பஸ் அவர்கள் பொறுப்பேற்றார்கள். கிறிஸ்தவ வாழ்வு சமூகம் என்று அழைக்கப்படுகிற அமலோற்பவ மாதா சபையை பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. மறைக்கல்வி ஆரம்பிக்கப்பட்டது. பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது.

சரல் பங்கின் கிளைப் பங்காக சடையால்புதூரில் அமைந்திருக்கும் ஆலயம் இவரது பணிக்காலத்தில் ஆரம்பிக்கப் பட்டது.

1942 - ல் அருட்பணி பீட்டர் கிறிஸ்டியன். கன்னியர் இல்லம் கட்டுவதற்கான பொருளுதவி ஈட்டப்பட்டது.

1944 -ல் அருட்பணி அந்தோணி முத்து. அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று கிணறு ஒன்றை அழைத்தார்கள். கத்தோலிக்க சேவா சங்கம் ஆண்கள் தொகுதி ஆரம்பிக்கப் பட்டது. பங்கிலிருந்து S. M மரிய தாசன் அவர்கள் கார்மல் சபை குருமடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

1947 -ல் அருட்பணி அகஸ்டின் பெர்னாண்டஸ். மணவிளையில் தூய பனிமய மாதா ஆலயம் ஒன்றை அழைத்தார்கள். கூட்டுறவுச் சங்கம், வானொலி நிலையம் ஏற்படுத்தப் பட்டன.

1949-ல் அருட்பணி M. தனிஸ்லாஸ். ஆலயத்தின் உயர்ந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. ஒற்றையால்குடி தூய ஆரோக்கியநாதர் ஆலயம் கட்டப்பட்டது. மரியாயின் மாசற்ற கன்னியர் இல்லம் 1953- ல் ஏற்படுத்தினார்கள்.

1954- ல் அருட்பணி வர்கீஸ். மரியாயின் சேனை, நூல் நிலையம் ஏற்படுத்தினார்கள். தளவாய்புரத்தில் அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டது.

1957-ல் அருட்பணி ஸ்டீபன். மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. தாழையான்கோணத்தில் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது.

1961 -ல் அருட்பணி J அகஸ்டின் பெர்னாண்டோ மீண்டும் சரல் பங்குத்தந்தையானார். இரண்டு ஆண்டுகள் சிகிட்சைக்காக அமெரிக்கா சென்ற போது உதவிப் பங்குத்தந்தையர்கள் அருட்பணியாளர்கள் சார்லஸ் பொரோமியோ, மாசில்லாமணி, வெனான்சியுஸ், பீட்டர் ரெமிஜியூஸ், லியோன் தர்மராஜ் ஆகியோரால் சிறப்பாக வழி நடத்தப் பட்டது.

அம்மாண்டிவிளை ஊரில் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

1971 -ல் அருட்பணி உபால்டுராஜ். 1979 -ல் இளைஞர் இயக்கம் தொடங்கப் பட்டது. புனித வறுவேலார் நற்பணி மன்றம் துவக்கப் பட்டது. RC நடுநிலைப் பள்ளி புனித வளனார் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது.

1981-ல் அருட்பணி ஞானப்பிரகாசம்.

1986-ல் அருட்பணி A செல்வராஜ். 1987- ல் அருட்பணிப்பேரவை உருவாக்கப் பட்டது. குழந்தை இயேசு நவநாள் துவங்கப்பட்டது.

1988-ல் அருட்பணி C பெலிக்ஸ். பங்கின் பொன்விழா சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப் பட்டது.

1989- ல் அருட்பணி J.N சீசர். பொன்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

1992- ல் ஆன்றனி அல்காந்தர். அன்பிய ஒருங்கிணையம் ஏற்படுத்தினார்கள்.

1994-ல் அருட்பணி பெஞ்சமின் லடிஸ்லாஸ். சமூக கூடத்திற்கான அடிக்கல் போடப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப் பட்டது.

1999-ல் அருட்பணி டேவிட் மைக்கேல். சமூக கூடம் கட்டி முடிக்கப்பட்டு 22-10-2000-ல் ஆயர் மேதகு லியோன் தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. சிறுசேமிப்புத் திட்டம், தொடர் சேமிப்புத் திட்டம், கடன் வழங்கும் திட்டம் தொடங்கப் பட்டது.

2001-ல் அருட்பணி A. M ஹிலரி. தலித் இயக்கம் தொடங்கப் பட்டது. தூய வறுவேலார் புதிய குருசடி கட்டி முடிக்கப்பட்டு 22-06-2001 ல் அர்ச்சிக்கப்பட்டது.

2003-ல் அருட்பணி யூஜின். அரசு நூல் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.

2004-ல் அருட்பணி ராபின்சன் வளனார் கலையரங்கம் கட்டப்பட்டது.

2005-ல் அருட்பணி அமிர்தராஜ். வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது.

2008-ல் அருட்பணி C. M வென்சஸ்லாஸ். கல்லறைத் தோட்டத்தில் சிற்றாலயம் கட்டப் பட்டது. பங்குத்தந்தை இல்லம் புதிதாக கட்டப்பட்டது.

2011-ல் அருட்பணி P. கிங்ஸ்லி ஜோன்ஸ். அல்போன்சா பெண்கள் இயக்கம் ஆரம்பிக்கப் பட்டது. ஆண்களுக்கும் மரியாயின் சேனை ஆரம்பிக்கப் பட்டது. ஏற்கனவே செயல்பட்டு வந்த ஏழைக்கு உதவி திட்டத்தை 'உதவும் கரங்கள் திட்டம்' என்ற பெயரில் புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் குழந்தை இயேசு நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீரும் கொடுத்து ஏராளமானோர் நலம் பெற உதவி செய்தார்கள். அருளாளர் தேவசகாயம் பிள்ளை தொழிலாளர் இயக்கம் உருவாக்கப் பட்டது.
07-04-2013 -ல் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் போடப்பட்டது.

2016-ல் அருட்பணி M. உபால்டு. புனித இராயப்பர் சின்னப்பர் புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 23-06-2017-ல் மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

தற்போது அருட்தந்தை பெஸ்கி M இவாஞ்சலியன் அவர்களின் வழிகாட்டுதலில் சரல் பங்கு வளர்சிப் பாதையில் சிறப்பாக முன்னேறி செல்கின்றது.

புனித பவுல் சொற்பயிற்சி மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மண்ணின் இறை அழைத்தல்கள் :

1. Fr S. Mமரியதாசன்
2. Fr S. அருளப்பன்
3. Fr V. ஹிலாரியுஸ்
4. Fr F. லாரன்ஸ்
5. Fr S. ஞானதாஸ்

அருட்சகோதரர்கள் :

அ. சகோ V அருனால்டு
அ. சகோ சாமுவேல்
அ. சகோ V திதாக்கூஸ்

குரு மாணவர்கள் :

A. ரொனால்டு
K. அமல் ராஜ்

19 அருட்சகோதரிகளையும் தற்போது பயிற்சியில் ஒரு அருட்சகோதரியையும் இறைப் பணிக்காக தந்துள்ளது சரல் இறை சமூகம்.

(ஆலய வரலாறு சரல் ஆலய விழா மலரிலிருந்து தொகுக்கப் பட்டது ஆகும்)