11 புனித அந்தோணியார் ஆலயம், செவல்பட்டி


புனித அந்தோணியார் ஆலயம்.

இடம் : செவல்பட்டி

மாவட்டம் : தூத்துக்குடி 
மறைமாவட்டம் : பாளையங்கோட்டை 

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித பரலோக மாதா திருத்தலம்,  காமநாயக்கன்பட்டி. 

குடும்பங்கள் : 60 
அன்பியங்கள்: 3

பங்குத்தந்தை : அருட்பணி. அந்தோனி அ. குரூஸ்

உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி.‌ S. லூர்து மரிய சுதன்

புதன்கிழமை இரவு 07.00 மணிக்கு திருப்பலி 

தமிழ் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை இரவு 07.00 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆசீர். தொடர்ந்து சமபந்தி விருந்து.

திருவிழா : பெப்ரவரி மாதத்தில் 13 நாட்கள் (மாசி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை)

வழித்தடம்: கோவில்பட்டி -காநாயக்கன்பட்டி

Location map: Sevalpatti, Tamil Nadu 628718 https://maps.app.goo.gl/kjG1R1AVdeq2mNXJ6

வரலாறு:

புதுமைநகர் காமநாயக்கன்பட்டி திருத்தல பங்கின், பதுவை புனித அந்தோணியார் ஆலயம் ஆமைந்துள்ள செவல்பட்டி பழைமையும், பாரம்பரியமும் வாய்ந்த கிறிஸ்தவ கிராமம் ஆகும். இவ்வூர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு தென்கிழக்கே சுமார் 15கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

மதுரை மிஷன் அதிபராக இருந்த ஜான் டி பிரிட்டோ என்கிற புனித அருளானந்தர், கி.பி 1666 ஆம் ஆண்டு காமநாயக்கன்பட்டியை தமது மறைப்பணிக்கு சிறந்த இடமாகக் கொண்டு தூய பரலோக மாதா ஆலயம் கட்டினார். சுற்றுவட்டார மக்கள் வழிபாட்டில் பங்கேற்க காமநாயக்கன்பட்டிக்கு சென்று வந்தனர். கி.பி 1890 ஆம் ஆண்டில் ஊர் மக்களால் செவல்பட்டியில் ஓலை வேய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் 1926 ஆம் ஆண்டு காரைக் கோவிலாக மாற்றப் பட்டது. 1991 ஆம் ஆண்டு ஆலய முன்மண்டபம் கட்டப்பட்டது. 

அருள்பணி. ம. அருள் அம்புரோஸ் பணிக்காலத்தில், அவரது முயற்சி மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் 2008 ஆம் ஆண்டு தற்போதைய புதிய ஆலயம் கட்டப்பட்டது. 2011 ஆம் ஆண்டு அருள்பணி. S. A. அந்தோணிசாமி அவர்களின் முயற்சியால் ஆலயத்திற்கு அழகிய கோபுரம் கட்டப்பட்டது.

மக்களின் ஜெப தேவைகளுக்காக பழைய காரைக்கோவில் மாற்றப்பட்டு, அவ்விடத்தில் ஆராதனை ஆலயம் அழகுற கட்டப்பட்டு, அப்பத்தில் வாழும் இயேசுவை கழுதை பணிந்து வணங்கும் காட்சி அழகுற அமைக்கப் பட்டுள்ளது.

அருள்பணி. S. M. அருள்ராஜ் பணிக்காலத்தில் ஆலய பீடமானது மர வேலைப்பாடுகளுடன் அழகுற அமைக்கப்பட்டது. மேலும் ஊரின் எல்லையில் ஆலய நுழைவுவாயில் அமைக்கப்பட்டது.

தினந்தோறும் மாலை வேளையில் செபம் செபிக்கப்படுகிறது. செவல்பட்டி புனித அந்தோணியார் தம்மை நம்பி வருபவர்களுக்கு இயேசுவின் பெயரால் பேயை விரட்டுகிறார், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரமளிக்கிறார், திருமணத்தடைகளை நீக்குகிறார், தீராத நோய்களை தீர்த்து வைக்கிறார், காணமல் போன பொருட்களை கண்டடையச் செய்கிறார்... இவ்வாறு எண்ணற்ற புதுமைகளை செய்து வருகிறார்..

தகவல்கள்: அப்போதைய (2018) பங்குத்தந்தை அருட்பணி. S. M. அருள்ராஜ்