411 புனித அமலோற்பவ அன்னை ஆலயம், பேரம்பாக்கம்

 

புனித அமலோற்பவ அன்னை ஆலயம்

இடம் : பேரம்பாக்கம்

மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறை மாவட்டம்.
மறை வட்டம் : திருவள்ளூர்.

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், நரசிங்கபுரம்.

பங்குத்தந்தை : அருட்பணி. V. அமல்ராஜ் OMI

குடும்பங்கள் : 55
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு.

செவ்வாய் மாலை 06.15 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள், திருப்பலி.

வெள்ளி திருப்பலி: மாலை 06.15 மணிக்கு.

சனி மாலை 06.15 மணிக்கு சகாயமாதா நவநாள், திருப்பலி.

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.15 மணிக்கு: திருப்பலி, நற்கருணை ஆராதனை.

மாதத்தின் முதல் சனி மாலை 06.15 மணிக்கு ஜெபமாலை தேர்பவனி, திருப்பலி.

திருவிழா : டிசம்பர் மாதம் 08 -ம் தேதி நிறைவு பெறும் வகையில் மூன்று நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. ஜான்சன் MMI
2. அருட்பணி. சில்வெஸ்டர் HGN

சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தண்டலம். தண்டலம் கூட்ரோடிலிருந்து அரக்கோணம் சாலையில் பேரம்பாக்கம் அமைந்துள்ளது. அரக்கோணம் -தக்கோலம் சென்னை சாலை.

Location map : 13°02'06.0"N 79°48'53.2"E

வரலாறு :

இலங்கையைச் சேர்ந்த அருட்பணி. பிலிப் தனிஸ்லாஸ் அவர்கள் பேராம்பாக்கம் பகுதியில் மறைப்பரப்பு பணிக்காக இடம் வாங்கினார். இந்த நிலத்தில் பணியாளர்களாக இருந்த மக்களின் ஆன்மீகத் தேவைக்காக ஒரு சிறு சிற்றாலயம் அமைத்துக் கொடுத்தார்.

பின்னர் இந்த சிற்றாலயமானது பிஞ்சிவாக்கம் கண்டிகை யின் கிளைப் பங்காக இருந்தது.

12.06.2011 அன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, அமல மரி தியாகிகள் சபை (OMI) குருக்களிடம் ஒப்படைக்கப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. பிரகாசம் பனியடிமை OMI அவர்கள் பொறுப்பேற்று வழி நடத்தினார்கள்.

இத்துடன் நரசிங்கபுரம், புனித சூசையப்பர் ஆலயமானது பேரம்பாக்கம் பங்கின் கிளைப்பங்காக இணைக்கப்பட்டது.

பங்கின் பங்குத்தந்தையர்கள் :

1. அருட்பணி. பிரகாசம் பனியடிமை OMI (2011-2012)
2. அருட்பணி. G. செபாஸ்டியன் OMI (2012-2015)
3. அருட்பணி. புருனோ பாப்திஸ் OMI (2015-2019)
4. அருட்பணி. V. அமல்ராஜ் OMI (2019 முதல் தற்போது வரை...)

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. V. அமல்ராஜ் OMI அவர்கள்.