14 கார்மல் அன்னை ஆலயம், கொல்வேல்


கார்மல் அன்னை ஆலயம்.

இடம்: கொல்வேல் (திருவட்டாரிலிருந்து சுமார் 3கிமீ தொலைவில்)

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : பங்கு தளம்

கிளைகள் :
1. புனித அந்தோணியார் ஆலயம், குருவிக்காடு.
2. தூய மறை பரப்பு ஆலயம், அம்பாங்காலை.

குடும்பங்கள்: 690
அன்பியங்கள்: 14

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

பங்குத்தந்தை : அருட்பணி. ஒய்ஸ்லின் சேவியர்.

திருவிழா : மே மாதத்தில்.

நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம்.

வரலாறு :

கி.பி 1934 ஆம் ஆண்டில் ஓலைக் குடிசை ஆலயம் கட்டப்பட்டு மக்கள் இறைவனிடம் ஜெபித்து வந்தனர். இந்த காலகட்டத்தில் சுமார் 350 க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒரே நாளில் திருமுழுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

கி.பி 1936 ஆம் ஆண்டு தூய கார்மல் அன்னை ஆலயம் கட்டப்பட்டு கிளைப்பங்கு நிலைக்கு உயர்த்தப் பட்டது. 

09.05.1973 மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. 

பங்கில் தூய கார்மல் அன்னை பள்ளிக்கூடம் மற்றும் தையல் பயிற்சி நிலையம் ஆகியன சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

மண்ணின் மைந்தர்கள் 

அருட்பணி. தொபியாஸ் 
அருட்பணி. ஸ்டீபன் 

அருட்சகோதரி நவினா 
அருட்சகோதரி ஜோஸ்பின் ஷீலா
அருட்சகோதரி பமிலா மெர்சலின்.