579 புனித செபஸ்தியார் ஆலயம், கொங்கரப்பட்டி


புனித செபஸ்தியார் ஆலயம்

இடம் : V.கொங்கரப்பட்டி, V.கொங்கரப்பட்டி அஞ்சல், காடையாம்பட்டி தாலுக்கா, 636351

மாவட்டம் : சேலம்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : மேட்டூர்

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்பணி. K. ஜான் ஜோசப்

குடும்பங்கள் : 180

அன்பியங்கள் : 9

திருப்பலி நேரங்கள்:

ஞாயிறு : காலை 09.00 மணிக்கு திருப்பலி

வாரநாட்கள் : மாலை 07.00 மணிக்கு திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 07.00 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆராதனை

பௌர்ணமி : மாலை 06.30 மணிக்கு செபமாலை பவனி, திருப்பலி

திருவிழா : ஜனவரி மாதம் 20ம் தேதி

மண்ணின் மைந்தர்கள்:

1. அருட்பணி. ஜேசு ஜான் பீட்டர் (late)

2. அருட்பணி. சூசையப்பன், C.P.P.S

3. அருட்பணி. அந்தோணிசாமி (SDB)

4. அருட்பணி. A. சார்லஸ்

5. சகோதரர். ஜான் பிரிட்டோ

6. சகோதரர். பேபியன்

7. அருட்சகோதரி. பாத்திமா, லண்டன்

8. அருட்சகோதரி. மோட்சராக்கினி (குளூனி சபை)

9. அருட்சகோதரி. ஆரோக்கியமேரி (புதுவை மாதா இருதய சபை)

10. அருட்சகோதரி. சீலா (புதுவை மாதா இருதய சபை)

11. அருட்சகோதரி. கிரேஸி (டொமினிக்கன் சபை)

12. அருட்சகோதரி. டெல்பின் விண்ணரசி (D.S.S சபை)

13. அருட்சகோதரி. லீமா (காணிக்கை அன்னை சபை, கோவை)

வழித்தடம் : சேலத்திலிருந்து தருமபுரி செல்லும் சாலையில் தீவட்டிப்பட்டி வழியாக 16கி.மீ தொலைவில் V.கொங்கரப்பட்டி உள்ளது.

Location map : St. Sebastian Church V Kongarapatti, Tamil Nadu https://g.co/kgs/FYfbT1 

பங்கு வரலாறு:

கி.பி.1845 -ம் ஆண்டு அருட்பணி. குயோன் அவர்கள் எடப்பாடியிலிருந்து சில கிறிஸ்துவக் குடும்பங்களை கோவிலூரில் வேலை செய்ய அழைத்து வந்தார். சலவைத்தொழில் செய்து வந்த அவர்களும், வேறு சில சமூகத்தினரும் கொங்கரப்பட்டி என்ற சிற்றூரைத் தேர்ந்தெடுத்து அங்கே குடியேறினார்கள். 1876-1878ம் ஆண்டுகளில் நிலவிய பஞ்சத்தின் காரணமாகப் பலப்பகுதிகளில் வாழ்ந்து வந்த கிறிஸ்துவர்கள் தங்கள் மறையை மறுதலித்தனர். ஆனால் இப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருந்தனர்.

1942 ம் ஆண்டு இங்கு புனித செபஸ்தியார் பெயரில் ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டது. தற்போது தருமபுரி கோவிலூர் பங்கிலிருந்து சுமார் 40கி.மீ தொலைவிலிருக்கும் இவ்வூர், சேலம் மறைமாவட்டத்திலிருந்து தருமபுரி மறைமாவட்டம் பிரிவதற்கு முன், கோவிலூர் பங்குத்தந்தையர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தது. 1997ம் ஆண்டு தருமபுரி தனி மறைமாவட்டமானதிலிருந்து இவ்வூர் புதிய பங்காக உயர்த்தப்பட்டு, சேலம் மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. B.பள்ளிப்பட்டி பங்கின் மற்றொரு கிளைப்பங்காக விளங்கிய K.மோரூர், V.கொங்கரப்பட்டியின் கிளைப்பங்காக இணைக்கப்பட்டது.

புதிய பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. தாமஸ் கீராஞ்சிரா அவர்கள் நியமிக்கப்பட்டார். இவரது பணிக்காலத்தில் ஆலயத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. மேலும், கிளைகிராமமான காடையாம்பட்டியில் 2 3/4 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.

அருட்பணி. R. பிரான்சிஸ் (2002-2004) அவர்களின் முயற்சியால் பாஸ்கா ஒலி-ஒளிக்காட்சி, மலையில் நடத்தப்பட்டு "கல்வாரி மலை" என்று பெயரிடப்பட்டது.

அருட்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் (2004-2009) அவர்களின் பணிக்காலத்தில் 3 வருடமாக 30 மேடைகளில் 300 கலைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வந்த பாஸ்கா ஒலி-ஒளிக்காட்சி மாற்றியமைக்கப்பட்டு, 2005ம் ஆண்டு தமிழகத்தில் முதன்முறையாக இயேசுவின் பாடுகளில் மாதாவின் முழு பங்கேற்பு மற்றும் மாதாவின் விண்ணேற்பு வரை சிறப்பாக நடித்துக் காட்டப்பட்டது. சுமார் 2500 பேர் இதைக் கண்டு பயனடைந்தனர். மேலும், அருட்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் முயற்சியால் 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புதிய ஆலயம் கட்ட நிலம் வாங்கப்பட்டது. 20.01.2005 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலயக்க ட்டுமானப்பணிகள் நிறைவு பெற்று, 20.01.2006 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

அருட்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் முயற்சியால் 9 அன்பியங்களும் மாதாவின் பெயரைத்தாங்கிய அன்பியங்களாக மிகச்சிறந்த முறையில் உருவாக்கப்பட்டன. இங்கு புதிய பள்ளிக்கூடமும், மருத்துவமனையும் கட்டப்பட்டு, D.S.S சபை அருட்சகோதரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களுக்கு புதிய இல்லமும் கட்டப்பட்டது. மேலும், தந்தையின் அயராத முயற்சியால் மணிக்கோபுரமும், தூய லூர்து அன்னை கெபியும் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. மேலும் அழகிய ஜெபமாலை பூங்கா (Rosary Park) அமைக்கப்பட்டது. 

அருட்பணி. ஜூடு நிர்மல் பணிக்காலத்தில் ஆலயமணி வரவழைக்கப்பட்டு மணிக்கூண்டில் பொருத்தப் பட்டது. ஆன்மீகப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததுடன் பாடகற்குழுவையும் உருவாக்கினார். 

அருட்பணி. ஆரோக்கியசாமி பணிக்காலத்தில், ஆழ்துளை கிணறு போடப்பட்டு மக்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்தார். கல்லறைத்தோட்டம் சீரமைக்கப் பட்டது. 

அருட்பணி. அமல் மகிமை ராஜ் பணிக்காலத்தில் கெபி கட்டப்பட்டது. கல்லறைத் தோட்டத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. 

அருட்பணி. யோவன்னஸ் கோபு பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லத்தின் மேல்மாடி கட்டப்பட்டது. மேலும், ஆன்மீகக் காரியங்களில் மக்களை வளரச்செய்தார்.

V. கொங்கரப்பட்டியின் கிளைப்பங்காகிய K. மோரூர் புனித ஆரோக்கியநாதர் ஆலயமானது, 2015 -ம் ஆண்டு தனிப்பங்காக உயர்த்தப்பட்டு முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. R. சேவியர் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

இன்றைய பங்குத்தந்தை அருட்பணி. K. ஜான் ஜோசப் அவர்கள் பங்கை ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்.

மேலும் இப்பங்கில் DSS சபை அருட்சகோதரிகள் கல்விப்பணியிலும், மருத்துவப் பணியிலும், ஆன்மீகக்  காரியங்களிலும் சிறப்பாக பங்கெடுத்து வருகிறார்கள்.

பங்கில் உள்ள பக்தசபைகள்

1. பங்குப்பேரவை

2. வின்சென்ட் தே பவுல் சபை

3. அன்பியங்கள்

4. இளையோர் இயக்கம்

5. பாடகற்குழு

6. பீடச்சிறுவர்கள்

பங்கில் உள்ள பள்ளிக்கூடம்

1. St. Angela Matriculation School (DSS சபை அருட்சகோதரிகள்   நிர்வாகம்)

பங்கில் உள்ள இல்லங்கள் & மருத்துவமனை:

1. பங்குத்தந்தை இல்லம்

2. DSS சபை அருட்சகோதரிகள் இல்லம்

3. St. Angela Hospital (DSS சபை அருட்சகோதரிகள் நிர்வாகம்) 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. தாமஸ் கீராஞ்சிரா (1997-2002)

2. அருட்பணி. R. பிரான்சிஸ் (2002-2004)

3. அருட்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் (2004-2009)

4. அருட்பணி. ஜூடு நிர்மல் தாஸ் (2009-2011)

5. அருட்பணி. ஆரோக்கியசாமி (2011-2013)

6. அருட்பணி. அமல் மகிமை ராஜ் (2013-2015)

7. அருட்பணி. யோவன்னஸ் கோபு (2015-2019)

8. அருட்பணி. சைமன் பெஞ்சமின், HGN -பொறுப்பு (2019 ஆறு மாதங்கள்)

9. அருட்பணி. K. ஜான் ஜோசப் (2020 முதல் தற்போது வரை.....)

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. K. ஜான் ஜோசப், முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் மற்றும் மண்ணின் மைந்தர் அருட்பணி. சார்லஸ் ஆகியோர். 

புகைப்படங்கள் : ஆலய இளைஞர்.

தகவல்கள் சேகரிப்பு : SPB காலனி பங்கின் பீடச்சிறுவன்.