அன்னை வேளாங்கண்ணி ஆலயம்
இடம்: குன்றத்தூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலை, நந்தம்பாக்கம் சென்னை -69
மாவட்டம்: காஞ்சிபுரம்
மறைமாவட்டம்: செங்கல்பட்டு
மறைவட்டம்: பல்லாவரம்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. இடைவிடா சகாய மாதா ஆலயம், சக்திநகர்
2. அற்புத குழந்தை இயேசு ஆலயம், பெரிய காலனி
பங்குத்தந்தை: அருட்பணி. D. S. சகாயராஜ், MMI
உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. A. ஜோசப் ஜெரால்டு, MMI
குடும்பங்கள்: 190 (கிளைப்பங்குகள் சேர்த்து 245)
அன்பியங்கள்: 10
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி மற்றும் மாலை 06:00 மணி
நாள்தோறும் திருப்பலி காலை 06:30 மணி
மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06:00 மணிக்கு மாதாவின் தேர்பவனி, ஜெபமாலை, சிறப்பு திருப்பலி
மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணிக்கு ஜெபக்கொண்டாட்டம்
மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மாலை 06:30 மணிக்கு மறைக்கல்வி மாணவர்களுக்கு ஆங்கில திருப்பலி
திருவிழா: செப்டம்பர் மாதம் 08-ம் தேதி
நந்தம்பாக்கம் மண்ணின் இறையழைத்தல்கள்:
1. Rev.Fr. ஜெரோம், செங்கல்பட்டு மறைமாவட்டம்
2. Rev.Fr. சந்தோஷ், சென்னை மயிலை உயர் மறைமாவட்டம்
3. Rev.Fr. அருள்மணி, சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்
1. Rev.Sr. அந்தோணியம்மாள், பெத்லமைட் சபை
2. Rev.Sr. விர்ஜின், திருஇருதய ஆண்டவர் சபை
வழித்தடம்: வண்டலூர் -குன்றத்தூர் -நந்தம்பாக்கம்.
-ஸ்ரீபெரும்புதூர் நந்தம்பாக்கம்
Location map: https://g.co/kgs/w1UY7A
வரலாறு:
சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்தின் போளூர் பங்கின் கிளைப்பங்காக 1994 ஆம் ஆண்டில் அருட்பணி. பேட்ரிக் அவர்களால் நந்தம்பாக்கம் பங்கு உருவாக்கப்பட்டது.
08.03.2003 அன்று செங்கற்பட்டு மறைமாவட்டத்தில் இணைக்கப் பட்டது. செங்கற்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்களால் நந்தம்பாக்கம், சிவன்தாங்கல், மாதாநகர், அய்யப்பன்தாங்கல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய குன்றத்தூர் மிஷன் உருவாக்கப்பட்டு, குன்றத்தூர் மிஷன் பொறுப்பு, SVD சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. பிளேஸ் அடிகளார், சிறிய ஆலயமாக இருந்த நந்தம்பாக்கம் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தை விரிவுபடுத்தும் முயற்சியாக, 28.10.2007 அன்று மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. பழைய ஆலயம் இடிக்கப்பட்டு, 2450 சதுர அடிகள் பரப்பளவில் புதிய ஆலயம் கட்டுவதற்கான முயற்சியாக தூண்கள் (Pillars) அமைக்கப்பட்டன. அதன்பிறகு கட்டுமானப் பணிகள் தொடரவேயில்லை! உள்ளதையும் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு நந்தம்பாக்கம் வேளாங்கண்ணி மாதா ஆலயம் தனிப்பங்காக உருவாக்கப்பட்டு, அமலமரி தூதுவர்கள் சபையினரிடம் (MMI) ஒப்படைக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு பணிப் பொறுப்பேற்ற பங்குத்தந்தையின் முயற்சியால், நன்கொடையாளர் ஒருவரின் உதவியுடன் சுமார் 1,000 சதுர அடியில் ஓலைக் கொட்டகை ஒன்று அமைக்கப் பட்டது.
2011 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பங்குத்தந்தையின் முயற்சியால், ஆலய கட்டுமானப் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டு, இறைமக்கள், மற்றும் நன்கொடையாளர்களின் உதவிகள், MMI சபையின் ஊக்கம் மற்றும் பொருளுதவி, மறைமாவட்ட ஆயரின் பேருதவிகளாலும் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 13.05.2014 அன்று மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
2014 டிசம்பர் மாதம் பொறுப்பேற்ற அருட்பணி. கிங்ஸ்லி அவர்களின் பணிக்காலத்தில் கிளைப்பங்கான சக்திநகரில், இடைவிடா சகாய அன்னை ஆலயம் புதிதாக கட்டப்பட்டு, 13.08.2017 அன்று மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
மேலும் கிளைப்பங்கான பெரியகாலனி (குழந்தை இயேசு நகர்) ஆலயம் புதிதாக கட்டப்பட்டு, 10.08.2018 அன்று மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
6 குடும்பங்களைக் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட நந்தம்பாக்கம் பங்கு, மாதாவின் ஆசியுடன் தற்போது 190 குடும்பங்களைக் கொண்டு, பங்குத்தந்தையின் வழிகாட்டலில் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
பக்த சபைகள்:
1. மரியாயின் சேனை
2. இளையோர் குழு
பங்கில் பணிபுரியும் சபை துறவிகள்:
1. பெத்லமைட் சபை அருட்சகோதரிகள் - மருத்துவ பணி, Play School
2. FSJ அருட்சகோதரிகள் - முதியோர் இல்லம்
3. FMA சலேசிய அருட்சகோதரிகள் - குழந்தைகள் காப்பகம்,
பெண்கள் சமூக சேவை
பங்குப் பணியாளர்கள்:
1. Fr. Justus, MMI
2. Fr. Arockia Dass, MMI
3. Fr. Michael Kingsly, MMI
4. Fr. Vimal Kumar, MMI
5. Fr. D.S Sagayaraj, MMI (2021 to till today...)
6. Fr. A. Joseph Jerald, MMI (Asst PP)
தகவல்கள்: முன்னாள் பங்குத்தந்தையர் அருட்பணி. கிங்ஸ்லி MMI, அருட்பணி. விமல் குமார் MMI மற்றும் தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. சகாயராஜ், MMI
ஆலய புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. சகாயராஜ், MMI