இடம் : இருதயம்பட்டு
மாவட்டம் : கள்ளக்குறிச்சி
மறை மாவட்டம் : புதுவை - கடலூர் உயர் மறை மாவட்டம்.
மறை வட்டம் : விரியூர்
iruthayampattu@gmail.com
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித பாத்திமா அன்னை ஆலயம், செம்படை
2. புனித அந்தோணியார் ஆலயம், சீர்பந்தநல்லூர்.
பங்குத்தந்தை : அருட்பணி ஆரோக்கிய சாமி
குடும்பங்கள் : 1350
அன்பியங்கள் : 23
ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணி மற்றும் மாலை 05.00 மணிக்கும்.
வார நாட்களில் திருப்பலி : காலை 05.30 மணிக்கு
மாலை 06.00 மணிக்கு செபமாலை.
மாதத்தின் முதல் செவ்வாய் காலையில் பதுவைநகர் கெபியில் திருப்பலியும், மாலையில் புனித அந்தோணியார் கெபியிலும் திருப்பலி.
முதல் வெள்ளி காலை 07.00 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து நோயாளிகளுக்கு இல்லங்களில் நற்கருணை வழங்குதல். மாலையில் திவ்ய நற்கருணை ஆசீர்.
மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 06.00 மணிக்கு லூர்து அன்னை கெபியிலும் திருப்பலி.
திருவிழா : மே மாதம் 20- ம் தேதி.
மண்ணின் மைந்தர்கள் :
அருட்பணியாளர்கள் :
1. Fr. மரிய செல்வம்
2. Fr. பெஞ்சமின்
3. Fr. தொன்போஸ்கோ
4. Fr. C. சூசைக்கண்ணு
5. Fr. புஷ்பநாதன்
6. Fr. I. மைக்கேல்
7. Fr. லூர்து செல்வமணி
8. Fr. மரிய செல்வம்
9. Fr. ஜோசப் மோசஸ்
10. Fr. பத்திநாதன்
11. Fr. ஜோசப் ராஜ்
12. Fr. சூசைக்கண்ணு S.A.C
13. Fr. மைக்கேல் M.S.F.S
14. Fr. PS ஜோசப் M.S.F.S
15. Fr. அருள் செல்வமணி M.S.F.S
16. Fr. ஆரோக்கியதாஸ் H.G.N
17. Fr. ஜெயசீலன்
18. Fr. சின்னப்பன் O.S.M (செம்படை கிளைப்பங்கை சார்ந்தவர்)
19. Fr. ஜெரால்டு M.S.F.S
20. Fr. டேவிட் ராஜ் H.G.N
21. Fr. செல்வராஜ் (திரு இருதய சபை)
22. Fr. லூர்து பாஸ்கர் (திரு இருதய சபை)
23. Fr. லியோ ஜஸ்டின் H.G.N
24. Fr. ஜான் ஜோசப் S.A.C
25. Fr. கிறிஸ்து அமல்ராஜ் S.A.C
26. Fr. மார்ட்டின் சகாயராஜ் M.S.C
27. Fr. ராஜரத்தினம் O.S.M
28. Fr. சூசை ரெஜிஸ் H.G.N.
29. Fr. ரிச்சர்ட் பலோடின்
30. Fr. லியோ பலோட்டின்
31. Fr. ஆரோக்கிய தாஸ்
32. Fr. திவ்யநாதன் H.G.N.
அருட்சகோதரிகள் :
1. Sr விக்டோரியா FIHM
2. Sr சில்வெஸ்தரா மேரி FIHM
3. Sr கொன்சாகா மேரி FIHM
4. Sr ஆல்டிரிக்கா மேரி FIHM
5. Sr நிக்கோலாஸ் SJC
6. Sr பிரான்சிஸ் சேவியர்
7. Sr பீட்டர் SJC
8. Sr கலிஸ்ட்ரா SJC
9. Sr தெரசம்மாள் SJC
10. Srகொலின் பாத்திமா FIHM
11. Sr செலஸ்டா அருள்மேரி FIHM
12. Sr லூர்து மேரி OCD
13. Sr மரிசா SJC
14. Sr எமரிக் மேரி அந்தோணியம்மாள் FIHM
15. Sr எலிசேயுஸ் பாக்கியமேரி FIHM
16. Sr மரிய கிறிஸ்டினா HG
17. Sr பாத்திமா மேரி IMP
18. Sr. லீமா SJC
19. Sr. செலஸ்டா பிலோமினா மேரி FIHM
20. Sr பிரிஸ்கா ராக்கேல் FIHM
21. Sr அஞ்சலி CJ
22. Sr நித்யா HC
23. Sr அக்ஸிலியா CJ
24. Sr எலிசபெத் ராணி CJ
25. Sr பிரபா CJ
26. Sr அமலோற்பவம் CCB
27. Sr சவரியம்மாள் DSMP
28. Sr ஜெசிந்தா CSA
29. Sr சகாயம் CJ
30. Sr திவ்யா CJ
31. Sr கிறிஸ்டின் பபியோலா ராணி FIHM
32. Sr லூர்துமரி SAC
33. Sr சகாயராணி லூர்துமேரி SAC
34. Sr தாமஸ் வானரசி SAC
35. Sr ஜெயசீலி FIHM
36. Sr அருள் ஜெயராணி FIHM
37. Sr ஜான்பிரிட்டோ ரத்தினமரி FIHM
38. Sr ஜெயராக்கினி SJC
39. Sr. S. ஜெயசீலி RNDM
40. Sr தனசீலி RNDM
41. Sr ரோசாலி RNDM
42. Sr டெய்சி சகாய செல்வமரி HC
43. Sr. A. ஜெயசீலி DSMP
44. Sr ஜெயராணி DSMP
45. Sr மதலைமேரிDSMP
46. Sr விண்ணரசி SMMI
47. Sr லூர்து சகாயம் PB
48. Sr ரூபி டெல்பினா CJ
49. Sr அமலி குழந்தை தெரஸ் SCBC.
வழித்தடம் :
கள்ளக்குறிச்சி to திருவண்ணாமலை.
Location map : https://maps.google.com/maps…
வரலாறு :
இருதயம் பட்டு என்ற இவ்வூரில் பல ஆண்டுகளுக்கு முன்னர், இரு உடையார்கள் இருந்ததால், இரு உடையார் எனப்பெயர் பெற்ற ஊர் நாளடைவில் ஈருடையாம்பட்டு என்றாகி, பின்னர் இருதயம் பட்டு என்று அழைக்கப்படுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் இருதயம் பட்டில் கிறிஸ்தவம் துளிர் விட்டது.
1883 ம் ஆண்டிலிருந்து கோவிலானூர் போர்ச்சுகீசிய பாத்ரோவோதா அமைப்பின் கீழ் இருந்தது.
1887 ம் ஆண்டு வரை கோனான்குப்பம் ஆலயத்தின் கீழ் இருந்தது.
1888 ம் ஆண்டு விரியூர் பங்கில் சேர்க்கப்பட்டது.
1903 ம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டு, தனிப்பங்காக உயர்ந்தது. முதல் பங்குத்தந்தை அருட்பணி ஹூகே அடிகள் ஆவார்.
1954 ல் அருட்பணி M.C ஆபிரகாம் அடிகள் பணிக்காலத்தில் ஆலய பொன்விழா கொண்டாடப் பட்டது.
1970 ம் ஆண்டு அருட்பணி பெந்தேகோஸ்தே அடிகள் பணிக்காலத்தில் ஆலய பீடம் புதுப்பிக்கப்பட்டது.
1982 ம் ஆண்டு அருட்பணி T. S ராஜரத்தினம் பணிக்காலத்தில் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
2004 ம் ஆண்டு அருட்பணி C. டேவிட் அடிகள் பணிக்காலத்தில் ஆலய நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
2008 ம் ஆண்டு அருட்பணி S. பால்ராஜ் பணிக்காலத்தில் ஆலயம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு அழகு படுத்தப் பட்டது.
தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கிய சாமி பணிக்காலத்தில் பதுவை நகரில் 12.12.2013 அன்று புனித அந்தோணியார் சிற்றாலயம் கட்டப்பட்டு அருட்தந்தை ஆரோக்கியராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. மாதத்தின் முதல் செவ்வாய் காலை 07.00 மணிக்கு இங்கு திருப்பலி நடைபெறும்.
07.10.2015 அன்று பதுவை நகரில் புனித அந்தோணியார் செபகூடம் கட்டப்பட்டு அருட்தந்தை அருளானந்தம்(மறை மாவட்ட முதன்மை குரு) அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. இந்த செபக்கூடத்தில் ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை முழு இரவு செபம் நடைபெறும். இவ்வாறு அருட்பணி ஆரோக்கிய சாமி அவர்கள் இருதயம் பட்டு இறை சமூகத்தை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.
தூய மரியன்னை அருட் சகோதரிகள் இல்லம் : இருதயம்பட்டு தலத்திருச்சபையின் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்து வரும் இவ் இல்லமானது 1906 -ஆம் ஆண்டு கட்டப்பட்டது, இதய சபை அருட்சகோதரிகளால் வழி நடத்தப்பட்டு கல்வி, ஆன்மீகப் பணிகள், சமூக வளர்ச்சி பணிகளையும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
1956 -ஆம் ஆண்டு பொன்விழா (50 ஆம் ஆண்டு) கொண்டாடப் பட்டது.
தூய விண்ணரசி உயர்நிலைப் பள்ளி :
ஆர்சி பெண்கள் தொடக்கப் பள்ளி :
புனித சூசையப்பர் ஆண்கள் தொடக்கப் பள்ளி :
ஆகிய கல்வி நிலையங்கள் இம் மக்களின் கல்வியறிவு வளரவும், பல்துறை வல்லுநர்களையும் உருவாக்க உறுதுணையாக இருந்து வருகின்றன.
திருவிழா சிறப்புகள்:
மே மாதம் 11 ம் தேதி ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
இதில் மே 20 ம் தேதி அன்னையின் பெருவிழா மண்ணின் மைந்தர்களின் கூட்டுத் திருப்பலி காலை 08.00 மணிக்கு நடைபெறும். அன்று இரவு 10.00 மணிக்கு ஆடம்பர தேர்பவனி துவங்கி மறுதினம் காலை 10.00 மணிக்கு கொடியிறக்கத்துடன் பெருவிழா இனிதே நிறைவு பெறுகின்றது.
இப் பெருவிழாவிற்கு வெளிநாடுகளில் வெளியூர் வெளி மாநிலங்களில் இருக்கும் பங்கு மக்கள், உறவினர்களுடன் வந்து மகிழ்ச்சியை பகிர்ந்து, அன்னையின் வழியாக இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்கின்றனர்.
பங்கில் செயல்பட்டு வரும் அமைப்புக்கள் :
மரியாயின் சேனை:
இருதயம் பட்டு கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் மோட்ச இராக்கினி அன்னை பெயரை தாங்கி பிரிசிடியமக தொடங்கப்பட்டது .அது தற்போது தூய விண்ணரசி அன்னை கியூரியா வாக வளர்ந்து உள்ளது.
கியூரியாவின் கீழ் தற்போது 10 பிரிசீடியங்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கோல்பிங் இயக்கம் :
பாஸ்கா நாடகக் குழு (பெரியவர்கள்) :
செபஸ்தியார் நாடகக் குழு (இளையோர்) :
மறை மாவட்ட இளையோர் :
இமய மக்கள் வழிகாட்டி இயக்கம் :
அன்னை தெரசா தொண்டு நிறுவனம் :
சகோதர வாழ்வு சங்கம் :
என பல்வேறு அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
பங்கில் இறைப்பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. Fr. J. ஹூகே (1903)
2. Fr. M. கோலின்ஸ் (1904)
3. Fr. L. அத்நார்ட் (1909)
4. Fr. H. டெலசோன் (1909)
5. Fr. F. இரபேல் (1909-1914)
6. Fr. M. இஞ்ஞாசி (1915)
7. Fr. லூர்துமரி அருள் (1916, 1922, 1925)
8. Fr. M.D. ராயன் (1916,1931, 1933)
9. Fr. A.L. பாக்கியநாதர் (1925-1927)
10. Fr. P. மரியகுழந்தை (1927-1930)
11. Fr. N. R. தேவண்ணா (1930-1933)
12. Fr. G. போனீஸ் (1933-1936)
13. Fr. R. சோவெ (1936-1938)
14. P. J. ஜேக்கப் (1938-1948)
15. Fr. M. C. ஆபிரகாம் (1948-1955)
16. Fr. M. மத்தேயு நெல்லிக்குன்னம் (1955-1958)
17. Fr. P. M. குரியாக்கோஸ் (1958-1961)
18. Fr. G. பெந்தகோஸ்த் (1961-1976)
19. Fr. T. S. ராஜரத்தினம் (1976-1988)
20. Fr. R. எலியாஸ் (1988-1989)
21. Fr. I. ஜோசப் ஆல்பர்ட் (1989-1996)
22. Fr. C. தாவீது (1996-2005)
23. Fr. S. பவுல்ராஜ் (2005-2012)
அருட்பணி ஆரோக்கிய ராஜ் (உதவி பங்குத்தந்தை)
24. Fr. M. ஆரோக்கியசாமி (18.06.2012 முதல் தற்போது வரை..)
தகவல்கள் : சகோதரர் S. John Selva Sagayaraj மற்றும் இருதயம் பட்டு தலத்திருச்சபை நல்லுள்ளங்கள்.