புனித திருமுழுக்கு யோவான் ஆலயம்
இடம்: பூத்துறை, பூத்துறை அஞ்சல், 629176
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: தூத்தூர்
பங்குத்தந்தை: அருட்பணி. அன்சல் ஆன்றனி, CMF
உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. ஷாம், CMF
குடும்பங்கள்: 1272
அன்பியங்கள்: 38
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை 06:00 மணிக்கு முதல் திருப்பலி மற்றும் காலை 08:00 மணிக்கு இரண்டாம் திருப்பலி
நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி
மாதத்தின் 18-ம் தேதி மாலை 06:00 மணி ஒளிமாதா நவநாள் திருப்பலி
மாதத்தின் 24-ம் தேதி மாலை 06:00 மணிக்கு புனித திருமுழுக்கு யோவான் நவநாள் திருப்பலி
மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை மாலை 06:00 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் நவநாள் திருப்பலி
திருவிழா: ஜூன் 15-ம் தேதி தொடங்கப்பட்டு, 24-ம் தேதி திருவிழா
பங்கின் குருசடிகள்:
புனித அந்தோனியார் குருசடி: (மூன்றடுக்கு குருசடி)
புனித அந்தோனியார் திருவிழா பெப்ரவரி மாதத்தில் முதல் வாரத்தில்.
வேளாங்கண்ணி மாதா திருவிழா: செப்டம்பர் முதல் வாரத்தில்.
புனித ஜார்ஜியார் திருவிழா:
மே மாதம் மூன்றாவது சனி, ஞாயிறு
பாத்திமா மாதா குருசடி:
மே மாதம் 13-ம் தேதி திருவிழா.
கிறிஸ்து ராஜா குருசடி:
நவம்பர் மாதத்தில் திருவிழா.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. ஜான் டி போஸ்கோ (late)
(திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டம்)
2. அருட்பணி. பேபி பெபின்சன்
(திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டம்)
3. அருட்பணி. டோனி ஹாம்லட்
(திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டம்)
4. அருட்பணி. பிரதீப்
(திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டம்)
5. அருட்பணி. கிளீட்டஸ்
(திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டம்)
6. அருட்பணி. மரிய மைக்கிள்
(திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டம்)
7. அருட்பணி. அசிசி ஜோண் சுமேஷ்
(திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டம்)
8. அருட்பணி. ஜூலியஸ் சாவியோ
(திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டம்)
9. அருட்பணி. மரிய மென்டஸ், (OdeMஇரக்கத்தின் அன்னை சபை)
10. அருட்பணி. நசரேத், (OdeMஇரக்கத்தின் அன்னை சபை)
11. அருட்பணி. ஆன்றனி அலெக்ஸ்
(SH இயேசுவின் திரு இருதய சபை)
12. அருட்பணி. ஜேம்ஸ் சேவியர்
(குஜராத் மறை மாவட்டம்)
1. அருட்சகோதரி. மஞ்சு (OdeMஇரக்கத்தின் அன்னை சபை)
2. அருட்சகோதரி. தமிழ்ச்செல்வி
(OdeMஇரக்கத்தின் அன்னை சபை)
3. அருட்சகோதரி. சுஜா
(OdeMஇரக்கத்தின் அன்னை சபை)
4.அருட்சகோதரி. சிபா
(OdeMஇரக்கத்தின் அன்னை சபை)
5. அருட்சகோதரி. ஷிஜி
(OdeMஇரக்கத்தின் அன்னை சபை)
6. அருட்சகோதரி. ஜினி
(OdeMஇரக்கத்தின் அன்னை சபை)
7. அருட்சகோதரி. நிர்மலா ராணி
(OdeMஇரக்கத்தின் அன்னை சபை)
8. அருட்சகோதரி. அருள் மேரி
(OdeMஇரக்கத்தின் அன்னை சபை)
9. அருட்சகோதரி. செறினா
(OdeMஇரக்கத்தின் அன்னை சபை)
10.அருட்சகோதரி. பிறிதி
(OdeMஇரக்கத்தின் அன்னை சபை)
11. அருட்சகோதரி. ஸ்டான்லி
(புனித அன்னாள் சபை மாதவபுரம்)
12. அருட்சகோதரி. பிறகி
(அமல உற்பவ மாதா சபை)
வழித்தடம்: மார்த்தாண்டம் -களியக்கவிளை -இரயுமன்துறை பேருந்தில் பயணித்து பூத்துறையில் இறங்க வேண்டும். பேருந்துகள் 81, 81A, 83
Location Map:
வரலாறு:
அன்னை மாமரியின் தரிசனம் பெற்ற, தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழைமை வாய்ந்த கடற்கரை ஊராம் பூத்துறை, புனித திருமுழுக்கு யோவான் ஆலய வரலாற்றைக் காண்போம்....
பூத்துறை ஊரில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் சமய மக்கள் இணைந்து வாழ்கின்றனர். இவர்கள் பூத்துறையின் வளர்ச்சிக்காகவும், மத ஒற்றுமைக்காகவும் தங்களது பங்களிப்பை அளித்து, உழைத்து வாழ்கின்றனர். மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்தாலும், அரசுப் பணியாளர்கள், தனியார் துறைகள், வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் என பலதுறைகளில் இம்மக்கள் சிறந்து விளங்குகின்றனர்.
ஊரின் தோற்றம் எந்தக் காலம், எப்படி இருந்தது, என்பதைக் குறித்து தெளிவாக கூற இயலவில்லை... காரணம் இது பல தலைமுறைகளுக்கு முன் அமைந்திருந்த ஊர் என வரலாற்று குறிப்புகளில் இருந்து புரிந்து கொள்ள இயலும்.
1542 ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் சவேரியார் பூத்துறை ஊரில் வந்த போது, இங்கே கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஓலையினால் கட்டப்பட்ட ஒரு குருக்கள் இல்லம் (Parish House) இருந்தது என்று சரித்திர ஏடுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆகவே புனிதரின் வருகைக்கு முன்பாகவே பாரம்பரியமாக கிறிஸ்தவர் வாழ்ந்து வந்தனர் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
இயேசுவின் சீடரான புனித தோமையர் கொடுங்ஙலூரில் கப்பலில் வந்து இறங்கி, கடற்கரை பகுதியில் உள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார். அங்கிருந்து கடற்கரை மற்றும் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு நற்செய்தி அறிவித்துக் கொண்டே சென்னை -மைலாப்பூர் சென்று அங்கு வேதசாட்சியானார். அன்றைய தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த பூத்துறை ஊரிலும் மறைப்பணி செய்தார் என்று நம்பப்படுகிறது.
கி.பி முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் என்பது ஏழை மக்களுக்கு குறிப்பாக மீனவ மக்களுக்கு உரிய மதமாகவே கருதப்பட்டது. கி.பி 345 ஆம் ஆண்டு கானாயி தொம்மன் என்ற வணிகருடன் பாக்தாத், ஜெருசலேம் பகுதிகளில் இருந்து வந்த ஆயர்களும், குருக்களும், இறைமக்களும்; மலபார் பகுதியிலும், இந்தியாவின் தெற்குப் பகுதியிலும் வாழ்ந்த மக்களை மனம்மாற்றி வந்தனர். அவர்கள் பூத்துறை ஊரிலும் வந்திருக்கலாம். இவ்வாறாக புனித சவேரியார் வருகைக்கு முன்பே பூத்துறையில் கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பது உறுதியாகிறது.
புனித சவேரியார் வந்தபோது மாம்பள்ளி, வலியதுற, பூவார், வள்ளவிளை, பூத்துறை ஊர்களில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். இதில் விழிஞ்ஞம் முதல் இரயுமன்துறை வரை உள்ள பங்குகளுக்கு பொதுவான பங்குப்பணியாளர் இல்லம் பூத்துறையில் இருந்தது.
அதுமட்டுமின்றி பூத்துறை தாய்ப்பங்காகவும் (Residencial church) இருந்தது. (ஆதாரம்: கேரள சரித்திரம் - ஸ்ரீதரமேனோன்)
1664 ஆம் ஆண்டு அருட்பணி. ஆண்ட்ரூ லோப்பஸ் ரோமுக்கு அனுப்பிய கடிதத்தில் மாம்பள்ளி பரிசுத்த ஆவி ஆலயம், பூத்துறை புனித ஸ்நாபக அருளப்பர் (திருமுழுக்கு யோவான்) ஆலயம் ஆகியவற்றில் இயேசு சபை குருக்கள் வசித்திருந்ததாகவும், இதில் பூத்துறை குருக்கள் பூவார், பரித்தியூர், வள்ளவிளை, புல்லுவிளை, தூத்தூர், பாறசாலை, நெய்யாற்றின்கரை ஆகிய இடங்களில் சேவை செய்து வந்ததாக குறிப்பிடுகிறார்.
1663 ஆம் ஆண்டு டச்சுப்படை கொச்சிக்கோட்டையை போர்த்துக்கீசியரிடம் இருந்து கைப்பற்றி, அங்கிருந்த இயேசு சபை குருக்களை வெளியேற்றிய போது, முதலில் குளச்சல் ஊரிலும் பின்னர் பூத்துறையிலும் வந்து தங்கினர் என கூறப்படுகிறது.
தொடக்க காலத்தில் பூத்துறை ஊரில் 1111 ஆம் ஆண்டு ஒரு ஆலயம் இருந்ததற்கான சான்றுகள் (கல்வெட்டு) உள்ளன.
கி.பி 900 ஆண்டுகளில் ஆய் அரசர்களும் சோழ அரசர்களும் இந்துமத கோவில்களுக்கு நிலங்கள் தானமாக வழங்கிய போது, அருகில் உள்ள பிற மதத்தினருக்கும் அரசு வரி நீக்கம் செய்து நிலம் தானமாக கொடுத்ததாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. கரிநந்தடக்கன் என்ற ஆய் அரசன் முன்சிறை சபைக்காரிலிருந்து, உழக்கடிவிளை என்ற நிலத்தை விலைக்கு வாங்கி, பார்திவசேகரபுரம் (பார்திவபுரம்) கோயில் கட்டியபோது பக்கத்தில் உள்ள சிறிய கோவில்களுக்கும், ஏனைய மதத்தினரின் ஆராதனை ஆலயங்களுக்கும் இடம் கொடுத்ததாக திற்பரப்பு சாசனத்தில் கூறப்படுகிறது. (ஆதாரம்: கேரள சரித்திரம் -ஸ்ரீதரமேனோன்) அதன்படி பார்திவபுரத்தின் அருகில் உள்ள பூத்துறையில் உள்ள தம்பிரான் கோவிலுக்கும், கிறிஸ்தவ ஆலயத்திற்கும் வரிதீர்த்து இடம் கொடுத்ததாக ஓலைச்சுவட்டில் உள்ளது. ஆகையால் பூத்துறை கிறிஸ்தவ ஆலயம் சிறிய அளவில் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்று உறுதிபடக் கூற இயலவில்லை. எனினும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பது மட்டுமே தெளிவாகிறது.
தொடக்க காலத்தில் பூத்துறை மக்கள் இந்து மத விசுவாசிகளாக இருந்தனர். இவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிய போதும் இந்து மத சடங்குளில் பங்கேற்று வந்தனர். பூ மிதித்தல் (🔥 தீச் சாட்டம்) 4 தலைமுறைகளுக்கு முன்பு வரை பூத்துறையில் இருந்தது. திருமுழுக்கு யோவான் திருவிழாவிற்கு முன்தினம் தீச்சாட்டம் சடங்கு நடைபெற்று வந்தது. மேலும் களியலடி, குஸ்தி (மல்யுத்தம்), சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகளும் சமீக காலம் வரை நடைபெற்றது. ஞானசௌந்தரி, தர்மராசா, ஸ்நாபக அருளப்பர் போன்ற நாடகங்களும் நடத்தப்பட்டு வந்தது.
பாதுகாவலர் திருவிழா தேர்பவனிக்கு கொண்டு செல்லப்படுகிற திருமுழுக்கு யோவான் சுரூபமானது, கடல்வழி வந்ததாக கூறப்படுகிறது.
1329-ல் கொல்லம் மறைமாவட்டம் உருவான போதும், 1533-ல் கோவா மறைமாவட்டம் உதயமான போதும், 1557-ல் கொச்சி மறைமாவட்டம் உருவானபோதும் பூத்துறை பங்கு இந்த மறைமாவட்டங்களில் இணைந்திருந்தது.
தொடக்க நாட்களில் கொல்லம், கோவா, கொச்சி மறைமாவட்டங்களில் இருந்து இயேசு சபை குருக்களும், கர்மலித்தா சபை குருக்களும் பூத்துறை வந்து, பூத்துறை மற்றும் அதன்கீழ் இருந்த சுற்றியுள்ள பங்குகளில் திருமுழுக்கு மற்றும் திருவருட்சாதனங்களை வழங்கினர்.
1599 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக சிரியன் சபைகளின் ஆதிக்கத்தைக் கடந்து, அதிலிருந்து மாறி இலத்தீன் கத்தோலிக்க சபை கேரளத்தில் வளர்ந்த காலத்திலும், அதற்கு முன்பும் வாழ்ந்தவர்களின் மிக முக்கியமான பங்காக பூத்துறை விளங்கியது.
1937 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டம் உருவானது. எனினும் பூத்துறை கொச்சி மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. பின்னர் 20.05.1955 அன்று திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்தில் இணைந்தது.
கருங்கல் சுவர் தரையோடுகள் ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட புதிய ஆலயம் கட்டப்பட்டு அருட்பணி. கிளாரன்ஸ் பெர்னாண்டஸ் பணிக்காலத்தில், 1960 ஆம் ஆண்டு Rt. Rev. Dr. Vincent Derera, OCD அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
1993 ஆம் ஆண்டு அருட்பணி. சேவியர் அலெக்சாண்டர் அவர்களால் ஆலயமானது தெற்கு பகுதியில் நீளம் கூட்டப்பட்டு சிலுவை வடிவில் புதுப்பிக்கப்பட்டு, அருட்பணி. ஆண்ட்ரூ காஸ்மாஸ் பணிக்காலத்தில், மேதகு ஆயர் சூசை பாக்கியம் அவர்களால் 15.06.1996 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி மாதாவின் காட்சி புதுமை நடந்த பிறகு 2009 ஆம் ஆண்டு ஆலயத்தின் அருகில் மாதா கெபி கட்டப்பட்டது.
ஆலய புதுமைகள்:
பழைய ஆலய நற்கருணை பெட்டிக்கு தங்கமுலாம் பூச தீர்மானித்து, அன்றைய கணக்கப்பிள்ளை திரு. குருசடிமை இரணியல் ஊரில் இருந்து தங்கப்பொடியை வாங்கி வந்து கொண்டிருந்த வேளையில், மிடாலம் குருசடிக்கு அருகில் வருகையில் திருடர்கள், கணக்கப்பிள்ளையை அணுகி உன் கையில் என்ன என்று கேட்டனர். திருடர்களைக் கண்டு பயந்த கணக்கப்பிள்ளை, நான் பிச்சைக்காரன், குழந்தைகளின் பசியைப் போக்க பிச்சையாக உணவை பெற்றுக் கொண்டு போகிறேன் என்றார். நம்பிக்கையில்லாத திருடர்கள் மூட்டையை பிரிக்க தங்கப்பொடியானது சுடுசோறாக மாறியிருந்தது!!!. பின்னர் கணக்கப்பிள்ளை அங்கிருந்து புறப்பட்டு பூத்துறை வந்தபோது, மீண்டும் தங்கப்பொடியாக மாறியிருந்தது. அந்தப் பொடியை பயன்படுத்தி நற்கருணைப்பேழைக்கு தங்கமுலாம் பூசப்பட்டது.
கடுமையான காய்ச்சல், கொடிய நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள், ஆலய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து புளி கரைத்து குடிக்க நோய்கள் நீங்கி நலம் பெற்றனர்.
18.08.2008 அன்று இரவு 07:00 மணியளவில் பீடச்சிறுவர்கள் ஜெபம் செய்து கொண்டிருந்த போது, நற்கருணைப் பேழையின் முன்பு தேவமாதாவின் மூன்று உருவங்கள் தோன்றிய அற்புதம் நடந்தது. பின்னர் மீண்டும் இருமுறை இந்த அதிசயம் நடந்தது.
பங்கின் சபைகள் இயக்கங்கள்:
1. மரியாயின் சேனை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. மாதா சபை
4. அருளப்பர் சபை
5. புனித மிக்கேல் அதிதூதர் சபை
6. மீனவர் சங்கம்
7. விசைப்படகு உரிமையாளர் சங்கம்
8. நாட்டுப் படகு உரிமையாளர் சங்கம்
9. பீடச்சிறார்
10. பாடகற்குழு
11. மறைக்கல்வி
தூய லூர்து மாதா கெபி உள்ளது.
துறவற சபை:
Our Lady of Mercy, Cochin
புனித திருமுழுக்கு யோவான் நூலகம் உள்ளது.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. அருட்பணி. லூயிஸ் கொன்சாலூஸ் (1922-24)
2. அருட்பணி. ஜோசப் கிரகோரி நசியான்ஸினோ (1924-34)
3. அருட்பணி. கபிரியேல் மலியகல், OFM Cap (1934-37)
4. அருட்பணி. ஜோசப் கோளந்தற (1937-42)
5. அருட்பணி. என். டிக்கோஸ்டா (1942-43)
6. அருட்பணி. கெல்லஞ்சேரி (1943-47)
7. அருட்பணி. பெர்னார்ட் (1947-48)
8. அருட்பணி. தோமஸ் (1948-52)
9. அருட்பணி. ஜேம்ஸ் அமர்தோ (1952-53)
10. அருட்பணி. கிளாரன்ஸ் பெர்னாண்டஸ் (1953-58)
11. அருட்பணி. சிரில் டிக்கோஸ்டா (1958-61)
12. அருட்பணி. நிக்கோலஸ் டிக்குரூஸ் (1961-68)
13. அருட்பணி. ஆன்றனி சேவியர் (1968-69)
14. அருட்பணி. ஸ்டீபன். G (1969-75)
15. அருட்பணி. ஜோசப் மரியா (1975-76)
16. அருட்பணி. ஜஸ்டின் அலெக்ஸ் (1976)
17. அருட்பணி. ஆன்றோ (1976-77)
18. அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் (1977)
19. அருட்பணி. பார்லோ டிக்குரூஸ் (1977-80)
20. அருட்பணி. கஷ்மீர் கொன்ஸாகோ (1980-82)
21. அருட்பணி. ஹைசிந்து எம். நாயகம் (1982-85)
22. அருட்பணி. வில்லியம் லூர்தையன் (1985-87)
23. அருட்பணி. நிக்கோலாஸ் (1987-1991)
24. சேவியர் அலெக்சாண்டர் (1991-94)
25. அருட்பணி. ஏசுதாசன் மத்தியாஸ் (1994-95)
26. அருட்பணி. ஆன்றோ கோஸ்மாஸ் (1995-97)
27. அருட்பணி. ஸ்டெலஸ் (1997) பணிக்காலத்தில் சாலை விபத்தில் மரணமடைந்தார்
28. அருட்பணி. றோபர்ட் ஸ்ரீலங்கா (1997-98)
29. அருட்பணி. ஷாஜூ ஆன்றனி (1998-2000)
30. அருட்பணி. ஜெரோம் அல்போன்ஸ் (2000-03)
31. அருட்பணி. அகஸ்டின் ஜான் (2003-06)
32. அருட்பணி. ஜான் விக்டர் (2006-07)
33. அருட்பணி. டார்வின் பீட்டர் (2007-09)
34. அருட்பணி. ஃப்ரடி சாலமன் (2009-11)
35. அருட்பணி. ஆல்பர்ட், Ass PP (2009-10)
36. அருட்பணி. தோமஸ், Ass PP (2010-11)
37. அருட்பணி. டைசன் (2011-12)
38. அருட்பணி. டென்சன், Asst. PP (2011-
39. பேரருட்பணி. நிக்கோலஸ் (2012-14)
40. அருட்பணி. பாஸ்கர் ஜோசப் (2014-15)
41. அருட்பணி. ஆன்றோ ஜோரிஷ் (2015-19)
42. அருட்பணி. ரெஜீஸ் பாபு Asst. PP
43. அருட்பணி. அன்சல் ஆன்றனி, CMF (2019 முதல்...)
ஆலயத்தில் பல்வேறு புதுமைகள் நடந்து வருவதால் பல பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான இறைமக்கள் இவ்வாலயம் வந்து ஜெபித்து இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர். மேலும் தவக்காலங்களில் திருச்சிலுவைப் பாதைக்காகவும் பல்வேறு ஆலயங்களில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் வருகின்றனர்.
புதுமைகள் நிறைந்த பூத்துறை புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்திற்கு வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..
தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி.
அன்சல் ஆன்றனி, CMF. மற்றும் பங்குத்தந்தையின் வழிகாட்டலில் ஆலய அலுவலக ஊழியர்.
புகைப்படங்கள்: பங்கின் உறுப்பினர் திரு. ராஜன் கொச்சன் அவர்கள்.