418 புனித ஆசீர்வாதப்பர் ஆலயம், ஆசீர்புரம்

         

புனித ஆசீர்வாதப்பர் ஆலயம்

இடம் : ஆசீர்புரம், சின்னக்காம்பாளையம் (PO), தாராபுரம் தாலுகா.

மாவட்டம் : திருப்பூர் 

மறைமாவட்டம் : கோவை

மறைவட்டம் : தாராபுரம்

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்கு : புனித அந்தோனியார் ஆலயம், அலங்கியம். 

பங்குத்தந்தை : அருட்பணி. G. M. ஆல்பர்ட் அமல்ராஜ், MMI

உதவி பங்குத்தந்தை : அருட்பணி. M. சார்லஸ், MMI

குடும்பங்கள் : 61

வழிபாட்டு நேரங்கள்: 

ஞாயிறு காலை 06:30 மணி ஜெபமாலை, காலை 07:00 மணி திருப்பலி, காலை 08:30 மணி மறைக்கல்வி 

திங்கள் மாலை 06:30 மணி ஜெபமாலை மற்றும் ஆசீர்வாதப்பர் நவநாள் ஜெபம், மாலை 07:00 மணி திருப்பலி.  

செவ்வாய், புதன், வியாழன் காலை 06:00 மணி ஜெபமாலை, காலை 06:30 மணி திருப்பலி.

வெள்ளி மாலை 06:30 மணி ஆராதனை, 07:00 மணி திருப்பலி

சனி மாலை 06:30 மணி ஜெபமாலை, 07:00 மணி திருப்பலி

மாதத்தின் முதல் சனி மாலை 06:30 மணி ஜெபமாலை, 07:00 மணி திருப்பலி. அதனைத் தொடர்ந்து மாதா திருஎண்ணெய் பூசி ஆசீர்வதித்தல் தொடர்ந்து, மாதா தேர்பவனி

திருவிழா : பிப்ரவரி மாதம் முதல் ஞாயிறு கொடியேற்றம். இரண்டாவது ஞாயிறு திருவிழா, தேர்பவனி. 

வழித்தடம் : 

 தாராபுரம் -பொள்ளாச்சி சாலையில், சின்னக்காம்பாளையம் பிரிவில் இருந்து தெற்கு நோக்கி 2 கி.மீ தூரத்தில் ஆசீர்புரம் உள்ளது. 

Location map : https://goo.gl/maps/E7Wcqk6UqigxNgtY6

வரலாறு :

அழகிய ஆசீர்புரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சிறு ஆலயம் கட்டப்பட்டு, தாராபுரம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. பின்னர் அருட்பணி. பா. இருதயசாமி பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 11.02.1987 அன்று மேதகு ஆயர் M. அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

தாராபுரம் பங்கின் கிளைப்பங்காக இருந்த போது, புனித இராயப்பர் சபை குருக்களின் வழிகாட்டுதலில், 60 ஆண்டுகளாக ஆன்மீகப் பயணத்தை சிறப்பாக தொடர்ந்தது ஆசீர்புரம் இறை சமூகம். 

பின்னர் 04.06.2017 அன்று தனிப்பங்காக உயர்த்தப் பட்டு, MMI சபை குருக்களிடம் ஒப்படைக்கப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. துரை சேவியர், MMI அவர்கள் பொறுப்பேற்றார். உதவி பங்குத்தந்தையர்களாக அருட்பணி. மார்சலின் மற்றும் அருட்பணி. சகாய ஜெனிபர் ஆகியோரும் இணைந்து பணியாற்றினர். 

23.04.2019 ல் அருட்பணி. மார்ட்டின், MMI அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

பங்குத்தந்தை அருட்பணி. மார்ட்டின் அவர்களுடன் சில காலங்கள் அருட்பணி. ஆல்பர்ட் ராஜ், MMI அவர்கள் உதவிப் பங்குத்தந்தையாக பணியாற்றினார்.  அவரைத் தொடர்ந்து அருட்பணி. பென்சிகர், MMI உதவிப் பங்குத்தந்தையாக பணியாற்றினார். 

அருட்பணி. G. M. ஆல்பர்ட் அமல்ராஜ், MMI அவர்களுடன் முதல் ஆண்டு அருட்பணி. A. டேவிட் லிவிங்ஸ்ட்டன், MMI பணிபுரிந்தார். இரண்டாம் ஆண்டு அருட்பணி. S. பிரேம்நாத், MMI பணிபுரிந்தார். தற்போது அருட்பணி. M. சார்லஸ், MMI பணிபுரிகிறார்.

பங்கு வளர்ச்சிப்பணிகள்:

1. அருட்பணி. D. சேவியர், MMI அவர்கள் பணிக்காலத்தில் குருக்கள் இல்லமானது கட்டப்பட்டு, கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு L. தாமஸ் அக்குவினாஸ். DD அவர்களால் 23.11.2018 அன்று புனிதப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டது.

2. அருட்பணி. மார்ட்டின், MMI அவர்கள் காலத்தில் ஆலயத்தினுடைய ஓடுகள் மற்றும் ஜன்னல்கள் மாற்றப்பட்டன.

3. அருட்பணி. G. M. ஆல்பர்ட் அமல்ராஜ், MMI அவர்களுடைய பணிக் காலத்தில் 

லூர்து அன்னை கெபி அருகில் 40அடி உயர மின்விளக்கு கம்பமும், அதில் 6 அதிகதிறன் கொண்ட மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு, ஆலய வளாகம் முழுவதும் ஒளிர்விர்க்கப்பட்டது.

ஆலய வளாகத்தில் தென்னை மரங்கள் நடப்பட்டு, சொட்டுதண்ணீர் வசதியும் செய்யப்பட்டது.

மரிய அன்னைக்கு  புதிய தேர் செய்யப்பட்டது

ஆலய வளாகத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறைகள் கட்டப்பட்டன.

பக்தர்கள் எளிதாக ஆலயத்திற்கு வருவதற்க்கு சின்னகாம்பாளையம் பிரிவில், மிகப்பெரிய அளவிலான ஆலய பெயர்பலகை பொருத்தப்பட்டது.

ஆலயம் மற்றும் பலிபீடம் புதுப்பிக்கப்பட்டு, கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு L. தாமஸ் அக்குவினஸ் DD அவர்களால் 16.07.2022 அன்று  அர்ச்சிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது.

ஆலய வளாகத்தில் CCTV CAMERA பொருத்தப்பட்டன.

ஆலய வளாகத்தில் உள்ள கலையரங்கம் புதுப்பிக்கப்பட்டது.

ஆலயத்தை சுற்றியும் மற்றும் ஆலய வளாகத்தில் (paved blocks) பதிக்கப்பட்டது.

ஆலய உட்புறத்தில்  பக்தர்கள் வசதியான முறையில் அமர்வதற்க்கு மர பெஞ்சுகள் அமைக்கப்பட்டன.

புனித லூர்து அன்னை கெபி :

07.10.2016 அன்று அருட்பணி. A. M. ஜோசப் தன்ராஜ் அவர்களால் புனித லூர்து அன்னை கெபிக்கு அடிக்கல் போடப்பட்டு, ஆசீர்புரம் இறை மக்களின் உழைப்பாலும் நன்கொடைகளாலும் அழகுற கட்டப்பட்டு, 19.02.2017 அன்று கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

இந்த அழகிய லூர்து அன்னை கெபியில் ஏராளமான புதுமைகள் நடந்து வருவதால், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து ஜெபித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

பங்கில் மரியாயின் சேனை சிறப்புற செயல்பட்டு வருகிறது.

காணிக்கை அன்னை சபை அருட்சகோதரிகள், மருந்தகம் அமைத்து இப்பகுதி மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. மார்ட்டின், MMI (2019-ம் ஆண்டு) மற்றும் பங்குத்தந்தை அருட்பணி. ஆல்பர்ட் அமல்ராஜ், MMI (2025-ம் ஆண்டு) ஆகியோர்