189 இடைவிடா சகாய மாதா ஆலயம், குளச்சல்


தூய இடைவிடா சகாய மாதா ஆலயம்

இடம் : ஆயர் லியோன் நகர், குளச்சல்

மாவட்டம் : கன்னியாகுமரி

மறை மாவட்டம் : கோட்டார்

நிலை : சிற்றாலயம்

பங்கு : புனித காணிக்கை மாதா ஆலயம், குளச்சல்.

பங்குத்தந்தை : அருட்பணி மரிய வின்சென்ட் எட்வின்

இணை பங்குத்தந்தையர்கள் :
அருட்பணி ரமேஷ்
அருட்பணி துரை

ஞாயிறு திருப்பலி : காலை 06.15 மணிக்கு

புதன் கிழமை மாலை 06.30 மணிக்கு நவநாள் திருப்பலி.

திருவிழா : ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும்.

சிறுகுறிப்பு :

2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் குளச்சல் பகுதி பெரும் பாதிப்படைந்தது.

மக்கள் பலர் வீடுகளை இழந்து வாழ்விழந்து தவித்தனர்.

சுனாமி பேரலையில் பலர் உயிரிழந்தனர், தங்களது குடும்ப உறவுகளை இழந்து தவித்து கண்ணீரோடு தங்கள் வாழ்வை தொடர்ந்தனர்.

இந்த மக்களுக்காக குளச்சல் பகுதியில் ஆயர் லியோன் நகர் அமைக்கப்படு சுமார் 400 வீடுகள் கட்டப்பட்டு குடியமர்த்தப் பட்டனர். தற்போது இங்கு சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இத் தொகுப்பு வீடுகளின் மத்தியில் இம் மக்களின் ஆன்மீகத் தேவைக்காகவும், இவர்களின் உள்ளத்துயரை போக்கவும் தூய சகாய மாதா ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டது.

அதன்படி 07-10-2009 அன்று வட்டார முதல்வர் M. ஜோசப் ஜஸ்டஸ் அவர்களால் ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது.

ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 09-01-2012 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இது ஒரு சிற்றாலயம் ஆகும், குளச்சல் புனித காணிக்கை மாதா ஆலயம் இதன் பங்கு ஆலயமாகும்.

பகல் நேரங்களில் எப்போதும் ஆலயத்தில் இம்மக்கள் தனித்தனியாகவோ குழுவாகவோ இணைந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இவர்கள் ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது வெளிநபர்கள் சென்று இடையூறு செய்வதை விரும்புவதில்லை. அந்த அளவிற்கு இறை விசுவாசத்தை கொண்டுள்ளனர்.

இவர்களின் ஜெபத்தை கேட்கும் போது ஏதோ இனம்புரியாத சோகம் நம்மையறியாமல், நம்மிலும் தோன்றுவது இவர்களின் துயரம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

இம் மக்களின் மனத்துயர் நீங்கவும் இவர்கள் வாழ்வு ஒளி பெற்று வாழவும் தூய இடைவிடா சகாய மாதா வழியாக இறைவனிடம் மன்றாடுவோம்...!