19 சகாய மாதா ஆலயம், சடையன்குழி


சகாய மாதா ஆலயம்.

இடம் : சடையன்குழி

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித ஞானபிரகாசியார் ஆலயம், இலவுவிளை.

குடும்பங்கள் : 140
அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

பங்குத்தந்தை : அருட்பணி. ஆன்றணி ஜெயக்கொடி.

திருவிழா : மே மாதத்தில்.

வரலாறு :

கி.பி 1970 ஆம் ஆண்டில் சடையன்குழி பகுதியில் கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டு வாழ்ந்த 15 குடும்பங்கள், காப்புக்காடு பங்குத்தந்தை அருட்பணி. மரியதாஸ் அடிகளாரின் உதவியுடன் சகாய அன்னை குருசடியை சடையன்குழி முச்சந்தியில் (மூன்று சாலைகள் சந்திக்கும் இடம்) நிறுவி வழிபாடுகள் நடைபெற்று வந்தன. 

1972 ஆம் ஆண்டு இலவுவிளை பங்குடன் இணைக்கப்பட்டு, பின்னர் கிளைப் பங்காக உயர்த்தப் பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. 

2003 ஆம் ஆண்டு புதுக்கடை பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. 

தற்போதைய ஆலயம் கட்டப்பட்டு 19.05.1993 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 

பின்னர் மீண்டும் இலவுவிளை பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டு வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி செல்கிறது. 

2019 ஆம் ஆண்டு ஆலயத்தின் முன்புறம் அழகிய கெபி வைக்கப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.