412 புனித சூசையப்பர் ஆலயம், நரசிங்கபுரம்

 

புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : நரசிங்கபுரம், 631402

மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறை மாவட்டம்.
மறை வட்டம் : திருவள்ளூர்

பங்குத்தந்தை : அருட்பணி. V. அமல்ராஜ் OMI

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அமலோற்பவ அன்னை ஆலயம், பேரம்பாக்கம்

குடும்பங்கள் : 60
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

புதன் மாலை 06.30 மணிக்கு புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி.

திருவிழா : மே 01 ஆம் தேதி.

வழித்தடம் : சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தண்டலம். தண்டலம் கூட்ரோடிலிருந்து அரக்கோணம் சாலையில் பேரம்பாக்கம் - நரசிங்கபுரம்.

Location map : https://maps.app.goo.gl/FjZKVXuD7znsXPps8

வரலாறு :

நரசிங்கபுரம் கிராமத்தில் வசித்து வந்த 8 கத்தோலிக்க குடும்பங்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி செய்ய செல்லம் பட்டிடை பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை இன்னையா அவர்கள், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு மேதகு ஆயர் அந்தோணிமுத்து அவர்களின் அனுமதியுடன், நரசிங்கபுரம் பிளேஸ் தோட்டத்தில் ஆலயம் கட்டி 19.04.1966 அன்று பேராயர் மேதகு அருளப்பா அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

பின்னர் இவ்வாலயம் செல்லம் பட்டிடை பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.

செல்லம் பட்டிடை பங்குத்தந்தை அருட்தந்தை இன்னையா அவர்களைத் தொடர்ந்து,
அருட்தந்தை அந்தையா (1968-1969),
அருட்தந்தை இருதயராஜ் (1969-1970)
அருட்தந்தை லூயிஸ் (1970-1971)
அருட்தந்தை அந்தோனிராஜ் (1971-1974)
அருட்தந்தை ஜோசப் சொல்லானால் (1974-1988) இவரது பணிக்காலத்தில் ஆலயத்தை சுற்றிலும் வேலி அமைக்கப் பட்டது. சாராயத்தை ஒழிக்க அருப்பாடு பட்டார்.

அருட்தந்தை ஜோசப் (1988-1990)
அருட்தந்தை நம்பிக்கைநாதன் (1990-1994)
அருட்தந்தை பாக்கியராஜ் ராயன் ச. ச (1994-1997) மற்றும் அருட்தந்தை ஸ்டீபன் பெர்னாண்டோ ச. ச

அருட்தந்தை சௌந்தர்ராஜ் ச. ச, அருட்தந்தை ஜான்சன் ச. ச (1997-1998)

அருட்தந்தை லூர்து ராஜ் (1998-2000) ஆகியோர் நரசிங்கபுரம் பங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

பின்னர் செங்கல்பட்டு மறை மாவட்டம் உருவான போது நரசிங்கபுரம் ஆலயமானது, பிஞ்சிவாக்கம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.
இந்த காலகட்டத்தில்
அருட்தந்தை இக்னேசியஸ் (2002)
அருட்தந்தை ஜான் மரிய ஜோசப் (2003-2006)
அருட்தந்தை அமலதாஸ் (2007)
அருட்தந்தை அந்தோனிராஜ் Cpps (2008-20011) இவரது பணிக்காலத்தின் போது 12.06.2011 அன்று பேரம்பாக்கம் ஆலயம் தனிப் பங்காக உயர்த்தப் பட்டு அருட்தந்தை பிரகாசம் பனியடிமை OMI அவர்கள் பங்குத்தந்தை ஆனார். நரசிங்கபுரம், பேரம்பாக்கம் பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

தொடர்ந்து அருட்தந்தை G. செபாஸ்டியன் OMI (2012-2016) பணிக்காலத்தில் 2016 ஆம் ஆண்டில் பொன்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

தொடர்ந்து அருட்தந்தை புருனோ பாப்திஸ் OMI (2016-2019)

2019 முதல் அருட்தந்தை V. அமல்ராஜ் OMI அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக பணிபுரிந்து நரசிங்கபுரம் இறை சமூகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. V. அமல்ராஜ் OMI.