585 புனித மார்ட்டின் தே போரஸ் ஆலயம், வெள்ளமடம்


புனித மார்ட்டின் தே போரஸ் ஆலயம் 

இடம் : சகாயநகர், வெள்ளமடம், வெள்ளமடம் (PO), 629305

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : கோட்டார் 

மறைவட்டம் : தேவசகாயம் மவுண்ட் 

நிலை : பங்குத்தளம் 

பங்குத்தந்தை : அருள்பணி. J. சைமன் 

குடும்பங்கள் : 73

அன்பியங்கள் : 3

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு 

செவ்வாய், வெள்ளி திருப்பலி : மாலை 07.00 மணிக்கு 

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு ஆராதனை. 

திருவிழாக்கள் :

புனித மார்ட்டின் தெ போரஸ் திருவிழா : நவம்பர் மாதம் 3 ம் தேதி. 

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பத்து நாட்கள் பங்கு திருவிழா.

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்சகோதரர்.  ஆன்சல் 

2. அருள்சகோதரர். விஜய் 

3. அருள்சகோதரர். பெரோஸ் 

வழித்தடம் :

நாகர்கோவில் வடசேரி -திருநெல்வேலி வழித்தடத்தில், வடசேரியிலிருந்து 7கி.மீ தொலைவில் வெள்ளமடம் அமைந்துள்ளது. 

பேருந்துகள் : வடசேரி 14 எண் பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி செல்லும் 1 to1 அல்லாத பேருந்துகள். 

Location map : https://g.co/kgs/HDscP3

வரலாறு :

வெள்ளமடம் புனித மார்ட்டின் தே போரஸ் ஆலயமானது நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. 

1973 ஆம் ஆண்டு தேவசகாயம் மவுண்ட் பங்கில் மிஷனரி அருள்பணியாளர் பணியாற்றி வந்தார். அவ்வேளையில் வெள்ளமடம் பகுதியில் ஐந்து கத்தோலிக்க குடும்பங்கள் வசித்து வந்தனர். இவர்கள் ஆலயம் செல்லவும், திருப்பலியில் பங்கேற்கவும் 7 கி.மீ நடந்து சென்று ஆரல்வாய்மொழி (தேவசகாயம் மவுண்ட்) ஆலயத்திற்கு சென்று வந்தனர். இந்த மக்களின் ஆன்மீகத் தேவையை உணர்ந்த அருள்பணியாளர் ஒரு சிறு ஓலை கொட்டகையில் திருப்பலியை நடத்த திட்டமிட்டார். 

மக்கள் ஆலயத்தின் தேவையை உணர்ந்து கொண்டனர். மக்களின் முயற்சி மற்றும் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் நெடுஞ்சாலைக்கு மிக அருகில் 9 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. ஆனால் இந்த இடம் மிகவும் செங்குத்தாகவும், அகலம் குறைவாகவும் இருந்தது. இப்படியான இடத்தில் ஐந்து குடும்பங்களைக் கொண்ட மக்களால் ஆலயம் கட்டப்பட்டு, 07.02.1975 அன்று மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, வாரத்திற்கு ஒருமுறை சனிக்கிழமைகளில் மாலையில் திருப்பலி நடைபெற்று வந்தது. 

1978 ஆம் ஆண்டு அருள்பணி. S. ஜோசப் பணிக்காலத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நிறைவேற்றப்பட்டு வருகின்றது. 

அமெரிக்காவின் (Child care scheme of Catholic relief service of USA) சேவை அமைப்பு மூலமாக ஒருசிறு கொட்டகை மிஷனரி பணிக்காக கட்டப்பட்டது.

பின்னர் ஆலயத்தை சேர்ந்த இறைமக்களுள் ஒருவர் 32 சென்ட் நிலத்தை புனித மார்ட்டின் தே போரஸ் ஆலயத்தை கட்ட வழங்கினார். 

தேவசகாயம் மவுண்ட் பங்கின் கிளைப் பங்காக நீண்ட காலமாக செயல்பட்டு வந்த வெள்ளமடம், 2015 -ஆம் ஆண்டில் தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. ஜோசப் ஜஸ்டஸ் அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். 

35 வருடங்கள் பழைமையான இந்த ஆலயத்தில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, இடநெருக்கடி ஏற்பட்டது.  மேலும் ஆலயத்தில் விரிசல்கள் மற்றும் ஒழுக்கு காணப்பட்டதால், 31.07.2011 அன்று ஆலயத்தை சந்திக்க வந்த ஆயரிடம், புதிதாக பெறப்பட்ட இடத்தில் ஆலயம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆயர் அவர்களால் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு பங்குத்தந்தை அருள்பணி. ஜோசப் ஜஸ்டஸ் வழிகாட்டுதலில் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 12.01.2018 அன்று மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்களால் 

அர்ச்சிக்கப் பட்டது. மற்றும் சமூக நலக்கூடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

தற்போது இரண்டாவது பங்குத்தந்தையாக அருள்பணி. J. சைமன் அவர்கள் 2018 மே மாதத்தில் பணிப் பொறுப்பேற்று, வெள்ளமடம் இறைசமூகத்தை ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தி வருகின்றார்.

பங்கின் குருசடி :

வழித்துணை புனித அந்தோனியார் குருசடி. 

மார்ட்டின் தே போரஸ் அரங்கம் ஒன்று உள்ளது. 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. மறைக்கல்வி 

2. பாலர்சபை 

3. சிறார் இயக்கம் 

4. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம் 

5. இளையோர் இயக்கம் 

6. மரியாயின் சேனை 

7. இயேசுவின் திருஇருதய சபை 

8. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

9. திருவழிபாட்டுக் குழு

10. பங்குப்பேரவை

11. பக்தசபைகள் ஒருங்கிணையம்

12. அன்பிய ஒருங்கிணையம்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. J. சைமன்.