644 புனித செபஸ்தியார் ஆலயம், நன்னியாவூர்

  

புனித செபஸ்தியார் ஆலயம் 

இடம் : நன்னியாவூர், இளையான்குடி தாலுகா

மாவட்டம் : சிவகங்கை 

மறைமாவட்டம் : சிவகங்கை 

மறைவட்டம் : பரமக்குடி 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : தூய சகாய அன்னை ஆலயம், சாலைக்கிராமம் 

பங்குத்தந்தை : அருள்பணி. M. ரமேஷ் 

பங்குத்தந்தையின் தொடர்பு எண்  : 9626365509

குடும்பங்கள் : 15

திருப்பலி : கிறிஸ்துமஸ் விழா திருப்பலி 

தினமும் காலை மாலை ஜெபம். 

வழித்தடம் : சாலைக்கிராமம் -RS மங்கலம் வழித்தடத்தில் நன்னியாவூர் அமைந்துள்ளது. 

வரலாறு :

விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டவர்கள் நன்னியாவூர் மக்கள். 

நன்னியாவூரில் தொடக்க காலத்தில் குடிசை ஆலயம் கட்டப்பட்டது. 

பின்னர் சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடு வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது. தற்போது ஆலயம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. 

அடிப்படை வசதிகளற்ற குறிப்பாக போக்குவரத்து வசதிகள் இல்லாத ஊர் நன்னியாவூர். ஆகவே இம் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவும், இவர்களது வாழ்வாதாரம் மேம்படவும், விரைவில் புதிய ஆலயம் கட்டப்படவும் புனித செபஸ்தியார் வழியாக இறைவனிடம் ஜெபிப்போம்.

மேலும் இவ்வாலயத்திற்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என விரும்புபவர்களுக்காக பங்குத்தந்தையின் தொடர்பு எண் : 9626365509

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. மா. ரமேஷ்