803 புனித அந்தோனியார் ஆலயம், கோரிப்பள்ளம்

     

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: மத்தேயு தெரு, கோரிப்பள்ளம், 627002

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: பாளையங்கோட்டை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சவேரியார் பேராலயம், பாளையங்கோட்டை - 627 002

பங்குத்தந்தை: அருள்பணி. செ. சந்தியாகு

உதவிப் பங்குத்தந்தையர்கள்:

அருள்பணி. செல்வின்

அருள்பணி. இனிகோ இறையரசு, MIC.

குடும்பங்கள்: 21

அன்பியம்: 1 (வேளாங்கண்ணி மாதா அன்பியம்)

செவ்வாய்க்கிழமை மாலை 06:30 மணி ஜெபமாலை, 07:00 மணி திருப்பலி

தினமும் மாலையில் 07:00 மணிக்கு ஜெபமாலை நடைபெறும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மறைக்கல்வி நடைபெறும். மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை திருப்பலி, நற்கருணை ஆசீர்

திருவிழா: மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பத்து நாட்கள் நடைபெறும் 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Rev.Fr. Albert William, SJ

2. Rev.Fr. Martin Peter Raja, SSS

3. Rev.Sr. Hilaria Soundari

4. Rev.Sr. Lawrentia Monsarrat Pushpa (Monsa), FMM

வரலாறு:

கோரிப்பள்ளம், மத்தேயு தெருவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம், சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர், மண்ணால் எழுப்பப்பட்ட சுவரில் ஓலைக் கூரையுடன் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் செங்கல் சுவர் ஓட்டுக் கூரையாக மாறியது. பாளையங்கோட்டை பேராலயப் பங்குத் தந்தையர்களின் வழிகாட்டலில் இந்த ஆலயம் செயல்பட்டு வந்தது. 

வெறும் குடிசையாக இருந்த இவ்வாலமானது இன்று மிகச் சிறந்த அழகிய ஆலயமாக உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணமாக விளங்கிய திரு. தேவசகாயம் உபதேசியார் அவர்களின் பணி குறிப்பிடத்தக்கது.

தற்போது உள்ள புதிய ஆலயம் 02.01.1991 அன்று பங்குத்தந்தை அருட்பணி. S. ஜோக்கிம் அடிகளாரின் தலைமையில், பாளை ஆயர் மேதகு. S. இருதயராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பாளை. ஆயர் மேதகு ஆ. ஜூடு பால்ராஜ் அவர்களின் ஆசீரோடு கோவை ஆயர் மேதகு. M. அம்புரோஸ் மதலைமுத்து அவர்களால் 2004 ஆம் ஆண்டு ஆலயத்தில் நற்கருணை ஸ்தாபகம் செய்யப்பட்டது.

புனித பிரான்சிஸ் சவேரியாரின் 500-வது பிறந்த நாளை முன்னிட்டு, பங்குத்தந்தை அருள்பணி. I. லூர்துராஜ் அவர்களால் மாதா கெபி, மணிக்கூண்டு, நியான் விளக்கிற்கு 15.5.2006 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, 26.12.2006 அன்று அருட்பணி. M. ஆல்பர்ட் வில்லியம் SJ அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

21.6.2016 அன்று ஆலயத்திற்கு தண்ணீர் கிடைக்க போர்வெல் ஒன்று போடப்பட்டு, நல்ல தண்ணீர் கிடைக்கிறது.

2009ஆம் ஆண்டு முதல் "அன்னை வேளாங்கண்ணி அன்பியம்" தொடங்கப்பட்டு, மாதம் ஒரு அன்பியக் கூட்டம்,  ஒருவர் வீட்டில் இரவு 07:00 மணிக்கு நடைபெறுகிறது.

மாணவர்கள் ஆன்மீகத்தில் வளர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரையிலும் மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறுவதுடன், காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை மரியாயின் சேனையினரால் ஜெப வழிபாடும் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 07:00 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஒன்பதாம் திருவிழா திருப்பலிக்குப் பின்னர் இரவு 08:00 மணிக்கு புனித அந்தோணியாரின் சப்பர தேர்பவனியும் நடைபெறும்.

ஆலய அர்ச்சிப்பு நாளாகிய ஜனவரி மாதம் 02-ஆம் தேதியன்றும், செப்டம்பர் மாதம் 08-ஆம் தேதி அன்னை வேளாங்கண்ணி அன்பிய விழா, மாதாவின் பிறப்புப் பெருவிழா திருப்பலியும் சிறப்பாக நடைபெறுகிறது.

8-வது அன்பிய மண்டலமாக இவ்வாலயப்பகுதி திகழ்ந்து வருகிறது. ஆகவே கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக இங்கு கொண்டாடப் படுகிறது.

இறைமகன் இயேசுவை நம்பி இவ்வாலயத்திற்கு வருவோர் பலர். புனித அந்தோணியாரின் துணையுடன் உடல் நோய் நீங்கி நலம் பெற்றும், பலர் குழந்தைப் பாக்கியம் பெற்றும், தேர்வில் வெற்றியும், வேலை வாய்ப்பும் நல்லவாழ்கை அமையப் பெற்றும் வருகின்றனர்.

Church Contact no: +91 99769 39491

Church Facebook page: https://www.facebook.com/anthoniyaarchurchkoripallam/

வழித்தடம்: பாளையங்கோட்டை - ஹைகிரவுண்ட் சாலையில், தீயணைப்பு நிலையத்தின் பின்புறம் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location map: https://g.co/kgs/dVmTzL

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்பணி. செ. சந்தியாகு அவர்களின் வழிகாட்டலில் ஆலய பொறுப்பாளர்கள்.