இடம்: பூட்டேற்றி, 629157
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: குழித்துறை
மறைவட்டம்: மாத்திரவிளை
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தெருவுக்கடை
2. புனித குழந்தை தெரசாள் ஆலயம், திரேஸ்புரம் பாலூர்
பங்குத்தந்தை அருட்பணி. ஷிஜின்
குடும்பங்கள்: 360
அன்பியங்கள்: 9
ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி
திங்கள், புதன், வியாழன், சனி திருப்பலி காலை 06:00 மணி
செவ்வாய், வெள்ளி திருப்பலி மாலை 06:30 மணி
திருவிழா: பிப்ரவரி மாதத்தில் சாம்பல் புதனுக்கு முந்தைய ஞாயிறு நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. அந்தோணி முத்து, வாரணாசி மறைமாவட்டம்
2. அருட்பணி. சகாய அருள், வாரணாசி மறைமாவட்டம்
3. அருட்பணி. ஆல்பர்ட், MMI
4. அருட்பணி. ஷாஜன், வாரணாசி மறைமாவட்டம்
5. அருட்பணி. பிரகாஷ், இயேசு மற்றும் அன்னையின் திரு இருதயங்களின் சபை
1. அருட்சகோதரி. M. பொனிபேஸ் செபாஸ்டின்
2. அருட்சகோதரி. M. செல்வி, SRA
3. அருட்சகோதரி. சீரில், CTC
4. அருட்சகோதரி. கிளாரா
5. அருட்சகோதரி. வியான்னி மேரி
6. அருட்சகோதரி. எல்சி
7. அருட்சகோதரி. D. செல்வி
வழித்தடம்: கருங்கல் தேங்காய்பட்டணம் வழித்தடத்தில், தாழையங்கோட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து, 1கி.மீ தொலைவில் பூட்டேற்றியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
மார்த்தாண்டம் -தொலையாவட்டம் விழுந்தயம்பலம் -பூட்டேற்றி.
Location map: St. Antony's Church, Pootteti https://g.co/kgs/AGJ8rgw
வரலாறு:
பூட்டேற்றி ஊரில் 1783 ஆம் ஆண்டு கல்லினால் வடிவமைக்கப்பட்ட சிலுவை அமைத்து, புனித அந்தோணியார் பெயரில் ஒரு குருசடியாக செயல்பட்டு வந்தது. கிறிஸ்தவ மறையில் தன்னை புதிதாக இணைத்துக் கொண்ட அன்புடையான் என்பவரே இம்முயற்சியில் ஈடுபட்டார். 16 சென்ட் நிலமும் அன்பளிப்பாக வழங்கினார். இக்குருசடி சில ஆண்டுகளிலியே ஒரு சிற்றாலயமாக மாற்றம் பெற்றது. இக்காலத்தில் அருட்பணி. எலியாஸ் என்பவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மக்களுக்கு இறை பக்தியை ஊட்டி வந்தார்.
1940-ம் ஆண்டு வரை பூட்டேற்றி ஆலயமானது புதுக்கடை பங்குத்தளத்துடனும்,
1941 - 1950 வரை இனயம் பங்குத்தளத்துடனும்,
1951 - 1956 வரை மங்கலகுன்று பங்குத்தளத்துடனும் இணைக்கப்பட்டது.
10-06-1956 -ல் பூட்டேற்றி தனிப்பங்காக மாற்றம் பெற்றது. இப்பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. வென்சஸ்லாஸ் அவர்கள் பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டார்கள். அவர்கள் காலத்தில் தான் ஆலய வளர்ச்சிக்காக பல இடங்களிலும் நிலங்கள் வாங்கப்பட்டன. மக்கள் திருப்பலிக் கொண்டாட்டத்தில் வசதியாக பங்கெடுக்க, 1960 ஜூன் மாதம் புதிய ஆலயம் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
இவ்வாலயத்தின் பீடப்பகுதி சிலுவை வடிவில் அருட்பணி. மரிய அற்புதம் அவர்களால் விரிவு படுத்தப்பட்டு 25.06.1993 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
1995 -ல் புதிய பங்குப் பணியாளர் இல்லமானது, அருட்பணி. வின்சென்ட் ராஜ் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்டது. அதோடு ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான ஏற்பாடு செய்து பல வீடுகள் கட்டப்பட்டது.
2005-ம் ஆண்டு அருட்பணி. ஞா. ஜெயக்குமார் அவர்களால் ஓடுகளால் வேயப்பட்ட பழுதடைந்த பழைய ஆலயம் முழுவதும் அகற்றப்பட்டு, மக்களின் ஒத்துழைப்பாலும், அருட்பணியாளரின் முயற்சியாலும் பழைய ஆலயம் விரிவாக்கப்பட்டு, புதிய ஆலயமாக புதுப்பொலிவுடன் கட்டி எழுப்பப்பட்டு, 19.05.2006 அன்று கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் அவரது அரிய முயற்சியால் பொன்விழா நினைவாக திருமண மண்டபம் கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது.
2009 -ம் ஆண்டு அருட்பணி. சாம் மேத்யூ அவர்களால் பொன்விழா அரங்கத்தின் மேல் பாகத்தில் பல்வேறு பணிகளைச் செய்யப்பட்டதுடன், மண்டபத்திற்கான இருக்கைகள், மண்டபத்தின் மேல்மாடி மார்பிள் போட்டதோடு, ஜெனரேட்டர் வாங்கி வைக்கப்பட்டது. 14-2-2010 அன்று லூர்து மாதா கெபிக்கு அடிக்கல் போடப்பட்டு, 15-8-2010 -ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆலயத்தின் உட்பக்கம் அழகான பீடமும், அதைச்சுற்றி கிரானைட்டும் போடப்பட்டு ஆலயம் அழகு செய்யப்பட்டது. தெருவுக்கடையில் புனித அந்தோணியார் விற்பனைக்கூடம் கட்டி முடிக்கப்பட்டு கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. மேலும் கொடிமரம், மற்றும் கல் விளக்கும் வைக்கப்பட்டது.
கெபிக்கு முன்னால் செல்லும் பாதை சட்டமன்ற உறுப்பினர் நிதி உதவியாலும், பாலூர் பஞ்சாயத்துத் தலைவர் முயற்சியாலும் சரி செய்யப்பட்டது. அரசின் உதவியால் துணை சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. ஆலயத்திலும், பொன்விழா அரங்கிலும் இன்வெர்ட்டர் வாங்கி வைக்கப்பட்டது.
அருட்பணி. ஷிஜின் அவர்களின் வழிகாட்டலில், மக்களின் ஒத்துழைப்புடன் ஆலய விரிவாக்கம் மற்றும் கோபுரம் அமைக்க 27.02.2022 அன்று அருட்பணி. மரிய வின்சென்ட் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 02.02.2024 அன்று பாளையங்கோட்டை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:
1. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்
2. கத்தோலிக்க சேவா சங்கம்
3. புனித வின்சென்ட் தே பவுல் சபை
4. கைகள் இயக்கம்
5. கிராம முன்னேற்ற சங்கம்
6. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
7. கோல்பிங் இயக்கம்
8. பாலர் சபை
9. சிறுவழி இயக்கம்
10. இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம்
11. இளையோர் இயக்கம்
12. பாடகற்குழு
13. பீடச் சிறார்
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1.அருட்பணி. வென்சஸ்லாஸ் (10.06.1956 -25.05.1967)
2. அருட்பணி. செபாஸ்டின் (25.05.1967 -18.05.1973)
3. அருட்பணி. வின்சென்ட் ரொட்ரிகோ (18.05.1973 -01.06.1974)
4. அருட்பணி. மத்தியாஸ் (01.06.1974 -18.06.1976)
5. அருட்பணி. வெனான்சியூஸ் (18.06.1976 -23.06.1981)
6. அருட்பணி. ஜூலியஸ் (23.06.1981 -06.05.1986)
7. அருட்பணி. அந்தோணிமுத்து (06.05.1986 -26.05.1989)
8. அருட்பணி. மரிய அற்புதம் (26.05.1989 -29.05.1994)
9. அருட்பணி. வின்சென்ட்ராஜ் (29.05.1994 -13.05.1997)
10. அருட்பணி. லாரன்ஸ் (13.05.1997 -18.11.1997)
11. அருட்பணி. லாரன்ஸ் (18.11.1997 -15.05.2001)
12. அருட்பணி. சூசை (15.05.2001 -25.05.2003)
13. அருட்பணி. ஞா. ஜெயக்குமார் (25.05.2003 -10.06.2006)
14. அருட்பணி. ஜோசப் ஜெயசீலன் (10.06.2006-20.01.2008)
15. அருட்பணி. அந்தோணிமுத்து (20.01.2008 -19.05.2009)
16. அருட்பணி. சாம் மேத்யூ (19.05.2009 -31.05.2013)
17. அருட்பணி. டென்சிங் (31.05.2013 -21.06.2016)
18. அருட்பணி. ஆன்றணி பாஸ்கர் (21.06.2016 -07.06.2021)
19. அருட்பணி. ஷிஜின் (07.06.2021--)
தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஷிஜின் அவர்கள்.
புகைப்படங்கள்: பிரியம் ஸ்டுடியோ





