674 புனித சூசையப்பர் ஆலயம், அம்பாசமுத்திரம்

      
புனித சூசையப்பர் ஆலயம்

இடம்: அம்பாசமுத்திரம்

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: அம்பாசமுத்திரம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்: 

1. புனித நற்செய்தி அருளப்பர் ஆலயம், வைராவிகுளம்

2. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், செட்டிமேடு

3. புனித சவேரியார் ஆலயம், ஆலடியூர்

4. திருக்குடும்ப ஆலயம், சிங்கம்பட்டி

5. புனித அன்னம்மாள் ஆலயம், ஊர்க்காடு

ஆலயம் இல்லாத கிளைப்பங்குகள்:

1. மேல ஏர்மாள்புரம்

2. வேம்பையாபுரம்

3. அடச்சாணி

4. பிரம்மதேசம்

5. கௌதமபுரி

6. பள்ளக்கால்

7. பொதுக்குடி

பங்குத்தந்தை: அருள்பணி. S. பிரான்சிஸ் சேவியர்

Contact no: +91 95007 96112

குடும்பங்கள்: 200 (கிளைப்பங்குகள் சேர்த்து 500+)

அன்பியங்கள்: 8

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி: காலை 07.30 மணி

வாரநாட்களில் திருப்பலி: காலை 05.30 மணி

புதன் மாலை 06.30 மணி புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி

வெள்ளி மாலை 06.30 மணி திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.30 மணி திருப்பலி நற்கருணை ஆசீர்

திருவிழா: ஏப்ரல் 22-ம் தேதி முதல் மே 01-ம் தேதி வரையிலான பத்து நாட்கள்

அம்பை மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருள்சகோதரி. M. ரிகார்டா, புனித லூயிகா சபை இத்தாலி

2. அருள்சகோதரி. S. அமலோற்பவம், புனித அன்னாள் சபை, சுவிட்சர்லாந்து

3. அருள்சகோதரி. D. பிரிஜெனிட்டா, புனித அன்னாள் சபை கோவை

4. அருள்சகோதரி. P. ஆரோக்கிய மிக்கேல் மெர்சி, புனித அமலோற்பவ மாதா சபை, மதுரை

5. அருள்சகோதரி. P. ஆரோக்கிய ஜீவிதா, புனித அமலோற்பவ மாதா சபை, மதுரை

6. அருள்சகோதரி. G. பனி ஜென்சி, புனித அமலோற்பவ மாதா சபை மதுரை

7. அருள்சகோதரி. S. ஜாக்குலின் ஸ்டெல்லா, புனித பெத்தனி சபை வட மாநிலம்

8. அருள்சகோதரி. சவரியம்மாள், அமலவை சபை (ஆலடியூர்)

வழித்தடம்: திருநெல்வேலி பாபநாசம் வழித்தடத்தில் அம்பாசமுத்திரம் அமைந்துள்ளது.

Location map: https://goo.gl/maps/3vJfs8PVd7MhgnQH7

வரலாறு:

"கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர்" திருப்பாடல்கள் 36:7

தென்பொதிகை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த அம்பாசமுத்திரம் நகரில் அமைந்துள்ள, புனித சூசையப்பர் ஆலய வரலாற்றைக் காண்போம்....

நம்பிக்கை கொண்டு நாடிவருபவர் யாராகிலும் அவர்கள் வேண்டுதல் நிறைவேற்றி வாழ்வில் வசந்தம் வீசச் செய்பவர் புனித சூசையப்பர்‌. பிள்ளைவரம் கிடைத்தவர்கள், வேலைவாய்ப்பு பெற்றவர்கள், தீராத நோய் தீர்ந்தவர்கள், குடும்ப சமாதானம் வாய்த்தவர்கள், திருமண வரன் கிடைத்தோர் என நன்றி சொல்ல வருபவர்கள் பலரையும் எப்பொழுதும் ஆலயத்தில் காணலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆலயம் இருக்கும் இடத்தில் முன்பு அய்யனார்குளம் எனும் குளம் இருந்தது. கி.பி 1900 ஆம் ஆண்டிற்கு முன்னரே அப்போதைய ஆட்சியரால் இவ்விடம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டு, சிறு சிற்றாலயம் கட்டப்பட்டு, ஆறு குடும்பத்தினர் வழிபாடுகள் நடத்தி வந்தனர். இவ்வாலயத்தில் உள்ள புனித சூசையப்பர் சுரூபமானது வெளிநாட்டிலிருந்து கடல்வழியாக கொண்டு வரப்பட்டதாகும்.

அந்நாட்களில் மழைக்காலங்களில் ஆலயத்தைச் சுற்றி தண்ணீர் நிரம்பி 'நோவாவின் பெட்டகம்' போல ஆலயம் காணப்படும். மக்கள் தண்ணீரைக் கடந்து தான் வழிபாடுகளில் பங்கேற்க இயலும். ஆரம்பத்தில் செபவழிபாடுகளை திரு. இரா. அந்தோணிமுத்து அவர்களும், தொடர்ந்து வீரவநல்லூரைச் சேர்ந்த  ஆரோக்கியம் உபதேசியார் அவர்களும் செய்து வந்தனர். வீரவநல்லூர் பங்குத்தந்தையர் அவ்வப்போது வந்து திருப்பலி நிறைவேற்றி இறைமக்களின் ஆன்மீகத் தேவைகளுக்கு துணை நின்றனர். இதனால் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, பிற சமய மக்களும் வந்து வழிபட்டு செல்லும் ஆலயமாக வளர்ந்தது.

இந்நிலையில் வீரவநல்லூர் பங்குத்தந்தையாக கி.பி 1958 முதல் கி.பி 1969 வரை பணிபுரிந்த அருள்பணி.T. A. மிக்கேல் அடிகளார், இப்பகுதியில் ஒரு பெரிய ஆலயம் தேவையென உணர்ந்து, அதனை நிறைவேற்ற உறுதிபூண்டு, கி.பி 1965 ஆம் ஆண்டு அப்போதைய மறைமாவட்ட முதன்மைகுரு பேரருள்பணி. ஜோசப் டயஸ் அடிகள் அவர்கள் அடிக்கல் நாட்ட, தற்போது நாம் காணும் கம்பீரமான அழகிய ஆலய கட்டுமானப் பணிகளைத் துவக்கினார். அருள்பணி. மிக்கேல் அடிகளாரைத் தொடர்ந்து, ஓராண்டு பணிபுரிந்த அருள்பணி. மரிய தம்புராஜ் அடிகள் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்தார். இறுதியாக அருள்பணி. வலண்டின் டயஸ் பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, அப்போதைய மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் அவர்களால் 01.07.1971 அன்று புனித சூசையப்பர் ஆலயம் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து வீரவநல்லூரின் கிளைப்பங்காக அம்பாசமுத்திரம் செயல்பட்டு வந்தது.

கி.பி 1973 ஆம் ஆண்டில் மதுரை உயர் மறைமாவட்டத்தில் இருந்து பிரிந்து பாளையங்கோட்டை மறைமாவட்டம் உதயமான போது வீரவநல்லூர் பாளை மறைமாவட்டத்தின் கீழ் வந்தது.

வீரவநல்லூர் பங்குத்தந்தையாக பணிபுரிந்த அருள்பணி. பாஸ்கல் டி சில்வா அவர்கள், 1977 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தில் குருக்கள் இல்லம் கட்டினார்.‌ தொடர்ந்து பணிபுரிந்த அருள்பணி. குழந்தைராஜ், அருள்பணி. S. L. A. ஜோசப் ராஜ் ஆகியோர் இவ்வாலய வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றனர். இவ்வேளையில் தென்காசியிலிருந்து அவ்வப்போது வந்து திருப்பலி நிறைவேற்றிச் சென்ற அருள்பணி. சூசை மாணிக்கம் அவர்களை அம்பாசமுத்திரம் இறைசமூகம் நன்றியுணர்வோடு நினைவு கூருகிறது.

அம்பை மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு ச. இருதயராஜ் ஆண்டகை அவர்கள் 10.05.1983 அன்று அம்பாசமுத்திரத்தை தனிப்பங்காக உயர்த்தினார். 

முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. மரிய செயராசன் சே.ச அவர்கள் 01.07.1983 அன்று பணிப் பொறுப்பேற்றார். இவரது பணிக்காலத்தில் தூய லூர்து அன்னை கெபி கட்ட 11.02.1984 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 11.02.1985 அன்று மேதகு ஆயர் ச. இருதயராஜ் ஆண்டகையால் அர்ச்சிக்கப் பட்டது.

அருள்பணி. S. சந்தியாகு பணிக்காலத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் திருவிழா கமிட்டியானது நிர்வாகக் கமிட்டியாக செயல்படத் தொடங்கியது. 2004 ஆம் ஆண்டு குருக்கள் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. 

இறைமக்களால் ஆலய வளாகத்தின் முன்புறம் புனித அந்தோணியார் கெபி, குழந்தை இயேசு கெபி, ஆலய வெள்ளிவிழாவை முன்னிட்டு புனித சூசையப்பர் கெபி ஆகியன அமைக்கப்பட்டது. 

மேலும் அருள்பணி. S. சந்தியாகு பணிக்காலத்தில் அம்பாசமுத்திரம் தனிப்பங்கானதன் வெள்ளிவிழா 2008 ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அருள்பணி. S. சந்தியாகு அவர்களால் வெள்ளிவிழா அரங்கம் கட்டப்பட்டது.

2015 ம் ஆண்டு அருள்பணி. சைமன் செல்வன் அவர்களின் முயற்சியால் புதியக் கொடிமரம் அமைக்கப்பட்டது

அருள்பணி. S. பிரான்சிஸ் சேவியர் பணிக்காலத்தில் துயில்நிலை புனித சூசையப்பர் சிற்றாலயம் மற்றும் இறைமக்களின் முழு ஒத்துழைப்பு, நன்கொடையுடன் மணிக்கூண்டு ஆகியன கட்டப்பட்டு, 26.12.2018 அன்று பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு A. ஜூடு பால்ராஜ் D.D அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, பாளை மறைமாவட்ட செயலக முதல்வர் அருள்பணி. அந்தோனி குரூஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

2019 -2020 காலகட்டத்தில் பங்குத்தந்தை முயற்சியாலும், இறைமக்கள் ஒத்துழைப்பாலும் ஆலயத்தின் உட்புறம் தரை, மேற்கூரை, ஆலயபீடம், புதுப்பிக்கப்பட்டது.

ஆலய பங்கேற்பு அமைப்புகள்:

1. திருக்குடும்ப சபை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை

3. வளனார் இளையோர் இயக்கம்

4. பாலர்சபை

5. பாடகற்குழு

6. பீடச்சிறார்

7. மறைக்கல்வி

8. நிர்வாகக்குழு

பங்கில் உள்ள இல்லம்/ கெபி/ அரங்கம்/ சிற்றாலயம்:

1. அமலவை அருள்சகோதரிகள் இல்லம்

2. தூய லூர்து மாதா கெபி

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை அரங்கம்

4. வெள்ளிவிழா அரங்கம்

5. துயில்நிலை புனித சூசையப்பர் சிற்றாலயம்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. மரிய செயராசன், SJ

2. அருள்பணி. அப்போலின் மிராண்டா, SJ

3. அருள்பணி. டேவிட், SJ

4. அருள்பணி. S. L. அருளப்பன்

5. அருள்பணி. J. அமிர்தராச சுந்தர்

6. அருள்பணி. S. சந்தியாகு

7. அருள்பணி. ராஜேஷ்

8. அருள்பணி. ஜோசப் ஜான்சன்

9. அருள்பணி. T. A. பெர்க்மான்ஸ்

10. அருள்பணி. சைமன் செல்வன்

11. அருள்பணி. S. பிரான்சிஸ் சேவியர்

புதுமைகள் பலபுரியும் அம்பை புனித சூசையப்பர் ஆலயம் வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை‌ அருள்பணி. S. பிரான்சிஸ் சேவியர் அவர்கள்