இடம் : அன்னைநகர் (ஐரேனிபுரம்-சானல்முக்கு)
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.
நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை.
குடும்பங்கள் : 227
அன்பியங்கள் : 11
ஞாயிறு திருப்பலி : காலை 07.15 மணிக்கு.
பங்குத்தந்தை : அருட்பணி சேவியர் புரூஸ்.
திருவிழா : மே மாதத்தில்.
அன்னைநகர் வரலாறு :
கள்ளித்தட்டு (காப்புக்காடு) பங்கின் ஒரு பகுதியாக இருந்த ஐரேனிபுரம், பாலோடு, மறுகண்டான்விளை, மாடன்விளை, தட்டான்விளை, முழங்குழி, மேல்குன்று பகுதிகளில் சுமார் 160 குடும்பங்கள் வசித்து வந்தனர்.
கள்ளித்தட்டு ஆலயம் சென்று வர சிரமமாக இருந்ததால் அப்போதைய பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை ஆல்பின் ராபி அடிகளார் அவர்கள், இப்பகுதி மக்கள் ஒன்றுகூடி மறைக்கல்வி நடத்தவும், செபமாலை செபிக்கவும் அனுமதி வழங்கினார்.
ஆனால் மறைக்கல்வி நடத்த இடமில்லாததால் திருமதி. ரெஜிபாய் அவர்கள் இல்ல வளாகத்தில் அனுமதி கொடுக்க, 12-09-1987 அன்று திரித்துவபுர வட்டார ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ஜேசுதாசன் தாமஸ் அவர்கள் மறைக்கல்வியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து ஆலயம் அமைக்க நிலங்கள் வாங்கப் பட்டன. வாங்கப்பட்ட நிலத்தில் 14.11.1984 ல் ஓலைகொட்டகை அமைத்து அதில் செபமாலையும், மறைக்கல்வியும் நடத்தப்பட்டு வந்தன. இதனை பார்வையிட்ட அருட்தந்தை ஜேசுதாசன் தாமஸ் அவர்களும், மறை மாவட்ட பரிபாலகர் அருட்தந்தை சூசை மரியான் அவர்களும் அன்னைமரியாளின் பிறந்தநாள் இருபதாம் நூற்றாண்டின் நினைவாக, ஆலயம் அமைந்த இடத்திற்கு அன்னைநகர் எனப் பெயர் சூட்டினர்.
இந்த ஓலைக் கொட்டகை ஆலயத்தில் 18.02.1989 அன்று பங்குத்தந்தை அருட்பணி. ஆல்பின் ராபி அவர்கள் முதல் திருப்பலி நிறைவேற்றினார்.
புதிய ஆலயம் கட்ட 31.05.1990 அன்று அனுமதியை மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்கள் பெற்றுக் கொடுத்தார்.
மக்களின் உழைப்பாலும் நன்கொடைகளாலும், பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 01.09.1995 அன்று குருகுல முதல்வர் பேரருட்பணி. எரோணிமூஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. அன்று முதல் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.
பின்னர் தும்பாலி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.
தற்போது தனிப்பங்காக உயர்த்தப்பட்டு சிறப்பாக வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது அன்னைநகர் இறைசமூகம்.