736 புனித அருளானந்தர் ஆலயம், சுப்ரமணியபுரம்

    

புனித அருளானந்தர் ஆலயம்

இடம்: சுப்ரமணியபுரம், திருச்சி, 620020

மாவட்டம்: திருச்சி

மறைமாவட்டம்: திருச்சி

மறைவட்டம்: பொன்மலை

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித பொன் செபஸ்தியார் ஆலயம், ஜி கார்னர்

2. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், உஸ்மான் அலி தெரு

3. புனித சக்திநிறை செபஸ்தியார் ஆலயம், வார்டர் லைன்

4. புனித அந்தோனியார் ஆலயம், சுப்ரமணியபுரம்

5. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கொட்டப்பட்டு முகாம்

6. கிறிஸ்து அரசர் ஆலயம், பென்சனர் காலனி

பங்குத்தந்தை: அருட்பணி.‌ M. ஜான் பீட்டர்

Contact no: +91 9443132838

உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி.‌ ஜோசப் ஸ்டான்லி

குடும்பங்கள்: 750 

அன்பியங்கள்: 25

திரு வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 05:00 மணி காலை 07:00 மணி மாலை 06:00 மணி

மாதத்தின் முதல் ஞாயிறு காலை 09:15 மணி ஆங்கிலத்தில் திருப்பலி

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி

புதன் மாலை 06:15 மணி புனித அருளானந்தர் நவநாள் திருப்பலி

வியாழன் மாலை 06:15 மணி குழந்தை இயேசு நவநாள் திருப்பலி

வெள்ளி பிற்பகல் 03:00 மணி இறை இரக்க ஆண்டவர் நவநாள் திருப்பலி

சனி மாலை 06:15 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி

திங்கட்கிழமை மாலையில் ஒவ்வொரு அன்பியங்களுக்கான நற்கருணை ஆராதனை வழிபாடு நடைபெறும்

திருவிழா: ஜனவரி மாதம் 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 04 ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி.‌ ஜான் தர்மநாதன், SDB

2. அருட்பணி.‌ விக்டர் டி சூசா, SJ

3. அருட்பணி.‌ அருண் பிரசாத், Diocese of Trichy 

4. அருட்பணி.‌ செல்வ ஜெயமணி, Diocese of Trichy

5. அருட்சகோதரி.‍ ஜூலி அற்புதமேரி, புனித பிரான்சிஸ்கு தூய இதய மரியன்னை சபை (பிரான்ஸ்)

6. அருட்சகோதரி.‌ ரூபி அலெக்ஸாண்டிரியா, புனித பிரான்சிஸ்கு தூய இதய மரியன்னை சபை (பாண்டிச்சேரி)

Location map: https://g.co/kgs/CPUrVr

வழித்தடம்: ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து, விமான நிலையம் செல்லும் சாலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP office) அலுவலகத்திற்கு எதிரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு:

1954  ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தின் கண்காணிப்பில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது. ஆயர் இல்லத்திலிருந்து அருட்பணி. இராசயப்பர் இப்பகுதியை கண்காணித்து, திருப்பலி நிறைவேற்றினார். பலருக்கு திருமுழுக்குகள் அளிக்கப்படுப்பட்து. அருட்பணி. பத்திநாதர், அருட்பணி. பிரான்சிஸ் ஆகியோரும் இப்பகுதிக்கு வந்து பணியாற்றினார்கள்.

1962 - புனித அருளானந்தர் பெயரால் இப்பகுதி ஒரு புதிய பங்காக மலர்ந்தது. அருட்பணி. G. அற்புத சாமி முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. ஆலய சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. 

1972 - அருட்பணி. A. அருள்சாமி பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். பங்குமக்கள் தொகைக்கேற்ப ஆலயம் பெரிதாக விரிவாக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை தோறும் தெருக்கள் வாரியாக ”சமூக உறவுக் கூட்டங்கள்” நடத்தப்பட்டது. பங்கிற்கென ஒரு பள்ளி ஆரம்பிக்கப்படுகிறது. 

1981 - அருட்பணி. K. தேவராஜ் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். வணிக வளாகத்துடன் கூடிய பள்ளிக் கட்டிடமும் உயர்ந்த மணிக்கூண்டு கோபுரமும் அமைக்கபட்டது.  குழந்தை இயேசு நவநாள் ஆரம்பிக்கப்பட்டது.

1987 - அருட்பணி. A. M. ஸ்தனிஸ்லாஸ் சந்திரன் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். மணிக்கூண்டு. கோபுரப்பணி பள்ளிக் கட்டிடப் பணி நிறைவடைந்தது. பங்குப் பேரவை கூட்டங்கள், சபைக் கூட்டங்கள் நடத்தும் அரங்கம் கட்டபடுகிறது. பங்கு குழந்தை இயேசு திருத்தலமாகவும் மலர்ந்தது. 

1994 - அருட்பணி. S. சில்வெஸ்டர் பங்குத்தந்தையாக பொறுபேற்றார். ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. புதிய சிலுவைப்பாதை ஸ்தலங்கள் அமைக்கப்பட்டது. முதன் முதலாக பங்கு நிதிக்குழு அமைக்கப்பட்டது.

1999 - அருட்பணி. S. லூயிஸ் பிரிட்டோ பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். பங்கு 26 பகுதிகளாக பிரி்க்கப்பட்டு 26 அன்பியங்களாக அமைக்கப்பட்டன. புதிய எழில் மிகு கோவில் எழுப்ப திட்டமிடப்பட்டது. 05-05-2002 புதிய ஆலயம் எழுப்பப்பட்டு மேதகு ஆயர். அந்தோனி டிவொட்டோ அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. இறை சமூகம் என்ற பெயர் அன்பியம் என மாற்றம் பெற்றது. 

2003 - அருட்பணி. S. ஜேம்ஸ் செல்வநாதன் பங்குத்தந்தையாக  பொறுப்பேற்றார். பள்ளி கட்டிடம் விரிவுபடுத்தப்பட்டது. 14-04-2005 குழந்தை இயேசுவின் 1000 -வது வாரம் கொண்டாடப்பட்டது. இறை இரக்கத்தின் நவநாள் அறிமுகம் செய்யப்பட்டது. 

2008 - அருட்பணி. S. அருள்தாஸ் பங்குத்தந்தையாக பொறுப்பேற்கிறார். புதிதாக பங்குப் பணியாளார் இல்லம் கட்டப்பட்டது.

2009 - அருட்பணி. S. ஆரோக்கியராஜ் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். ஆலயத்திற்கு புதிதாக  ஜெனரேட்டர் வாங்கப்பட்டது. புதிய ஆலய மணி வாங்கப்பட்டது. 2012-2013 ஆண்டுகளில் பங்கின் பொன்விழா ஆண்டாக ஒருவருடம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பொன்விழா நினைவாக ”இறை அலைகள்” என்ற பாடல் புத்தகத்தை மேதகு ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் வெளியிடப்பட்டது.

2012- அருட்பணி. S. இஞ்ஞாசி முத்து பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். கோவிலின் வண்ணம் மாற்றம் பெறுகிறது. பள்ளி கட்டிடம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 

01.01. 2017 அன்று அருட்பணி. M. ஜான் பீட்டர் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். கோவிலின் பீடம், குழந்தை இயேசு பீடம், ஆரோக்கிய அன்னை பீடம் ஆகியன 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அழகுற புதுப்பிக்கப்பட்டது. 2018 செப்டம்பர் மாதத்தில் புதிய ஆலயமணி நிறுவப்பட்டது. புனித பொன் செபஸ்தியார் சிற்றாலயம் புதிதாக கட்டப்பட்டு 24.01.2021 அன்று திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி லூர்து அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

அன்னைக்கு புகழ் சேர்க்க அழகிய கெபி எழுப்பப்பட்டு, 20.10.2021 அன்று மேதகு ஆயர் ஆரோக்கியராஜ் அவர்களால் அர்ச்சித்து புனிதம் செய்யப் பட்டது. கோவிலின் கொடி மரம் புதிதாக நிறுவப்படுகிறது. ஆலயத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிய வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

பங்கில் உள்ள கெபிகள்:

லூர்து மாதா கெபி

சகாய மாதா கெபி

அன்பியங்களின் பெயர்கள்:

1. புனித சவேரியார்

2. புனித வனத்து சின்னப்பர்

3. தூய காணிக்கை அன்னை

4. புனித பிரான்சிஸ் அசிசியார்

5. புனித இஞ்ஞாசியார்

6. புனித அமல அன்னை

7. புனித அந்தோனியார்

8. புனித ஜான் போஸ்கோ

9. புனித அருளானந்தர்

10. தூய பாத்திமா அன்னை

11. திரு இருதய ஆண்டவர்

12. புனித சூசையப்பர்

13. தூய சகாய அன்னை

14. தூய கார்மேல் அன்னை

15. நல்லாயன்

16. புனித தோமையர்

17. புனித செபஸ்தியார்

18. தூய வியாகுல அன்னை

19. தூய அடைக்கல அன்னை

20. தூய விண்ணேற்பு அன்னை

21. தூய செபமாலை அன்னை

22. கிறிஸ்து அரசர்

23. புனித அன்னாள்

24. தூய ஆரோக்கிய அன்னை

25. குழந்தை இயேசு

பங்கில் உள்ள பக்த சபைகள் மற்றும் இயக்கங்கள்:

1. திரு இருதய சபை

2. பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை

3. மரியாயின் சேனை

4. புனித வின்சென்ட் தே பவுல் சபை

5. மாதா சபை இளம் பெண்கள்

6. நற்செய்தி பணிக்குழு

7. மறைக்கல்வி பணிக்குழு

8. ஜான்பிரிட்டோ சேவை மையம்

9. புனித ஜான் பிரிட்டோ இளையோர் இயக்கம்

10. கிறிஸ்துவ தொழிலாளர் இயக்கம்

11. இந்திய கிறிஸ்துவ மறுமலர்ச்சி இயக்கம்

12. பாடகற்குழு

பங்கில் உள்ள துறவற சபை:

மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் இல்லம் உள்ளது. இந்த சபையின் அருட்சகோதரிகள்

ஆதிமூலம் நடுநிலைப் பள்ளி

புனித ஜான் பிரிட்டோ நடுநிலைப் பள்ளி, டோல்கேட்

மற்றும் மரியின் ஊழியர் ஓய்வு பெற்ற அருட்சகோதரிகள் இல்லம், டோல்கேட்

மதர் அலெக்ஸிஸ் விடுதி ஆகியவற்றை சிறப்புற நடத்தி வருகின்றனர்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஜான் பீட்டர் அவர்கள்.