46 புனித அந்தோணியார் ஆலயம், திக்கணங்கோடு


புனித அந்தோணியார் ஆலயம்.

இடம் : திக்கணங்கோடு.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித ஆரோபண அன்னை ஆலயம், மாத்திரவிளை.

குடும்பங்கள் : 120
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 05.00 மணிக்கு.

பங்குத்தந்தை : அருட்பணி பென்சர் சேவியர்.

திருவிழா : ஜனவரி மூன்றாம் வாரத்தில் பத்து நாட்கள் நடைபெறும்.

வரலாறு :

மிகவும் பழைமையானது. திக்கணங்கோடு தலத் திருச்சபை. புனித தோமையார் வழி கிறிஸ்தவர்கள் இங்கு குருசடி அமைத்து இறைவனை வழிபட்டு வந்ததாக கூறப் படுகிறது. 

கி.பி 505 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் இருந்து வந்த அருட்பணி. அதொரியானிஸ் அவர்கள் இங்கு இறைப் பணியாற்றியுள்ளார். அவர் இறந்த போது அவரது உடல் இவ்வாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனை ஆலய கட்வெட்டில் காணலாம். 

தற்போது காணப்படும் அழகிய ஆலயம் 22.02.2003 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. மாத்திரவிளை பங்கின் கிளைப் பங்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.