821 அற்புத குழந்தை இயேசு ஆலயம், காட்டுப்புத்தூர்

    

அற்புத குழந்தை இயேசு ஆலயம்

இடம்: காட்டுப்புத்தூர்

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: லால்குடி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஜெயராக்கினி மாதா ஆலயம், தொட்டியம்

பங்குத்தந்தை அருட்பணி. U. S. ஆரோக்கிய சாமி

குடும்பங்கள்: 7

மாதத்தின் முதல் வியாழக்கிழமை மாலை 06:00 மணிக்கு திருப்பலி

திருவிழா: ஜனவரி மாதம் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில்

வழித்தடம்: தொட்டியம் -மோகனூர் சாலையில், தொட்டியத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் காட்டுப்புத்தூர் அமைந்துள்ளது.

Location map: Infant Jesus Church https://maps.app.goo.gl/5hZSnHkofro7Nx8L8

வரலாறு:

காட்டுப்புத்தூர் பகுதி கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் 15கி‌.மீ தொலைவில் உள்ள, தொட்டியம் பங்கு ஆலயத்திற்கு ஆன்மீக காரியங்களுக்கு சென்று வந்தனர்.

ஆகவே தொட்டியம் பங்குத்தந்தை அருட்பணி. V. I. பீட்டர் அவர்களின் வழிகாட்டலில், காட்டுப்புத்தூர் மக்கள் நிதி சேகரித்து ஒருஏக்கர் நிலம் வாங்க முயற்சி செய்தனர். அப்போதைய கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் வாங்கவுள்ள இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு, இடமும் பிடித்துப் போகவே, இரண்டு ஏக்கர் நிலமாக வாங்குமாறு கூறி அதற்கு நிதியுதவியும் செய்ய, இரண்டு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.

தொடர்ந்து தொட்டியம் பங்குத்தந்தை அருட்பணி. M. D. சாலமோன் அவர்களின் முயற்சியால் காட்டுப்புதூரில் Infant Jesus Matriculation School கட்டப்பட்டு, கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் 15.05.2002 அன்று ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. 

இதன் பின்னர் காட்டுப்புதூர் மக்களின் ஆன்மீக தேவைகளுக்கு ஆலயம் தேவை என்பதை உணர்ந்து, பங்குத்தந்தை அருட்பணி. சாலமோன் அவர்களின் முயற்சியால், Rev.Fr. Paul Billavd, Sanfrancisco, USA அவர்களின் நிதி பங்களிப்பைக் கொண்டு, மறைமாவட்ட ஒத்துழைப்புடன் பள்ளிக்கூடம் அமைந்துள்ள வளாகத்தில் அழகிய அற்புத குழந்தை இயேசு ஆலயம் கட்டப்பட்டு, 19.09.2004 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பள்ளிக்கூடத்தின் புதிய கட்டிடமானது அருட்பணி. S. ஜான் கென்னடி பணிக்காலத்தில் கட்டப்பட்டு, 10.03.2008 அன்று பேரருட்பணி. C. பீட்டர் பிரான்சிஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பள்ளிக்கூட கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 12.03.2010 அன்று பேரருட்பணி. C. பீட்டர் பிரான்சிஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

புனித அந்தோனியார் பெயரில் உள்ள பள்ளிகட்டிடமானது கட்டப்பட்டு, 14.03.2014 அன்று குருகுல முதல்வர் பேரருட்பணி. அ. பாக்கியசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

காட்டுப்புத்தூர் மக்களில் பெரும்பாலானோர், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக வெளியூர்களில் வசித்து வருவதால், இங்கு குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. எனினும் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாவில் அனைவரும் ஒன்றுகூடி சிறப்பித்து வருகின்றனர்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. U. S. ஆரோக்கிய சாமி மற்றும் ஆலய பொறுப்பாளர்.