454 தூய இஞ்ஞாசியார் தேவாலயம், சாத்தம்பட்டி


தூய இஞ்ஞாசியார் தேவாலயம்

இடம் : சாத்தம்பட்டி

மாவட்டம் : புதுக்கோட்டை
மறை மாவட்டம் : திருச்சி
மறைவட்டம் : கீரனூர்

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. புனித பெரிய அந்தோணியார் ஆலயம், மகுதுப்பட்டி
2. அற்புத குழந்தை இயேசு ஆலயம், பானிப்பட்டி
3. புனித இஞ்ஞாசியார் ஆலயம், உடையாம்பட்டி
4. புனித செபஸ்தியார் சிற்றாலயம், மகுதுப்பட்டி.

பங்குத்தந்தை : அருட்பணி. S. அந்தோணி பால்ராஜ்

குடும்பங்கள் : 600
அன்பியங்கள் : 16

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு

திங்கள், புதன், வெள்ளி திருப்பலி : மாலை 07.00 மணிக்கு

திருவிழா : ஜூலை 22 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு 30, 31 தேதிகளில் திருவிழா.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. இன்னாசிமுத்து
2. அருட்பணி. ஹென்றி பால்
3. அருட்பணி. ஜான் அலெக்சாண்டர்

4. அருட்சகோதரி. நிர்மலாமேரி
5. அருட்சகோதரி. அஞ்சலி மேரி.

வழித்தடம் : இலுப்பூர் -கீரனூர். இறங்குமிடம் சாத்தம்பட்டி.

Location map : https://maps.google.com/?cid=3067799756782067358

வரலாறு :

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டத்தில் சாத்தம்பட்டியில் உள்ள தூய இஞ்ஞாசியார் திருத்தலமானது, நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயேசு சபை அருட்தந்தை கார்னியர் அவர்களால் சாத்தம்பட்டியில் 1843 ஆம் ஆண்டில் தூய இஞ்ஞாசியார் ஆலயம் எழுப்பப்பட்டது. அருட்தந்தை அவர்கள் வீரமாமுனிவரின் அடிச்சுவற்றில் பணியாற்றி, இவ்வாலயத்தை எழுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது முதலே புனித இஞ்ஞாசியாரின் புகழ் இப்பகுதியில் பரவத் தொடங்கியது. இலுப்பூர் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்த இத்திருத்தலம் 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது.

பின்னர் தற்போது காணப்படும் ஆலயமானது திருச்சி மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை சூசைராஜ் அவர்களால் கட்டப்பட்டு, மேதகு ஆயர் லாரன்ஸ் கபிரியேல் அவர்களால் 08.002.1997 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

சாதி மத இன பாகுபாடின்றி இப்பகுதியில் உள்ள அனைவரும் இத்திருத்தலத்திற்கு வந்து தூய இஞ்ஞாசியாரிடம் ஜெபித்து நலம் பெற்றுச் செல்கின்றனர்.

ஆண்டுதோறும் ஜூலை மாதம் 30, 31 -ஆம் தேதிகளில் நடைபெறுகின்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது சிறப்பாகும். மேலும் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களிலிருந்தும் இறை மக்கள் இத்திருத்தலத்தை நாடி வருவது இதன் சிறப்பாகும்.

கேட்ட வரம் தரும், கோடானுகோடி புதுமைகள் செய்கிற தூய இஞ்ஞாசியார் தேவாலயத்திற்கு வாருங்கள்..! இறைவனின் ஆசீர் பெற்றுச் செல்லுங்கள்..!!

பங்கின் பங்குத்தந்தையர்கள் :
1. அருட்பணி. வின்சென்ட் ஜோசப்
2. அருட்பணி. சூசைராஜ்
3. அருட்பணி. இன்னாசிமுத்து
4. அருட்பணி. கபிரியேல் அந்தோணிசாமி
5. அருட்பணி. L. V. யூஜின்
6. அருட்பணி. சகாய அந்துவான் ரெக்ஸ்
7. அருட்பணி. ஆரோக்கிய பன்னீர்செல்வம்
8. அருட்பணி. ஆரோக்கிய அமல்ராஜ்
9. அருட்பணி. அந்தோணி பால்ராஜ்.

1.அருட்சகோதரி.  சகாயம் 
2.அருட்சகோதரி.  ரூபியா 
3.அருட்சகோதரி.  ஜெசிந்தா மேரி  
4.அருட்சகோதரி. ஆரோக்கிய மேரி 
5.அருட்சகோதரி. ரீட்டா மேரி 
 6.அருட்சகோதரி. செலின் ரோஸ் 

7. அருட்சகோதரி. விமலா

பங்கின் நிறுவனங்கள் :
R. C. Primary school
St. Ignatius high school
Sacred Heart convent
St. Inigo hospital.

தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் பங்கின் உறுப்பினர்.