தூய வேளாங்கண்ணி அன்னை திருக்கோயில்
இடம்: ஆர்.ஆர்.நகர், 626204
மாவட்டம்: விருதுநகர்
மறைமாவட்டம்: மதுரை உயர்மறைமாவட்டம்
மறைவட்டம்: விருதுநகர்
தொடர்பு எண்: 9442287281
கிளைப்பங்குகள்:
1. புனித சவேரியார் ஆலயம், கன்னிசேரிபுதூர்
2. புனித செபஸ்தியார் ஆலயம், முதலிபட்டி
3. தூய உபகார மாதா ஆலயம், கல்போது
4. தூய லூர்து அன்னை ஆலயம், ஓ.கோவில்பட்டி
5. தூய லூர்து அன்னை ஆலயம், இனாம்ரெட்டியபட்டி
பங்குத்தந்தை:
Rev. Fr. A. அலெக்ஸ் ஞான ராஜ்
உதவிப் பங்குத்தந்தை:
Rev. Fr. K. பென்சிகர், MMI
குடும்பங்கள்: 500 (கிளைப்பங்குகள் சேர்த்து)
அன்பியங்கள்: 19
வழிபாட்டு நேரங்கள்:
பங்கு ஆலயத்தில் தினமும் மாலை 06.30 மணி
ஞாயிறு காலை 09.00 மணி
கிளைகிராமங்களில் வாரநாளில் மாலை 07.30 மணி, ஞாயிறு காலை 07.15 மணி
திருவிழா: ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 09 ஆம் தேதி வரை.
மண்ணின் இறையழைத்தல்:
அருட்பணி. பிரின்ஸ் ராஜா, SDB (கன்னிசேரிபுதூர்)
வழித்தடம்:
விருதுநகர் -சாத்தூர் இடையில், துலுக்கபட்டி தி ராம்கோ சிமென்ட் ஆலை அருகில்.
Location map: Annai Vellangani Church
https://maps.app.goo.gl/1RJbzAbhv6iXW6Ru7
ஆலய தனிச்சிறப்பு:
1976ஆம் ஆண்டு கட்டப்பட்ட அற்புத கெபி, சிறப்பாக குழந்தைப் பேறு வேண்டி செபிப்பவர்களுக்காக...
வரலாறு:
விருதுநகர் பங்கின் ஒரு பகுதியாக விளங்கிய ஆர்.ஆர்.நகரின் சாலை ஓரத்தில் 1976 ஆம் ஆண்டு தூய வேளாங்கண்ணி மாதா கெபி கட்டப்பட்டு, மக்கள் ஜெபித்து வந்தனர். தொடக்கத்தில் மாதத்திற்கு ஒருமுறையும், பின்னர் வாரத்திற்கு ஒருமுறையும் விருதுநகர் பங்கிலிருந்து அருட்பணியாளர்கள் வந்து திருப்பலி நிறைவேற்றிச் சென்றனர்.
வேளாங்கண்ணி மாதாவின் புதுமைகளால், இங்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, ஆலயத்தின் தேவை உணரப்பட்டது. ஆகவே மேதகு பேராயர் ஆரோக்கிய சாமி அவர்களின் ஆசியுடன், அருட்பணி. அல்போன்ஸ் அவர்களால் நிலம் வாங்கப்பட்டு, 24.11.1994 அன்று ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, அப்போதைய துணை ஆயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்களால் 21.04.2002 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
விருதுநகர் பங்கிலிருந்து ஆர்.ஆர்.நகர், கன்னிசேரிபுதூர், இனாம்ரெட்டியபட்டி ஓ.கோவில்பட்டி ஆகிய கிளைப் பங்குகளும், சிவகாசி பங்கிலிருந்து கல்போது, முதலிபட்டி
ஆகிய கிளைப்பங்குகளையும் இணைத்துக் கொண்டு, 15.05.2004 அன்று மேதகு பேராயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால், ஆர்.ஆர்.நகர் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. செகனி வாசகர் அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.
1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கெபியானது, சாலை விரிவாக்கம் காரணமாக அகற்றப்பட்டு, பழைய கெபி இருந்த இடத்திற்கு சற்றே உட்புறமாக புதிய கெபி கட்டப்பட்டு, 13.04.2008 அன்று மேதகு பேராயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
பங்கின் சபைகள்/ இயக்கங்கள்
1.தமிழக கத்தோலிக்க இளைஞர் இயக்கம்
2. மரியாயின் சேனை
3. இயேசுவின் கண்மணிகள்
4. பீடப்பணியாளர் இயக்கம்
பங்கில் உள்ள கெபி/ குருசடி:
தூய ஆரோக்கிய அன்னை கெபி, ஆர்.ஆர்.நகர்
புனித அந்தோணியார் குருசடி, சத்யாநகர், ஓ.கோவில்பட்டி
பங்கில் உள்ள நிறுவனங்கள்
தூய சவேரியார் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், கன்னிசேரிபுதூர்
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர் பட்டியல்:
1. அருட்பணி. செகனி வாசகர் (2004-2009)
2. அருட்பணி. ஜான் மார்ட்டின் (2009-2015)
3. அருட்பணி. பெனடிக்ட் பர்னபாஸ் (2015-2020)
4. அருட்பணி. அலெக்ஸ் ஞானராஜ் (2020 முதல்...)
அற்புதங்கள் நிறைந்த ஆர்.ஆர்.நகர் ஆலயத்திற்கு தவக்கால திருப்பயணமாக, பல ஆலயங்களில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் நாள்தோறும் வந்து ஜெபித்து இறையாசீர் பெற்றுச் சென்றனர். நீங்களும் இந்த ஆலயத்திற்கு திருப்பயணம் செல்ல விரும்பினால் 9442287281 என்கிற தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளலாம்...
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. A. அலெக்ஸ் ஞானராஜ்