899 புனித சூசையப்பர் ஆலயம், உன்னங்குளம்

  

புனித சூசையப்பர் ஆலயம்

இடம்: உன்னங்குளம்

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: வடக்கன்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: கிறிஸ்து அரசர் ஆலயம், நாங்குநேரி

பங்குத்தந்தை அருட்பணி. டென்சில் ராஜா

குடும்பங்கள்: 40

மாதத்திற்கு ஒருமுறை மாலை 07:00 மணிக்கு திருப்பலி நடைபெறும்

திருவிழா: ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி முதல் மே மாதம் 01ஆம் தேதி வரை 

வழித்தடம்: நாங்குநேரி -மூலக்கரைப்படி -உன்னங்குளம்

Map location:

https://g.co/kgs/b9VZAZ

வரலாறு:

உன்னங்குளத்தில் தொடக்க காலத்தில் ஓலைக் குடிசை ஆலயம் அமைக்கப்பட்டு இறைமக்கள் வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் 1968 ஆம் ஆண்டு ஓடு வேய்ந்த புனித சூசையப்பர் ஆலயம் கட்டப்பட்டது.

ஓடு வேய்ந்த ஆலயமானது பழுதடைந்து போனதால் அதனை அகற்றிவிட்டு, அவ்விடத்தில் தற்போதைய புதிய ஆலயமானது நாங்குநேரி பங்குத்தந்தை அருட்பணி. நார்பர்ட் தாமஸ் அவர்களின்  முயற்சி மற்றும் நிதிபங்களிப்புடன் 21.09.2002 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 30.04.2003 அன்று மேதகு. Dr. ஜோசப் சேவியர் DCL அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

உன்னங்குளமானது தொடக்கத்தில் இளங்குளம் பங்கின் கீழும், பின்னர் நாங்குநேரி பங்கின் பொறுப்பிலும் செயல்பட்டு வருகிறது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய பொறுப்பாளர்கள்