545 புனித அடைக்கல அன்னை ஆலயம், உதாரப்புலி

 

புனித அடைக்கல அன்னை ஆலயம்

இடம் : உதாரப்புலி, சாத்தரசன்கோட்டை (PO)

மாவட்டம் : சிவகங்கை 

மறைமாவட்டம் : சிவகங்கை 

மறைவட்டம் : சிவகங்கை 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : தூய அலங்கார அன்னை கதீட்ரல் ஆலயம், சிவகங்கை. 

பங்குத்தந்தை : அருள்பணி. சேசுராஜ் 

உதவிப் பங்குத்தந்தை : அருள்பணி. அந்தோனி எட்வர்ட் ராஜ். 

குடும்பங்கள் : 50

மாதத்தில் 4 வது ஞாயிற்றுக்கிழமை திருப்பலி. 

திருவிழா : செப்டம்பர் 8 ஆம் தேதியை மையமாகக் கொண்ட மூன்று நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1.அருள்பணி. பிரிட்டோ 

2. அருட்சகோதரர். டேவிட் பிரான்சிஸ், SJ

அருள்சகோதரிகள்:

1. அருட்சகோதரி. வின்சென்ட், JMJ 

2. அருள்சகோதரி. ஆரோக்கிய புனிதா, SAT 

3. அருள்சகோதரி. அன்ன வெரோணிக்கா, SHJ.

வழித்தடம் : 

சிவகங்கை -செங்குளம் வழி -உதாரப்புலி. 

Location map : Satharasankottai Ramanathapuram - Sivagangai - Melur Rd, M.Velangulam, Tamil Nadu 630561

https://maps.app.goo.gl/cSdnGEAPb7RQk3kTA


வரலாறு :

வேலுநாச்சியார் ஆட்சி செய்த சிவகங்கை சீமையிலே, புனித அருளானந்தரின் பாதுகாவலில் விளங்கும் சிவகங்கை மறைமாவட்டத்தில், சிவகங்கை கதீட்ரல் பங்கின் கிளைப் பங்காக சிறப்பு பெற்று விளங்குகிறது உதாரப்புலி என்னும் சிறிய கிராமம்.  

இங்கு வாழும் மக்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய ஆலயம் கட்டி இறைவனை வழிபட்டு வந்துள்ளனர். முதலில் 6 குடும்பங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 50 குடும்பங்களுக்கு மேல் கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. இந்த மக்கள் விவசாயம், ஆடு, மாடு மேய்த்தல் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு படிப்பு என்பது எட்டாக்கனி. பள்ளிக்கூடம் இல்லை. போக்குவரத்து வசதியும் இல்லை. ஆனால் இறைபக்தி அதிகமாக இருந்தது. இவர்களின் இறை விசுவாசத்தைக் கண்ட அருள்பணி. திரவியம் அவர்கள், சிறு ஆலயமாக இருந்ததை விரிவு படுத்தினார்கள். 

ஆண்டுகள் பல கடந்தது. விரிவுபடுத்தப்பட்ட பழைய ஆலயம் இடியும் நிலையில் இருந்ததால், அப்போது பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. பிரான்சிஸ் சேவியர் அவர்கள் புதிய ஆலயம் கட்ட முயற்சி செய்து, அதற்காக வெளிநாடு சென்று நன்கொடை திரட்டி ஆலயத்திற்கு 15.11.1994 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு,  பணிகள் நிறைவு பெற்று 3.8.1996 அன்று சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு எட்வர்ட் பிரான்சிஸ் DD அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

புனித அன்னாள் சபை:

992 ஆம் ஆண்டு உதாரப்புலி யிலிருந்து சுமார் 10கி.மீ தொலைவில் உள்ள சுந்தரநடப்பு என்ற ஊரில், திருச்சி புனித அன்னாள் சபையின் மடம் துவக்கப்பட்டது. இங்கு தங்கும் விடுதி இருந்தது. இங்குள்ள பிள்ளைகள் கல்வியறிவு இல்லாமல் இருந்ததை அறிந்து, அருள்சகோதரி. கிளாரன்ஸ் அவர்களின் முயற்சியால் Good Samvithan என்ற அறக்கட்டளை வழியாக ஒவ்வொரு பிள்ளைகளின் உயர்கல்வி படிப்பு வரையிலான செலவினை ஏற்றுக்கொள்ள வழி செய்து, மாணவர்கள் அனைவரையும் விடுதியில் தங்க வைத்து 10 ஆம் வகுப்பு வரை படிக்க வைத்தார்கள். 

ஒருசில ஆண்டுகளுக்கு பின்னர் அருள்சகோதரி இறந்து போனதால், பிள்ளைகளின் கல்வி பாதிக்கப் பட்டது. பிறகு ஒருசில காரணங்களால் கல்வி நிறுவனம் மூடப்பட்டது. தற்போது அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் படித்து வருகின்றனர். சபையின் அருட்சகோதரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 

இந்த கிராமத்திற்கு ஒரு மினிப்பேருந்து மட்டுமே இயங்கி வருகிறது. ஆன்மீகத்தில் வளர்த்தெடுக்க, வழிகாட்ட சரியான வழிகாட்டிகள் இல்லாததால் வெறும் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். 

கல்வியறிவை விட இறை பக்தியில் சிறந்து இருப்பதால் 3 அருள்சகோதரிகள், ஒரு அருள்பணியாளரை இறைவன் தமது நற்செய்தி பணிக்காக தேர்ந்தெடுத்துள்ளார். இந்நாள் வரை காத்து வழிநடத்தி வந்த இறைவனுக்கும், எமது ஆலயத்தை பதிவு செய்கிற ஜோஸ் அண்ணாவுக்கும் நன்றி... அன்புடன் அருள்சகோதரி. ஆரோக்கிய புனிதா.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : அருள்சகோதரி. ஆரோக்கிய புனிதா.