37 புனித அந்தோணியார் ஆலயம், வேலாயுதம்பாளையம்


புனித அந்தோணியார் ஆலயம்.

இடம் : அந்தோணியார்புரம், வேலாயுதம்பாளையம்.

மாவட்டம் : கரூர்
மறை மாவட்டம் : கோவை

நிலை : பங்கு தளம்
கிளை : TNPL(காகிதபுரம்), கிறிஸ்து அரசர் ஆலயம்.

குடும்பங்கள் : 66
அன்பியங்கள் : 9

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு.

பங்குத்தந்தை (2018): அருட்பணி சுதாகரன்.

திருவிழா : ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும்.

சிறப்புகள் :

2003ம் ஆண்டு உருவான இவ்வாலயம் கரூர் -புனித குழந்தை தெரசாள் ஆலயத்தின் கிளைப் பங்காக இருந்தது. பின்னர் 2010 ம் ஆண்டு தனிப்பங்காக உயர்ந்தது. செவ்வாய்க்கிழமைகளில் நண்பகல் 11.00 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆசீரைத் தொடர்ந்து தேர்பவனியும் நடைபெறும். அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் ஏராளமான மக்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேலாயுதம்பாளையம் வந்து, அங்கிருந்து சுமார் 1கிமீ தொலைவில் உள்ளது அந்தோணியார்புரம் ஆலயம்.