171 புனித சூசையப்பர் ஆலயம், மஞ்சாடி

      

புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : மஞ்சாடி

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : குழித்துறை 

மறைவட்டம்: முளகுமூடு

பங்குத்தந்தை : அருட்பணி. ஜோஸ் பிரசாந்

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்கு : புனித காணிக்கை மாதா ஆலயம், இரவிபுதூர்கடை

குடும்பங்கள் : 156

அன்பியங்கள் : 7

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு 

திங்கள், வியாழன், சனி திருப்பலி : காலை 06.30 மணிக்கு 

புதன், வெள்ளி திருப்பலி: மாலை 06.00 மணிக்கு 

திருவிழா : மே மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பித்து பத்து நாட்கள். 

வழித்தடம்:

நாகர்கோவில் -மார்த்தாண்டம் வழித்தடத்தில் இரவிபுதூர்கடை அருகில் மஞ்சாடி அமைந்துள்ளது.

புனித சூசையப்பர் ஆலயம் மஞ்சாடி 

வரலாறு :

மஞ்சாடியில் ஆலயம் உருவாகுமுன் ஒரு வீட்டில் வைத்து மறைக்கல்வி வகுப்புகள் நடந்து வந்தது. 

1956 ஆம் ஆண்டு அன்றைய பள்ளியாடி பங்குத்தந்தை அருட்பணி. வின்சென்ட் பெரைரா அவர்களின் முயற்சியால் 8 சென்ட் நிலம் வாங்கி, இறை மக்களின் ஒத்துழைப்புடன் ஓலைக் குருசடி அமைக்கப்பட்டது. 

ஓலைக் குருசடியில் மறைக்கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டது. 

அருட்பணி. ஜார்ஜ் N.J அவர்களால் ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டு மேதகு ஆயர் ஆஞ்ஞிசுவாமி அவர்களால் 20-12-1960 ல் அர்ச்சிக்கப்பட்டது. 

1960 முதல் ஆறு வாரத்திற்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நிறைவேற்றப் பட்டது. 

1971 ல் அருட்பணி. பெல்லார்மின் பொறுப்பேற்றதிலிருந்து நான்கு வாரத்திற்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நிறைவேற்றப் பட்டது. 

1979 ல் அருட்பணி. ஜோக்கிம் அவர்கள் பள்ளியாடி பங்குத்தந்தையாக ஆனதிலிருந்து, இரு வாரத்திற்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நிறைவேற்றப் பட்டது. 

அருட்பணி. ஜோக்கிம் காலத்தில் 20 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, கிராம முன்னேற்ற சங்கம் தொடங்கப் பட்டது. 

9-9-1984 ல் பள்ளியாடி பங்கிலிருந்து, காஞ்சிரகோடு பங்கின் கிளைப் பங்காக மஞ்சாடி மாற்றப் பட்டது. 

9-9-1984 முதல் "இந்திய வேத போதகசபை" (IMS) குருக்களின் பொறுப்பில் செயல்படத் துவங்கியது.

9-9-1984 முதல் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருப்பலி நடைமுறைக்கு வந்தது. 

அருட்பணி. ரூபன் அவர்களின் முயற்சியால் 1985 ல் பாலர்பள்ளி தொடங்கப்பட்டது. 

தற்போதுள்ள ஆலயம் 15-8-1994 ல் அருட்பணி. அமர்தீப் (IMS) அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, அருட்பணி. விமல் (IMS) அவர்களின் பணிக்காலத்தில் மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் 16-6-2000 அன்று அர்ச்சிக்கப்பட்டது. 

3-2-2002 ல் (IMS) குருக்களின் பணி நிறைவு பெற்று, கோட்டார் மறை மாவட்ட குருவான அருட்பணி. மரிய சூசை வின்சென்ட் அவர்களின் பொறுப்பில் செயல்படத் துவங்கியது. ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆலய முகப்பு கோபுரம் கட்டப்பட்டது.

2003 - 2007 வரை பணியாற்றிய அருட்பணி. மரியதாசன் அடிகளார் காலத்தில் ஒரு அரங்கம் கட்டப்பட்டது. 

2007-2008 வரை அருட்பணி. ஜான் அகஸ்டஸ் பணி புரிந்தார். 

2008-2011 வரை பொறுப்பு வகித்த சுவாமி ஜோக்கிம் அவர்களால் 17 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. மூவேளை ஜெபத்திற்கான மணி அடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

அருட்பணியாளர்கள் ஷெல்லி றோஸ், ஜெயபால் ஆகியோர் சுவாமி ஜோக்கிம் அவர்களுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டனர். 

2011 முதல் அருட்தந்தை வர்க்கீஸ் அவர்கள் பங்குத்தந்தையாக செயல்பட்டு வருகையில், 2012 ல் புனித வாரச் சடங்கை நடத்த மறை மாவட்ட அனுமதி பெறப்பட்டது. 

2012 முதல் அருட்தந்தை. மரிய இராஜேந்திரன் அவர்கள் பங்கு ஒத்துழைப்பாளராக இருந்து ஞாயிறு திருப்பலி நிறைவேற்றி வந்தார்கள். இவரது பணிக்காலத்தில் பங்கு மக்களின் முழு ஒத்துழைப்பால் அருட்பணியாளர் இல்லம் கட்டப்பட்டது. 

2015 முதல் அருட்தந்தை. அருளப்பன், இணை பங்குத்தந்தை அருட்பணி. பிளாரன்ஸ் ஆகியோர் பொறுப்பில் செயல்படத் தொடங்கியது. 

25-05-2016 முதல் அருட்தந்தை. சுஜின் அவர்கள் மஞ்சாடி கிளைப்பங்கின் பொறுப்பினை ஏற்று, தாய் பங்காவதற்கான தயாரிப்பு பணிகளை செய்தார்.

ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றப் பட்டது. 

அன்பியங்கள், பக்தசபைகள், இயக்கங்கள், மன்றங்கள் வலுப்பெற்றன. 

ஆலயத்திற்கருகில் நான்கரை சென்ட் நிலம் வாங்கப்பட்டது. 

மக்களின் அயராத ஒத்துழைப்பாலும் இறைவேண்டலாலும் 24-05-2017 அன்று தனிப்பங்காக அறிவிக்கப்பட்டு, குழித்துறை மறை மாவட்ட செயலர் பேரருட்பணி. றசல்ராஜ் அவர்கள் தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது. 

முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. இயேசு ரத்தினம் அவர்கள் பொறுப்பேற்றார்கள். 

06-08-2017 அன்று மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் அவர்களால் திருப்பலி நிறைவேற்றப் பட்டு, தனிப்பங்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

இரண்டாவது பங்குத்தந்தையாக அருட்பணி.‌ ஜார்ஜ் கிளமென்ட் அவர்கள் சிறப்புற பணியாற்றினார்.

தற்போது 2022 ஆம் ஆண்டு ஜூன் முதல் அருட்பணி.‌ ஜோஸ் பிரசாந் அவர்கள்  சிறப்பாக வழி நடத்தி, மஞ்சாடி பங்குத்தளத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகிறார்.

புனித சூசையப்பர் கெபி மற்றும் புனித லூர்து மாதா கெபி ஆகியன கட்டப்பட்டு 01.05.2023 அன்று பாளை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டில் பிரதான சாலை அருகில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் நிலம் வாங்கப்பட்டது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

மரியாயின் சேனை

கத்தோலிக்க சேவா சங்கம் 

கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்

இளைஞர் இயக்கம்

பாலர் சபை

சிறுவழி இயக்கம்

தகவல்கள்: முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி.‌ ஜார்ஜ் கிளமெண்ட் அவர்கள்.

கூடுதல் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி.‌ ஜோஸ் பிரசாந் அவர்கள்.