296 தூய மங்கள அன்னை ஆலயம், கோவர்த்தனகிரி

 

தூய மங்கள அன்னை ஆலயம்.

இடம் : கோவர்த்தனகிரி, காமராஜர் நகர், பூந்தமல்லி -ஆவடி நெடுஞ்சாலை.

மாவட்டம் : சென்னை
மறை மாவட்டம்: சென்னை - மயிலை உயர் மறை மாவட்டம்

நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை அருட்தந்தை : ஜோசப் விக்டர்
இணை பங்குத்தந்தை : அருட்தந்தை பிரகாஷ்

குடும்பங்கள் : 450
அன்பியங்கள் : 18

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணி மற்றும் காலை 08.30 மணிக்கும்.

திங்கள், வியாழன், வெள்ளி திருப்பலி : காலை 06.30 மணிக்கு

செவ்வாய், புதன், சனி திருப்பலி : மாலை 06.30 மணிக்கு

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலையில் திருப்பலி.

திருவிழா : மே மாதத்தில் 24,25,26 தேதிகளில் என மூன்று நாட்கள்.

வரலாறு :

1982 -ம் ஆண்டு கோவர்த்தனகிரியில் ஆலயம் கட்டப்பட்டு மேதகு ஆயர் R. அருளப்பா ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

முதல் பங்குத்தந்தை அருட்தந்தை Koottur அவர்கள்.

விவிலியத்தில் மார்ச் 25-ம் தேதி :

"ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.................... இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்." -லூக்கா நற்செய்தி 1:26-32"

இவ்வாறு அன்னை மரியாளுக்கு கபிரியேல் தூதர் கூறிய மங்கள வார்த்தையை பின்னணியாகக் கொண்ட தூய மங்கள அன்னைக்கு இவ்வாலயம் அர்ப்பணிக்கப்பட்டது.

தற்போதைய ஆலயமானது இப்பங்கு நிறுவப்பட்டதன் 25-வது ஆண்டு நினைவாக அருட்பணி பாட்ரிக் அவர்களின் பணிக்காலத்தில் கட்டப்பட்டு, 2007-ஆம் ஆண்டில் அர்ச்சிக்கப்பட்டது.

மே மாதத்தில் மாதா வணக்கம் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஆகவே மே மாதம் மட்டும் மாலையில் திருப்பலி நடைபெறுகின்றது.

அன்னை மரியாவிற்கு மங்கள வார்த்தை கூறிய நாளாகிய 25-ஆம் தேதியை மையமாகக் கொண்டு மூன்று நாட்கள் திருவிழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

வழித்தடம் : பூந்தமல்லி - ஆவடி சாலையில், கோவர்த்தனகிரியில் இறங்கி, காமராஜர் நகர் RCM middle school - ன் பின்புறம் இவ்வாலயம் அமைந்துள்ளது.

கி.பி. 513ல் அந்தியோக் நகர் பெருந்தந்தை செவரஸ், மங்கள வார்த்தை செப வாழ்த்து பகுதியின் முதல் வாக்கியமாக அமைந்துள்ள வானதூதரின் வார்த்தைகளான, "அருள் நிறைந்த மரியாயே வாழ்க! ஆண்டவர் உம்முடனே" என்பதை சில கிறிஸ்தவ சடங்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்.

திருத்தந்தை புனித முதலாம் கிரகோரி (கி.பி.590-604) காலத்தில், அந்த வானதூதருடைய வார்த்தைகளின் பயன்பாடு கிறிஸ்தவர்களிடையே அதிகரித்தது.

பிரான்சு அரசர் புனித ஒன்பதாம் லூயிஸ் (கி.பி.1261-1264) காலத்தில், மங்கள வார்த்தை செப வாழ்த்து பகுதியின் இரண்டாம் வாக்கியமாக அமைந்துள்ள எலிசபெத்தின் வார்த்தைகளான, "பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியும் (வயிற்றில் வளரும் குழந்தையும்) ஆசி பெற்றதே" என்பதும் இணைக்கப்பட்டு, வாழ்த்து பகுதி முழுவதும் வழக்கத்தில் இருந்தது.

திருத்தந்தை நான்காம் அர்பன் (1261-1264), இச்செபத்தில் இடம் பெற்றிருந்த "திருவயிற்றின் கனியும்" என்ற வார்த்தைகளை, "திருவயிற்றின் கனியாகிய இயேசுவும்" என்று மாற்றி அமைத்தார். திருத்தந்தை 22ம் ஜான் (கி.பி.1316-1334) அந்த மாற்றத்தை மீண்டும் உறுதி செய்தார்.

1569ஆம் ஆண்டு திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ், மங்கள வார்த்தை செபத்தின் வேண்டுதல் பகுதியான, "புனித மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்" என்பதை இணைத்தார்.

நாம் ஒரு அருள் நிறைந்த மரியாயே செபம் சொன்னால் மாதாவுக்கு ஒரு ரோஜா பூவை கொடுக்கிறோம் தினமும் ஒரு ஜெபமாலை சொன்னால் மூவொரு கடவுளுக்கும் மாதாவுக்கும் ரோஜாமாலையே கொடுக்கிறோம்..!