371 புனித சூசையப்பர் ஆலயம், புதுக்கோடு


புனித சூசையப்பர் ஆலயம்.

இடம் : புதுக்கோடு, மங்காடு (PO)

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : வேங்கோடு

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய கார்மல் மலை அன்னை ஆலயம், வாவறை.

பங்குத்தந்தை : அருட்பணி ஆன்றனி சேவியர்
இணை பங்குத்தந்தை : அருட்பணி சுனில்.

குடும்பங்கள் : 78
அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு

புதன் கிழமை திருப்பலி : மாலை 07.00 மணிக்கு.

திருவிழா : மே மாதத்தில் ஐந்து நாட்கள்.

மண்ணின் மைந்தர் :
அருட்பணி ஜோசப் (late)

வழித்தடம் : மார்த்தாண்டம் - களியக்காவிளை - புதுக்கோடு.

பேருந்துகள் : மார்த்தாண்டத்திலிருந்து 83, 83C, 83L, 82B, 82M.

புதுக்கோடு ஆலய வரலாறு :

புதுக்கோடு பங்கு மக்கள் அனைவரும் வாவறையை தங்களின் தாய்ப் பங்காக கொண்டவர்கள். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் வாவறையை சென்றடைய இன்று காணப்படும் சாலைகளோ, போக்குவரத்து வசதிகளோ இருக்கவில்லை. ஆகவே இவ்வூர் மக்கள் வாவறை தூய கார்மல் அன்னை ஆலயத்தை சென்றடைய சேறும், சகதியும் நிறைந்த வயல்கள் வழியாக, தண்ணீர் தேங்கியுள்ள மூன்று கால்வாய்களைக் கடந்து தான் செல்ல வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீரில் தத்தளித்து தான் வாவறை செல்ல வேண்டும்.

இந்த வேளையில் வாவறை பங்குத்தந்தை அருட்பணி வர்க்கீஸ், அருட்பணி அந்தோணிமுத்து ஆகியோரின் வழிகாட்டுதலில் இவ்வூரைச் சேர்ந்த திரு சுவாமியடியான் அவர்கள் மகன் ஜோசப் அவர்கள் குருமாணவராக சென்றார். அருட்பணியாளராக திருச்சியில் திருநிலைப் படுத்தப்பட்ட பின்னர் அருட்பணி ஜோசப் அவர்கள், தமது வயதான பெற்றோரை காண வரும் நேரங்களில், இவர்களும் இவ்வூர் மக்களும் வாவறை ஆலயத்திற்கு சென்றுவர நேரிடும் இன்னல்களை தமது மகனிடம் எடுத்துச் சொல்வார்கள். ஆகவே எப்படியாவது புதுக்கோட்டில் ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்று பெற்றோரும் ஊர் மக்களும் மண்ணின் மைந்தரான அருட்பணி ஜோசப் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

இதன் விளைவாக 1965 ஆம் ஆண்டில் சாலை ஓரத்தில் ஓர் ஓலைக்கூரை ஷெட் அமைத்து, 15 தினங்களுக்கு ஒருமுறை வாவறை பங்குத்தந்தையரால் ஞாயிறு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.

1970 ஆம் ஆண்டு தற்போதைய ஆலயம் அமைந்துள்ள இடத்தை அருட்பணி ஜோசப் (மண்ணின் மைந்தர்) அவர்கள், வாவறை பங்குத்தந்தை அருட்பணி பர்ணபாஸ் நேவிஸ் அவர்கள் பெயரில் கிரயம் வாங்கினார். பின்னர் ஓலை ஆலயத்தை நான்கு பக்கங்களிலும் மண் சுவர் எழுப்பி சிறிய அளவில் பீடமும் கட்டப் பட்டது.

1985 ஆண்டின் இறுதியில் ஓலை வேய்ந்த ஆலயத்தை முற்றிலும் அகற்றிவிட்டு, புதிய ஆலயம் கட்டத் துவங்கிய போது பல தடங்கல்களும், இடையூறுகளும் ஏற்பட்டன. 1986 ல் மாவட்ட ஆட்சியர் ஆலயம் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கினார்.

அருட்பணி ஜோசப் அவர்களின் நிதியுதவியாலும், பங்கு மக்களின் உழைப்பாலும் சாலை ஓரத்தில் கம்பீரமாக காட்சி தரும் புனித சூசையப்பர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 16-05-1988 அன்று அருட்பணி ஜோசப் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் சுவர் எழுப்பப் பட்டது.

2005 ல் அருட்தந்தை மனோகியம் சேவியர் அவர்களின் முயற்சியால் ஆலய பீடமும், ஆலய தரையும் சீரமைக்கப்பட்டது.

அருட்பணி மரிய இராஜேந்திரன் அவர்களின் முயற்சியால் நீண்டகாலமாக ஆலயத்தின் முன்பகுதியில் வழக்கில் இருந்து வந்த நிலமானது, திரு. மத்தியாஸ் மற்றும் திரு. சக்கரியாஸ் குடும்பத்தினரின் உதவியுடன் வாங்கப்பட்டது. மேலும் ஆலயத்தின் அருகாமையில் பதினெட்டு இலட்சம் ரூபாய் செலவில் ஒன்பதரை சென்ட் நிலம் வாங்கப்பட்டது.
31-03-2019 அன்று புதிய ஆலயத்திற்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டது.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி ஆன்டனி சேவியர் மற்றும் இணை பங்குத்தந்தை அருட்பணி சுனில் அவர்களின் வழிகாட்டுதலில் ஆலய கட்டுமானப் பணிகள் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்து வருகிறது. இவ்வாலயம் விரைவில் முழுமையாக கட்டப்படவும், தேவையான நிதியுதவிகள் கிடைத்திடவும், இதற்காக உழைக்கும் அனைவரையும் இறைவன் நிறைவாக ஆசிர்வதிக்க வேண்டி ஜெபிப்போம்.

புதுக்கோடு 1965 ல் கிளைப்பங்காக ஆனது முதல் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :

1. Fr பர்ணபாஸ் நேவிஸ்
2. Fr ஞானபிரகாசம்
3. Fr செபாஸ்டின்
4. Fr அந்தேனிசியஸ் ரெத்தினசுவாமி
5. Fr மார்ட்டின் அலங்காரம்
6. Fr ஜேசுதாஸ்
7. Fr தேவதாசன்
8. Fr அருள் தேவதாசன்
9. Fr ஜோக்கிம்
10. Fr மரிய வில்லியம்
11. Fr பத்றோஸ்
12. Fr ஜார்ஜ்
13. Fr பஸ்காலிஸ்
14. Fr வின்சென்ட்
15. Fr அருளப்பன்
16. Fr மனோகிம் சேவியர்
17. Fr வின்சென்ட் ராஜ்
18. Fr சேகர் மைக்கேல்
19. Fr ஜெயபாலன்
20. Fr ஹில்லாரி
21. Fr ஷெல்லிறோஸ்
22. Fr மரிய இராஜேந்திரன்
23. Fr ஆன்றனி சேவியர் (தற்போது)
Fr சுனில் ( தற்போது இணை பங்குத்தந்தை)

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி ஆன்றனி சேவியர் அவர்களின் வழிகாட்டுதலில், இணைப் பங்குத்தந்தை அருட்பணி சுனில் அவர்கள் தகவல்களை சேகரித்து கொடுத்துள்ளார். இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..!