157 லூர்து அன்னை ஆலயம், நெல்லிக்காவிளை


தூய லூர்து அன்னை ஆலயம்

இடம் : நெல்லிக்காவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : திரித்துவபுரம்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு.

குடும்பங்கள் : 65
அன்பியங்கள் : 4

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி ஜான் பிரிட்டோ

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

திருவிழா : மே மாதத்தில்.

நெல்லிக்காவிளை வரலாறு :

கி.பி 1955 ஆம் ஆண்டு அருட்பணி. எப்ரேம் கோமஸ் அவர்களின் பணிக்காலத்தில் நிலம் வாங்கப்பட்டு ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

அவரைத் தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. செபஸ்தியார், அருட்பணி. வென்செஸ்லாஸ் ஆகியோரால் தூய மரியன்னை ஆரம்ப பாடசாலை நிறுவப்பட்டது.

அருட்பணி. பால் ஸ்டீபன் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்கான வேலை துவக்கப்பட்டு, அருட்பணி. பிரான்சிஸ் பணிக்காலத்தில் ஆலயம் கட்டப்பட்டு மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

அருட்பணி. மரிய சூசை பணிக்காலத்தில் புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கான வேலைகள் துவக்கப்பட்டு, அருட்பணி. சகாய ஜஸ்டஸ் பணிக்காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.