புனித சவேரியார் ஆலயம்
இடம்: வடமலைசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் அஞ்சல்
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: பாளையங்கோட்டை
மறைவட்டம்: அம்பாசமுத்திரம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், விக்கிரமசிங்கபுரம் (அருளகம்)
பங்குத்தந்தை: அருட்பணி. எட்வர்ட் ராயன், OFM Cap
உதவிப் பங்குத்தந்தையர்கள்:
அருட்பணி. செல்வபாலா, OFM Cap
அருட்பணி. வியாகப்பன், OFM Cap
அருட்பணி. ஜோசப், OFM Cap (பள்ளி முதல்வர், அருளகம்)
குடும்பங்கள்: 170
அன்பியங்கள்: 7
ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணிக்கு
வியாழன் மாலை 07:00 மணிக்கு திருப்பலி
திருவிழா: நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பித்து, டிசம்பர் 3-ம் தேதியை மையமாக கொண்ட பத்து நாட்கள்
புதுமைகள் நிறைந்த வடமலைசமுத்திரம் ஆலய இறைமக்களுக்கு திருவிழா நல் வாழ்த்துகள் 🎉🎉🎉
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்சகோதரர். ஜெயசீலன், OFM Cap
2. அருட்சகோதரி. ஜான் மார்ட்டின்
வழித்தடம்: திருநெல்வேலி -அம்பாசமுத்திரம் -பாபநாசம். இங்கிருந்து தென்காசி வழித்தடத்தில் 3கிமீ
தென்காசி -கீழ்ஆம்பூர். இங்கிருந்து 3கி.மீ தொலைவில் வடமலைசமுத்திரம் அமைந்துள்ளது
Location map: Vadamalai Samuthram St. Xavier's Church
4A/16, Ambur-Papanasam Rd, vadamalai, Tamil Nadu 627425
https://maps.app.goo.gl/zoszKFBKdYEgiFTo9
ஆலய வரலாறு:
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் வடமலைசமுத்திரம். 1913 ஆம் ஆண்டு அருட்தந்தை. கிராஞ்ச், SJ அடிகளார் பொறுப்பேற்றதும் தானிய சேமிப்புக் கிடங்கு, ஆலயம், விரிவாக்கப் பணிகள் நடந்தது.
வடமலை பகுதியில் விளையும் விளை பொருட்களை சேமிக்க சமுத்திரம் போல் விரிந்திருக்கும் இரண்டு குளங்களுக்கு மத்தியில், தமது விவசாய பண்ணை நிலத்தில் வடமலைசமுத்திரம் என பெயர் கொண்டு சேமிப்பு கிடங்கு, வழிபாட்டுக்கு என புனித சவேரியார் பெயர் தாங்கிய ஆலயமும் கட்டப்படுகிறது.
1924ல் வடமலைசமுத்திரம் ஆலயம் அருட்தந்தை. தலோன் அவர்களின் சீரிய முயற்சியால் இருதயகுளம் பங்கோடு இணையப் பெற்றது. ஆனால் தந்தையர்கள் தென்காசி மற்றும்
பாளையங்கோட்டை பகுதிலிருந்து வந்து தங்கியிருந்து திருப்பலி செபிப்பார்கள்.
1943 இல் இருதயகுளம் தனிப்பங்காக மாறியது. ஆகவே வடமலைசமுத்திரம் ஆலயமானது, இருதயகுளம் பங்கின் கிளைப்பங்காக மாறியது.
1948-1950 அருட்தந்தை. லெமாய் பங்கு பொறுப்பேற்றதும் மக்களுக்கான சீர்திருத்தங்கள் செய்தார். மக்களின் பேராதரவையும் பெற்றார். அதன்பின் 1958 முதல்1967 வரை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் லெமாய் தந்தையரே பங்கு பொறுப்பேற்று, விவசாய வளர்ச்சியிலும், மறைப்பரப்பு பணியிலும், விழிப்புணர்வு வழங்குவதிலும் முயற்சிகள் மேற்கொண்டார். குறிப்பாக வடமலை சமுத்திரம் மக்கள் மீது தனிக் கவனம் செலுத்தினார்.
1988 முதல் 1994 வரை அருட்தந்தை. எஸ். எல். அருளப்பன் அடிகளார் அவர்களின் காலத்தில் இருதயகுளம் பங்கு நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட ஏற்பாடானது. 1994 ஆம் ஆண்டு விக்கிரமசிங்கபுரம் பகுதி தனிப் பங்காக பிரிக்கப்பட்டு, பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபையினருக்கு வழங்கப்பட்டது. வடமலை சமுத்திரம் ஆலயமானது விக்கிரமசிங்கபுரம் பங்கின் கிளைப்பங்காக இணைந்தது.
1996 ஆம் ஆண்டு அருள்தந்தை. அருள்தாஸ், OFM Cap அவர்களின் சீரிய முயற்சியால் வடமலை சமுத்திரம் ஆலயம் விவசாய நிலத்திலிருந்து மாற்றப்பட்டு, ஆம்பூர் -பாபநாசம் மெயின் ரோட்டிற்கு அருகில் கம்பீரமாக கட்டிமுடிக்கப்பட்டது.
17.08.1996 ல் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு ச. இருதயராஜ் D.D..DCL ஆண்டகை கரங்களினால் புனித சவேரியார் ஆலயம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
ஆலயம் கட்டப்பட்ட 15 ஆம் ஆண்டு நினைவாக, புனித அந்தோணியார் கெபி திறக்கப்பட்டது. நம்புங்கள்! ஜெபியுங்கள்! நல்லதே நடக்கும்! என்ற வாக்கிற்கிணங்க புதுமைகள் பல நடந்து கொண்டிருக்கிறது.
17.08.2021ல் 25வது ஆண்டு வெள்ளி விழா நினைவாக, ஆலயத்தில் ஆரோக்கிய அன்னை கெபி கட்டப்பட்டது.
புனிதரின் சிறப்பு:
ஊரைச் சுற்றியுள்ள பட்டி தொட்டி எங்கும் விளைநிலங்களின் காவலர், மழை தரும் புனிதர் என்று அழைக்கப்படும் பாதுகாவலர் புனித சவேரியார், நாம் நம்பிக்கையுடன் எது கேட்டாலும் நிறைவேற்றி கொடுப்பார் என்பது அனைவரின் நம்பிக்கை.
பங்கில் உள்ள குருசடிகள்:
புனித அந்தோனியார் குருசடி
வேளாங்கண்ணி மாதா குருசடி
பங்கில் உள்ள பள்ளிக்கூடம்:
ஆர்.சி தொடக்கப் பள்ளி
புனித தோமையர் அருட்சகோதரிகள் இல்லம்:
திரு இருதய சகோதரர்கள் இல்லம்:
பங்கில் செயல்படும் பக்தசபைகள்:
1. மரியாயின் சேனை
2. அல்போன்சா இளம்பெண்கள் இயக்கம்
3. புனித பியோ இளையோர் இயக்கம்
4. புனித பெர்க்மான்ஸ் பீடச்சிறார்கள்
விக்கிரமசிங்கபுரம் பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
அருட்தந்தை. அருள்தாஸ், OFM Cap (1994-1999)
அருட்தந்தை. வேதநாயகம், OFM Cap (1999-2005)
அருட்தந்தை. சார்லஸ் , OFM Cap (2005-2005)
அருட்தந்தை. ஜோசப் ததேயுஸ், OFM Cap (2005-2008)
அருட்தந்தை. அந்தோனிசாமி, OFM Cap (2008-2010)
அருட்தந்தை. ஆல்பர்ட், OFM Cap (2010-2015)
அருட்தந்தை. அந்தோணிராஜ், OFM Cap (2015-2017)
அருட்தந்தை. அமல உதயம், OFM Cap (2017-2018)
அருட்தந்தை. அருளானந்தம், OFM Cap (2018-2020)
அருட்தந்தை. ஜோசப், OFM Cap (2020-2021)
அருட்தந்தை. எட்வர்ட் ராயன், OFM Cap (2021முதல்)
புதுமைகள் பல புரியும் வடமலைசமுத்திரம் புனித சவேரியார் ஆலயம் வாருங்கள் இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை யின் வழிகாட்டலில் ஆலய பொறுப்பாளர்கள்.