புனித பதுவை அந்தோனியார் ஆலயம்
இடம்: தலைமலைப்பட்டி, 621215
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மறைமாவட்டம்: கும்பகோணம்
மறைவட்டம்: லால்குடி
நிலை: கிளைப்பங்கு
பங்கு: தூய ஜெயராக்கினி மாதா ஆலயம், தொட்டியம்
பங்குப்பணியாளர்: அருட்பணி. U. S. ஆரோக்கிய சாமி
குடும்பங்கள்: 45
ஞாயிறு திருப்பலி காலை 10:00 மணிக்கு
திருவிழா: மே மாதம் இறுதி வாரத்தில்
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. வின்சென்ட் பெரர், கும்பகோணம் மறைமாவட்டம்
2. அருட்பணி. டேவிட், சேலம் மறைமாவட்டம்
3. அருட்சகோதரி. செரினா மேரி, Immaculate Convent
4. அருட்சகோதரி. ஜோய்ஸ், Immaculate Convent
5. அருட்சகோதரி. மரியா, Servite Convert
6. அருட்சகோதரி. பியூலா ஆரோக்கிய மேரி, Servite Convert
வழித்தடம்: நாமக்கல் - சேலம் பேருந்தில் பயணம் செய்து, மேக்கநாயக்கன்பட்டி-யில் இறங்கி அரை கி.மீ நடைபயணம் செய்தால் இவ்வூரை வந்தடையலாம்.
Location map: St. Antony's Church
https://maps.app.goo.gl/5JeKyrz9TkK7dfZ86
வரலாறு:
கி.பி பதினேழாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இயேசு சபையினர் சேர்வைக்காரன்பட்டியை மையமாகக் கொண்டு இப்பகுதியில் மறைப்பணியாற்றியதன் காரணமாக பலர் கத்தோலிக்க திருமறையில் இணைந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வடக்கு திசைநோக்கிய ஓடு வேய்ந்த சிற்றாலயம் ஒன்று கட்டப்பட்டு, தோளூர்பட்டி பங்குத்தந்தையர்கள் வழிகாட்டலில் செயல்பட்டு வந்தது.
அருட்பணி. லூர்து சேவியர் பணிக்காலத்தில் (1948-1955), மாதத்திற்கு ஒருமுறை தோளூர்பட்டியிலிருந்து மாட்டுவண்டியில் வந்து, திருப்பலி நிறைவேற்றிச் சென்றார்.
1956 ஆம் ஆண்டு தொட்டியம் பங்காக மாற்றப் பட்டபோது, தலைமலைப்பட்டி அதன் கிளைப் பங்காக ஆனது.
பழைய ஓடு வேய்ந்த ஆலயமானது பழுதடைந்து காணப்பட்டதால் அதனை அகற்றிவிட்டு, தற்போது உள்ள ஆலயமானது கட்டப்பட்டு, 1964 ஆம் ஆண்டு குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பவுல் அருள்சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. ஆலய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த வேளையில், தற்போது சப்பர கொட்டகையாக உள்ள கட்டிடத்தில் வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆலயத்தை கட்டுவதற்கு தேவையான கருங்கற்களை, தலைமலையில் இருந்து மாட்டு வண்டியில் கொண்டு வந்ததுடன், ஆலய கட்டுமானப் பணிகளுக்கு உதவியாகவும் தலைமலைப்பட்டி இறைமக்கள் செயல்பட்டது குறிப்பிடத் தக்கது.
மண்ணின் மைந்தரான அருட்பணி. R. வின்சென்ட் பெரர் அவர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்த போது, அங்கிருந்து திரட்டிக் கொடுத்தனுப்பிய நிதியுதவியுடன், தலைமலைப்பட்டி இறைமக்களின் ஒத்துழைப்புடன் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 15.07.2001 அன்று குடந்தை ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இந்த வேளையில் புனித அந்தோனியார் அரங்கம் ஒன்றும் கட்டப்பட்டது.
ஆலயத்தின் பொன்விழா ஆண்டு நினைவாக (1964-2014), பங்குத்தந்தை அருட்பணி. T. தேவதாஸ் அவர்களின் வழிகாட்டலில் ஆலயம் அழகுற புதுப்பிக்கப்பட்டு, 23.05.2014 அன்று குடந்தை மறைமாவட்ட மேதகு ஆயர் F. அந்தோனிசாமி அவர்களால் அர்ச்சிக்க பட்டு, பொன்விழா சிறப்புற கொண்டாடப் பட்டது.
மக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள், புனித அந்தோனியார் மீது கொண்ட பற்றுதல், பங்குத்தந்தையர்களின் வழிகாட்டல் ஆகியவற்றின் காரணமாக வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது தலைமலைப்பட்டி இறைசமூகம்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. U. S. ஆரோக்கியசாமி, மண்ணின் இறையழைத்தல்கள் அருட்பணி. வின்சென்ட் பெரர், அருட்பணி. L. டேவிட் (Salem Diocese) மற்றும் திரு. C.சஞ்சீவி மணியார் ஆகியோர்.