29 பரலோக மாதா ஆலயம், தோப்புவிளை

   

பரலோக மாதா (விண்ணேற்பு அன்னை) ஆலயம். 

இடம்: தோப்புவிளை,

உறுமன்குளம் அஞ்சல், பெட்டைக்குளம் வழி,

நெல்லை மாவட்டம். 627654

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித ஜெபமாலை மாதா ஆலயம், மாதாநகர்

2. புனித சவேரியார் ஆலயம், இரம்மதபுரம்

3. புனித சவேரியார் ஆலயம், கல்விளை

4. புனித அந்தோனியார் ஆலயம், சங்கனாபுரம்

5. புனித எஸ்தாக்கியார் ஆலயம், துரைகுடியிருப்பு

பங்குத்தந்தை அருட்பணி. J. ஜோசப் ஸ்டார்லின்

குடும்பங்கள்: 125

அன்பியங்கள்: 4 

ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி

வாரநாட்களில் திருப்பலி காலை 06:15 மணி

முதல் சனிக்கிழமை மாலை 06:30 மணி ஜெபமாலை, திருப்பலி, அசனம் 

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள் 

மண்ணின் இறையழைத்தல்கள்: 

1. அருட்பணி. சவரிமுத்து, SJ (late) (இரம்மதபுரம்)

2. அருட்பணி. சேவியர் அருள்ராஜ் (தோப்புவிளை)

3. அருட்பணி. பிரான்சிஸ் (சங்கனாபுரம்)

4. அருட்பணி. சேவியர் ஜார்ஜ் (கல்விளை)

5. அருட்பணி. சேவியர் ராஜா (கல்விளை)

வழித்தடம்:

திசையன்விளையிலிருந்து -இராதாபுரம் பேருந்து வழித்தடத்தில் தோப்புவிளை அமைந்துள்ளது.

மினிபஸ் மற்றும் அரசுபோக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருச்செந்துார் -நாகர்கோவில் சாலையில், ஆத்தங்கரை பள்ளிவாசல் வழியாகவும் தோப்புவிளையை அடையலாம்.

Location map: Our Lady of Assumption Church

https://maps.app.goo.gl/Qwp8Lgvb1iz9rnjS7

வரலாறு :

நம்பி நதியின் ஓரம்… வானுயர்ந்த கோபுரங்கள்… பரலோக அன்னைக்கு அர்ப்பணித்த தேவாலயம்.. இதுவே தோப்புவிளையின் தனிப்பெரும் அடையாளம்.

மக்களின் மனங்களை போலவே இதன் மணற்பரப்பும் தூயது. தொழிலால் பனை ஏறும் பாரம்பரியம் விசுவாசத்தில் இலத்தின் ரீதி ரோமன் கத்தோலிக்கர்கள், உலக வரைபடத்தில் தென் இந்தியாவின் நெல்லை மாவட்ட தென் பகுதியிலும், திருச்சபை வரை படத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட தென் பகுதியில் அமைந்துள்ள, சிறிய பங்குகிராமம் தான் தோப்புவிளை.

2000 ஆம் ஆண்டில் தான் தனிப்பங்கு எனும் உயர்வை கண்டாலும், இந்தப் பங்கு மக்கள் புனித தோமையார் கால கிறிஸ்தவர்கள் என்பதற்கு இப்பங்கு முழுவதும் காணப்படும் இரட்டை சிலுவைகளே சாட்சிகள். புனித சவேரியரால் விசுவாச உறுதி பெற்ற மக்கள், திருச்சி மறைமாவட்டத்தில் அணைக்கரை பங்கு இருந்த பொழுதே அதன் கீழ், தோப்புவிளை இருந்ததற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.

இறை மக்கள் திருத்தொண்டர்களாய் வாழ்ந்ததற்கும், பணிபுரிந்ததற்கும் வரலாற்று குறிப்புகள் உண்டு.

இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் 

1‌‌. சந்தாயி 

2. ஞானப்பிரகாசம். (சந்தாயி கணவர்)

3. அருளாயி (சந்தாயி தங்கை)

4. மதுரேந்திரம் (இவருடைய கல்லறை இரம்மதபுரத்தில் உள்ளது.)

5. தோப்புவிளையில் வாழ்ந்த இறை அடியார் அண்ணாவி. (இவர் ஆலயத்தில் உபதேசியராய் பணிசெய்தவர் அல்ல. மாறாக ஊர்கள் தோறும் சென்று ஜெபிக்க கற்றுக் கொடுத்தவர்). இவருடைய கல்லறை இஸ்லாபுரம் காட்டினில் காணப்படுகிறது .

இறைப் பற்று கொண்ட இம்மக்கள் அனைவரும் ஒரு கால கட்டத்தில் 

வறுமையினால் புலம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு செல்லலானார்கள். அப்படி புலம்பெயர்ந்து சென்ற சாந்தாயி, அமர்ந்து உருவாக்கிய இடமே இன்றைய வடக்கன்குளம். அவள் உருவாகியதுதான் திருக்குடும்ப தேவாலயம். இவ்வாலயத்தில்தான் இந்திய தேசத்தின் முதல் வேதசாட்சி புனித தேவசகாயம் திருமுழுக்கு  பெற்றார். ஞானப்பிரகாசம் (சந்தாயி கணவர்) அழகப்பபுரத்தில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.

ஆலய வரலாறு: 

காடாய் கிடந்த இடம், காய் நெருஞ்சி பத்திய இடம், ஊராக்க வருகிறாள் ஒத்தாசை மாதா. இப்பாடல் புழக்கத்தில் இருந்த காலம் 1880 க்கும் 19930 க்கும் இடைப்பட்ட காலமே. இப்பாடல் மூலம் ஆலயம் தோன்றிய காலத்தை கணிக்க முடிகிறது.

ஆதி கிறிஸ்தவர்களாக இருந்தாலும், தங்களுக்கென்று நிலமற்றவர்களாகவும், வழிபட ஆலயமும் இன்றி மரத்தடிகளில் கூடி ஜெபிக்கும் வழக்கம் கொண்டவர்களாகவும் இருந்துள்ளார்கள். குருக்களின் நேரடி பார்வை எட்டாக்கனியாகவே இருந்துள்ளது. பொது நிலை திருத்தொண்டர்கள் அண்ணாவிகள் என்ற பெயரில் மக்களை 

வழி நடத்தி வந்துள்ளார்கள். 

இக்காலத்தில் தான் தோப்புவிளையில் அன்னைக்கு ஒரு குடிசை கோயில் ஒன்று அமைக்க முடிவு செய்து, தற்போது கொடிமரம் உள்ள இடத்தை தேர்வு செய்து, குடிசையில் சில மரியன்னை படங்களை வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள். ஒத்தாசை மாதா கோயில் என்று அழைத்துள்ளார்கள். பின்னர் 1950 காலகட்டங்களில் தூய விண்ணேற்பு மாதா (பரலோக மாதா) என்னும் பெயர் மாற்றம் பெற்றது.

அன்னையின் முதல் அற்புதம்: 

மேலே சொன்னதுபோல் நிலமற்ற மக்கள் என்பதற்க்கு இதுவே சான்று. ஆலயம் அமைந்துள்ள இடம் புலிமான் குளத்தின் கிராம நிர்வாக முக்கியஸ்தர்களுக்கு சொந்தமானது, அவர்கள் ஆலய வழிபாட்டிற்கு ஆட்சேபனை தெரிவித்தது மட்டுமல்லாமல், ஆலயத்தை சுற்றி முள் வேலி அமைத்து தடை செய்தார்கள். அவர்கள் கண் முன்னாலேயே அன்னை ஓர் அற்புதம் நிகழ்த்தினார்கள். பெரும் சூறாவளி காற்று வீசச் செய்து, முள் வேலிகளை பறந்து போக செய்தார்கள். இதை கண்ணுற்றவர்கள் திகைத்து நின்று, அன்னையின் அற்புதம் இது என்பதை உணர்ந்தார்கள். உடனடியாக மக்கள் வழிபட அனுமதி வழங்கி மகிழ்ந்தார்கள். இதுவே அன்னை செய்த முதல் புதுமை ஆகும்.

1962 ல் குடிசை கோயிலை மாற்றி, பிரமாண்ட ஆலயம் ஓன்று எழுப்ப முடிவு செய்து, முன்னோர்களால் அதற்கென்றே பிரத்யோக செங்கல் சூளை, சுண்ணாம்பு சூளைகள் அமைக்கப்பட்டு, அழகிய ஆலயம் கட்டப்பட்டு, அதன் பணிகள் நிறைவுபெறும் முன்பே அப்போதைய அணைக்கரை பங்குத்தந்தை ஹெர்மஸ் அடிகளார் காலத்தில் மேதகு ஆயர் தாமஸ் ஆண்டகை அவர்களால் 1961-ல் அர்ச்சிக்கப்பட்டது. திருப்பலியின் தத்துவத்தை எடுத்தியம்பும் வண்ணம் அதன் பீட வேலைகள் புதுமைப் பொலிவுடன் திகழ்ந்தன. மீண்டும் மக்களின் பெரும் முயற்சியில் 1985 ஆம் ஆண்டு அதன் கோபுரப்பணிகள் செய்யப்பட்டு, அழகுற காட்சி தந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் முன்  மண்டபப் பணிகள் முடிக்கப்பட்டு சில ஆண்டுகளே ஆனபின்பு, 2004 ஆம் ஆண்டு மீண்டும் புதிய ஆலயம்கட்ட தீர்மானிக்கப்பட்டு, பழைய ஆலயம் இடிக்கப்பட்டு, இப்போது நாம் பார்க்கும் ஆலயத்திற்கு வள்ளியூர் மறை மண்டல ஆயர் பதிலாள் மேதகு ஜோசப் சேவியர் அடிகளாரால் 13-04-2005 அன்று

அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 14-08-2007 அன்று மேதகு ஆயர் யுவோன் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

புதிய கொடிமரம் வைக்கப்பட்டு 

06-08-2023 அன்று மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோனி அவர்களால் புனிதப் படுத்தப்பட்டது.

பங்கில் உள்ள கெபி:

புனித ஜார்ஜியார் கெபி

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

பாலர் சபை

நற்கருணை வீரர் சபை

மாதா சபை

திருக்குடும்ப அவை

சூசையப்பர் சபை

ஊர் நிர்வாகிகள்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. Rev.Fr. Anbu Selvan (2001 -2006)

2. Rev.Fr. Arul Sahayam (2006 -2010)

3. Rev.Fr. Wingling Ravi (2010 -2011)

4. Rev.Fr. Galton (2011-2012)

5. Rev.Fr. Anton Selvan (2012 -2015)

6. Rev.Fr. Selva Rathinam (2015-2020)

7. Rev.Fr. Joseph Starlin (2020–)

தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி.‌ ஜோசப் ஸ்டார்லின்

வரலாறு மற்றும் புகைப்படங்கள்: ஆலய பேஸ்புக் பொறுப்பாளர்.