653 புனித சூசையப்பர் ஆலயம், அழகானந்தல்

    

புனித சூசையப்பர் ஆலயம் 

இடம் : அழகானந்தல், திருவண்ணாமலை தாலுகா, கொளக்குடி PO, 606808

மாவட்டம் : திருவண்ணாமலை 

மறைமாவட்டம் : வேலூர் 

மறைவட்டம் : திருவண்ணாமலை 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : தூய சகாய மாதா ஆலயம், பவித்ரம் 

பங்குத்தந்தை : அருள்பணி. A. C. சவரிமுத்து

உதவிப் பங்குத்தந்தை : அருள்பணி. V. சேகர் 

குடும்பங்கள் : 120

சனி மாலை 06.30 மணிக்கு திருப்பலி 

திருவிழா : மே மாதம் 1ம் தேதி. 

வழித்தடம் : திருச்சி -திருக்கோவிலூர் -திருவண்ணாமலை வழித்தடத்தில், வெரையூர் -பவித்ரம் -கொளக்குடி -அழகானந்தல். 

Location map : https://www.google.com/search?client=ms-android-vivo-rev1...

வரலாறு :

விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட அழகானந்தல் எனும் ஊரில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலய வரலாறு... 

சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் அழகானந்தல் கிராமத்தில் மிஷனரி குருக்கள் ஒரு தொடக்கப் பள்ளிக்கூடம் அமைத்து கல்வி கற்பித்து வந்தனர். அவ்வேளையில் இப்பகுதியில் கிறிஸ்தவ மக்களுக்காக புனித சூசையப்பரை பாதுகாவலராகக் கொண்டு ஒரு குடிசை ஆலயம் அமைக்கப் பட்டது. தொடர்ந்து கெங்கப்பட்டு பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் ஓடு வேய்ந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

1971-ம் ஆண்டு பவித்ரம் தனிப்பங்கான போது அழகானந்தல் அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. 

அருள்பணி. சேவியர் (1986 -1996) பணிக்காலத்தில் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப் பட்டது. மேலும் இவரது பணிக்காலத்திலேயே ஒலிப்பெருக்கி வசதியும் செய்யப் பட்டது. 

05.10.1992 ல் ஆஸ்திரியா நாட்டினர் உதவியுடன் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு கார்மல் சபை அருள்சகோதரிகள் இதனை நடத்தி வந்தனர். தற்போது மருத்துவமனை இயங்கவில்லை. 

2019 ம் ஆண்டு அருள்சகோதரர் அலெக்ஸ், SJ அவர்களின் வழிகாட்டுதலில், அழகானந்தல் ஆலய இளையோர் இணைந்து இயேசுவின் சிலுவைப் பாடுகளின் 14 நிலைகளையும் ஆலய வளாகத்தில் அமைத்தனர். 

தற்போது இளையோர்கள் இணைந்து கலையரங்கம் கட்டி வருகின்றனர்.

தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் ஆலய பொறுப்பாளர். 

புகைப்படங்கள் : ஆலய இளையோர்