335 புனித வின்சென்ட் தே பவுல் ஆலயம், பெரியவிளை


புனித வின்சென்ட் தே பவுல் ஆலயம்.

இடம் : பெரியவிளை, மணவாளக்குறிச்சி( PO)

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்.

நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி விஜியன் ராஜன்

குடும்பங்கள் : 595
அன்பியங்கள் : 15

ஞாயிறு திருப்பலி : காலை 05.00 மணி மற்றும் காலை 07.00 மணிக்கும்.

திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி திருப்பலி : காலை 06.00 மணிக்கு.

புதன் மாலை 05.00 மணிக்கு ஜெபமாலை, புனிதரின்
புகழ்மாலை, தொடர்ந்து நவநாள் திருப்பலி.

வியாழன் காலை 05.30 மணிக்கு நற்கருணை ஆராதனை, திருப்பலி.

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 05.30 மணிக்கு நற்கருணை ஆராதனை திருப்பலி.

திருவிழா : செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்.

தனிச்சிறப்பு : புனித வின்சென்ட் தே பவுல் அவர்களுக்காக தமிழகத்தில் அர்பணிக்கப்பட்ட முதல் ஆலயம்.

புனித வின்சென்ட் தே பவுலின் திருப்பண்டம் இங்கு உள்ளது.

மண்ணின் மைந்தர்கள் :

1. Fr. வால்டர்
2. Fr. பீட்டர் லடீஸ்
3. Fr. ஷிபு
4. Fr. வின்சென்ட்
5. Fr. வளன் svd
6. Fr.ஆரோக்கிய ஜெனிஸ்
7. Fr. அந்தோனி பிச்சை

மற்றும் 8 அருட்சகோதரிகளையும் இறையழைத்தலாக தந்துள்ளது பெரியவிளை இறை சமூகம்.

வழித்தடம் :

நாகர்கோவில் (அண்ணா பேருந்து நிலையம்) -குளச்சல் 5B, 5C, 5D, 12C இறங்குமிடம் : பரப்பற்று.

நாகர்கோவில் - பெரியவிளை 14B காலை 10.00 மணி, மாலை 04.00 மணிக்கும்.

வரலாறு :

குமரி மாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை கிராமங்களுள் பெரியவிளையும் ஒன்று. சுற்றிலும் பசும் மரங்கள் புடைசூழ அழகிய கடற்பரப்பில் அமைந்துள்ளது ஏழைகளின் காவலராகிய புனித வின்சென்ட் தே பவுல் ஆலயம்.

ஆரம்பத்தில் இவ்வாலயம் புதூர் புனித லூசியாள் ஆலயத்தின் கிளையாக இருந்து செயல்பட்டு வந்தது.

16-11-1993 அன்று மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் அவர்களால் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. உலக இரட்சகர் சபையைச் சார்ந்த அருட்தந்தை அருளானந்தம் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று ஏழு ஆண்டுகள் சிறப்பாக வழிநடத்தினார்.

அருட்தந்தை அருளானந்தம் அவர்கள் மணவாளக்குறிச்சி பேரூராட்சியின் உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் இருந்தார். இவரது பணிக்காலத்தில் அரசின் உதவியுடன் அரசு வீடுகள், நீர்நிலைத் தொட்டி, அதிக மின்திறன், சாலை வசதி, வீடுகள் மராமத்து போன்ற பணிகள் நிறைவேற்றப் பட்டது. ஆறு ஏக்கர் நிலமும் வழங்கப்படது.

1997 -இல் மறை மாவட்டம் பங்கின் பொறுப்பையேற்று அருட்பணி இம்மானுவேல் தலைமையில் அருட்பணி ஸ்டான்லி மரிய சூசை அவர்கள் சிறப்பாக பணியாற்றினார்.

1998-இல் அருட்பணி அருளப்பன் அவர்கள் போறுப்பேற்று, இந்திய அருமணல் ஆலைக்கு கடற்கரையிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் மணல் எடுக்கும் தொழில் துவக்கப்பட்டது.

தொடர்ந்து உலக இரட்சகர் சபை பொறுப்பேற்று அருட்பணி அருளானந்தம் மீண்டும் பங்குத்தந்தையானார்.

ஆறு மாதங்களுக்கு பிறகு அருட்பணி சந்தியாகு பொறுப்பேற்று, அரசின் நமக்கு நாமே திட்டத்தில் பங்கு மக்கள் பயன்பெறும் நெய்தல் கூடாரங்கள் இரண்டு கட்டப்பட்டு, பின்னர் திருமண மண்டமாக விரிவு படுத்தப் பட்டது.

2002-இல் மீண்டும் மறை மாவட்டம் பங்கின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அருட்பணி ஜெரோமியாஸ் பங்குத்தந்தை ஆனார். கடற்கரை வீடுகளை பாதுகாக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.

2003 -இல் அருட்பணி செபாஸ்டின் அவர்களும், 2004-இல் அருட்பணி ஆன்றோ வினோத் குமார் அவர்களும் பங்குத்தந்தையாக இருந்து சிறப்பாக செயல்பட்டனர். மேலும் நிலங்கள் வாங்கப்பட்டன.

2004-ல் சுனாமி பேரலையில் இக்கடற்கரை மக்களில் சிலர் உயிரிழந்தது வேதனையான நிகழ்வு. தொடர்ந்து புனித வின்சென்ட் தே பவுல் ஆரம்பப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப் பட்டது.

2008-இல் அருட்பணி இராபர்ட் பென்னி பொறுப்பேற்று புதிய ஆலய திட்டம் போடப்பட்டது.

2010-2011 வரை புதூர் பங்குத்தந்தை அருட்பணி பஸ்காலிஸ், அருட்பணி பிரபு ஆகியோர் உடனிருப்பில் செயல்பட்டது.

2011-இல் அருட்பணி விமல்ராஜ் இவருடைய காலத்தில்தான் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆண்டகை அவர்களால் நிறுவப்பட்டது.

2014 -இல் அருட்பணி ஜோசப் அவர்கள் பொறுப்பேற்று பங்கின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றார். 05-08-2014 அன்று புதிய ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டது. பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நன்கொடைகள், பங்குத்தந்தையின் ஒத்துழைப்புடன் புதிய ஆலயப் பணிகளை நிறைவு செய்து 05-10-2018 அன்று மேதகு ஆயர் நசரேன்‌ சூசை ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

மேலும் பங்குத்தந்தையின் முயற்சியால் புனித வின்சென்ட் தே பவுல் துவக்கப்பள்ளி ஆங்கிலப்பள்ளியாக மாற்றம் பெற்றது. பெரியவிளை இளைஞர்கள் விளையாட்டு மற்றும் கலைத்துறைகளில் சிறந்து விளங்கி மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளை வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது அருட்தந்தை விஜியன் ராஜன் அவர்களின் வழிகாட்டுதலில் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது பெரியவிளை இறைசமூகம்.

பதிவு : புனித காணிக்கை மாதா ஆலயம் மாதாபுரம், குமரி மாவட்டம், குழித்துறை மறை மாவட்டம், email : joseeye1@gmail.com

https://www.facebook.com/permalink.php?story_fbid=2454063954828249&id=2287910631443583&__tn__=K-R