291 புனித ஜார்ஜியார் தேவாலயம், கிராத்தூர்


புனித ஜார்ஜியார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம்

இடம் : கிராத்தூர்

மாவட்டம் : கன்னியாகுமரி
தாலுகா : விளவங்கோடு
ஊராட்சி : ஏழுதேசம்

மறை மாவட்டம் : மார்த்தாண்டம்
மறை வட்டம் : கொல்லங்கோடு

பங்கு முதன்மை : கொல்லங்கோடு மறைவட்ட முதன்மை பங்கு.

கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்தந்தை அர்னால்டு டயஸ்

குடும்பங்கள் : 850
அருள்வாழ்வியங்கள் (அன்பியங்கள்) : 16

ஞாயிறு : காலை 06.00 மணிக்கு காலைசெபம், 06.30 மணிக்கு முதல் திருப்பலி, மற்றும் காலை 10.30 மணிக்கு இரண்டாம் திருப்பலி.

திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் திருப்பலி : காலை 06.00 மணிக்கு.

புதன்கிழமை திருப்பலி : காலை 06.00 மணிக்கு (அருட்சகோதரிகள் இல்லத்தில்)

வியாழன் திருப்பலி : மாலை 05.30 மணிக்கு, தொடர்ந்து MCYM இளையோர் முன்னின்று நடத்தும் அன்பின் விருந்து.

திருவிழா : ஏப்ரல் மாத இறுதியில் ஆரம்பித்து மே மாதத்தில் நிறைவடைகின்ற வகையில் பத்து நாட்கள்.

வரலாறு :

திருவனந்தபுரம் உயர் மறை மாவட்ட முதல் பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகை அவர்களாலும், கிராத்தூரை சேர்ந்த சில நல்லுள்ளம் கொண்ட பெரியவர்களும், அருட்தந்தை சேனாய்டு மத்தாயி அவர்களும் ஒன்றிணைந்து 1935 -ம் ஆண்டு ஒரு சிறு ஓலைக்குடிசை ஆலயத்தை நிறுவி, 12-05-1935 அன்று முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து அருட்தந்தை அவர்கள் சிறப்பாக மறைப்பரப்பு பணி செய்து வந்தார். அவருக்கு உதவியாக உபதேசியார் அவர்களும் இருந்து இப்பகுதியில் கிறிஸ்தவம் வளர உதவினர்.

நான்கு பாதைகள் சந்திக்கும் பகுதியில் குருசடி ஒன்று கட்டப்பட்டது. இதே காலத்தில் குருசடிக்கு வடக்கே, தென்திசை நோக்கி தற்போதைய ஆலயத்திற்கு முன்பிருந்த ஓட்டுக்கூரை ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

அந்த காலத்தில் காலரா, வசூரி போன்ற கொடிய நோய்களின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பிறசமய மக்களும் வந்து இக்குருசடியில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டு நோய் நீங்கப் பெற்றனர்.

அருட்தந்தை ரைமண்ட் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்த போது, நோய்களால் வாடும் மக்களின் துயரைத்துடைக்க கிராத்தூரில் 1967 ல் அப்போஸ்தலர் புனித தோமையார் பெயரில் மருத்துவமனை கட்டப்பட்டது.

பின்னர் அருட்தந்தை தோமஸ் பணிக்கர் அவர்கள் பணிக்காலத்தில் புதிய பெரிய மருத்துவமனையாக கட்டப்பட்டு, கேரளா அமைச்சர் K. C ஜார்ஜ் அவர்களால் 15-07-1974 ல் திறந்து வைக்கப்பட்டது.

இதே காலகட்டத்தில் அருட்தந்தையர் ரைமண்ட் மற்றும் தாமஸ் ஆகியோரின் முயற்சியில் அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் அஞ்சலகமும் நிறுவப்பட்டது.

கிராத்தூர் பகுதி மட்டுமன்றி சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் பங்கின் உறுப்பினர்கள் ஆயினர். நாளடைவில் அவர்களின் வசதிக்காக அந்தந்த ஊர்களில் கிளைப்பங்குகள் அமைக்கப்பட்டன.

அவ்வாறு அமைக்கப்பட்ட கிளைப்பங்குகள் மஞ்சத்தோப்பு, பாலவிளை, நடைக்காவு, கோயிக்கல்தோப்பு, கிடாரக்குழி முதலியன. இக்கிளைப்பங்குகள் தற்போது தனிப்பங்குகளாக வளர்ச்சி அடைந்துள்ளன.

கிராத்தூர் பங்கு ஆன்மீகத்தில் மிகவும் சிறந்து விளங்கியது. திருப்பலி, திருவருட்சாதனங்கள், ஜெபமாலை, நற்கருணை ஆராதனை, மறைக்கல்வி, பக்த சபை இயக்கங்கள் போன்றவற்றில் மக்களின் ஆர்வமும் ஈடுபாடும் பங்கேற்பும் அதிகரித்தது. ஆகவே மக்களுக்கு வழிபாட்டில் கலந்து கொள்ள பெரிய ஆலயம் தேவைப்பட்டது.

எனவே அருட்தந்தை தோமஸ் பணிக்கர் அவர்களின் பணிக்காலத்தில் செம்மண்ணும், காட்டுக்கல்லும் நிறைந்த, தென்னையும் பனை மரமும் ஓங்கி வளர்ந்த எழில் கொஞ்சும் இடத்தில், வான் தொடும் கோபுரத்துடன் கருங்கல்லின் கூட்டுறுதியில் கம்பீரமான கோபுரத்தில் பரமனின் சிலுவை ஆசீர் வழங்கும் அற்புதக் காட்சியின் மேல் விளங்கும் மின்விளக்கு, கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும் இந்த அழகிய ஆலயம் 1972-ம் ஆண்டு பேராயர் மார் கிரிகோரியஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

மண்ணின் மைந்தர்கள் :

1. பேரருட்தந்தை மைக்கிள்
2. பேரருட்தந்தை வில்சன் C. M
3. பேரருட்தந்தை ஆன்றனி
4. அருட்தந்தை ஜஸ்டின்
5. அருட்தந்தை ஜீன் ஜோஸ்
6. அருட்தந்தை ஷைஜூ.

அருட்சகோதரிகள் :

1. அருட்சகோதரி அல்போன்சா
2. அருட்சகோதரி அனுஷா

அருட்சகோதரர்கள் :
1. அ. சகோ ஜோஸ்
2. அ. சகோ ஷிபு
3. அ. சகோ ரதீஷ்
4. அ. சகோ பிபின்
5. அ. சகோ விபின்
6. அ. சகோ விஜீஷ்
7. அ. சகோ அருண்
8. அ. சகோ ரதீஷ்.

கிராத்தூர் பங்கின் தனிச்சிறப்புகள் :

சிற்றாலயம் : பாடசாலை மைதானத்தில் மூன்று தளங்களுடன் கூடிய அழகிய சிற்றாலயம் மற்றும் பூமிக்கடியில் கட்டப்பட்டுள்ள அமைதியையும் சமாதானத்தையும் தருகின்ற தியானக்கூடம்.

குருசடி : கிராத்தூர் மருத்துவமனையருகில் புனித ஆரோக்கிய அன்னை குருசடியும், ஆலயத்தின் முன்புறம் மூன்று தளங்களுடன் கூடிய குருசடியும் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

கிராத்தூரின் கல்வி நிறுவனங்கள் :

1. மார் கிரிகோரியஸ் ம. சி. க ஆரம்பப்பள்ளி
2. மார் கிரிகோரியஸ் ம. சி. க உயர்நிலைப் பள்ளி.
3. மார் கிரிகோரியஸ் ம. சி. க metriculaction high school school.
4. மார் கிறிஸ்டோஸ்டம் கல்வியல் கல்லூரி.

பிற தனிச்சிறப்புகள்:

அருட்சகோதரிகள் இல்லம் :
DM கன்னியர் இல்லம் அமைந்துள்ளது.

புனித தோமையார் மருத்துவமனை.

Shalom Home என்ற பெயரில் முதியோரை பராமரிக்கும் முதியோர் இல்லம் உள்ளது.

தற்போது Community Hall கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.

வழித்தடம் : களியக்காவிளையில் இருந்து கொல்லங்கோடு வழியாக கிராத்தூர்.

இவ்வாறாக கிராத்தூர் அழகிய ஆலயத்தையும் அதன் வழியாக ஆன்மீக வளர்ச்சி பெற்ற மக்களையும் பல்வேறு வளர்ச்சி காரியங்களான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, முதியோர் இல்லம், அஞ்சலகம், இவற்றுடன் தற்போது சமூக நலக்கூடம் என பல்வேறு நிலைகளிலும் வளர்ந்துள்ளது.

மேலும் புனித ஜார்ஜியார் வழியாக நாள்தோறும் எண்ணற்ற அற்புதங்களும் அதிசயங்களும் நடந்து கொண்டிருப்பதால், கிராத்தூர் புனித ஜார்ஜியார் ஆலயமானது குமரி மாவட்டத்தின் எடத்துவா எனப் போற்றப்படுகிறது.