72 ஆரோக்கிய அன்னையின் நடுத்திட்டு ஆலயம், வேளாங்கண்ணி


நடுத்திட்டு புனித ஆரோக்கிய மாதா ஆலயம்

இடம் : வேளாங்கண்ணி

மாவட்டம் : நாகப்பட்டினம்
மறை மாவட்டம் : தஞ்சாவூர்.

திருத்தல அதிபர் : பேரருட்பணி பிரபாகரன் அடிகளார்.

இணை அதிபர் மற்றும் பங்குத்தந்தை : அருட்பணி சூசை மாணிக்கம்.

திருப்பலி : ஒவ்வொரு மாதத்தின் கடைசி சனிக்கிழமை காலை 07.00 மணிக்கு.

நடுதிட்டு ஆலயம் வரலாறு :

மோர் விற்ற, கால் முடமான சிறுவனுக்கு காட்சி :

தனது முடமான மகனுக்காக மனதுருகி செபித்த ஒரு தாயின் வேண்டுதலுக்கு பதிலளிக்கும் வகையில் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா மீண்டும் காட்சி அளித்தார். 

நடுத்திட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக் கொண்டிருந்த கால் ஊனமுற்ற சிறுவன் ஒருவனுக்கு வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தோன்றினார். 

`மகனே, எழுந்து நாகப்பட்டினத்தில் உள்ள செல்வந்தரிடம் சென்று ஒரு ஆலயம் கட்ட சொல்' என்ற அன்னையின் வார்த்தைகளைக் கேட்ட சிறுவன் அதிர்ந்து போனான். 

`அம்மா, என்னால் எப்படி நடக்க முடியும்?' என்றான் சிறுவன். 

`உன்னால் முடியும்' என்றார் அன்னை. 

அவன் எழுந்தான், நடந்தான், அங்கு ஓடத் தொடங்கியவன் செல்வந்தரின் வீட்டில் போய்தான் நின்றான். 

அன்னையின் புகழ் சுற்றுப் புறமெங்கும் பரவ, அன்னை செல்வந்தருக்கு காட்டிய இடத்தில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது. 

அதுவே நடுத்திட்டு ஆலயம் ஆகும்.