இடம் : சாத்தனூர், இளையான்குடி தாலுகா
மாவட்டம் : சிவகங்கை
மறைமாவட்டம் : சிவகங்கை
மறைவட்டம் : பரமக்குடி
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய சகாய அன்னை ஆலயம், சாலைக்கிராமம்
பங்குத்தந்தை : அருள்திரு. மா. ரமேஷ்
குடும்பங்கள் : 21
திருப்பலி : மாதத்திற்கு ஒருமுறை
தினந்தோறும் மாலை 07.00 மணிக்கு செபம்.
திருவிழா : செப்டம்பர் 8ம் தேதி.
வழித்தடம் : சாலைக்கிராமம் -RS மங்கலம் வழித்தடத்தில், சாத்தனூர் பேருந்து நிறுத்தம்.
வரலாறு :
சாலைக்கிராமம் பங்கின் ஒரு பகுதியாக விளங்கிய சாத்தனூரில் கி.பி 1919 ம் ஆண்டுவாக்கில் 18 கிறிஸ்தவ குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர்.
சாத்தனூரில் வாழும் கத்தோலிக்க மக்களுக்காக ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்பது, மக்களின் எண்ணமாக இருந்தது.
Dr. K. V. குழந்தைசாமி அவர்கள் நன்செய் நிலம் ஒன்றை வாங்கி, அதனை ஆலயம் கட்டுவதற்காக இலவசமாக கொடுத்தார்.
இந்த நிலத்தில் 1977 ம் ஆண்டு சாலைக்கிராம பங்குத்தந்தை அருள்திரு. மரிய பங்கிராஸ் அவர்களால் ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டன. ஆலய கட்டுமானப் பணிகளில் அருள்சகோதரி. தியோனி அவர்கள் பெரிதும் உதவி புரிந்தார்கள்.
1979 ம் ஆண்டு புனித ஆரோக்கிய மாதா ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இதனால் சாத்தனூர் மக்களின் மனம் பூரிப்படைந்தது.
2011-2012 காலகட்டத்தில் சாத்தனூர் இறைமக்களின் முயற்சியில் ஆலய முன்பகுதி மண்டபம் (போர்ட்டிகோ) கட்டப்பட்டு, ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து சாலைக்கிராமம் பங்கின் கிளைப் பங்காக இருந்து, பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலில் சிறப்புற செயல்பட்டு வருகிறது சாத்தனூர் புனித ஆரோக்கிய மாதா ஆலய இறைசமூகம்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. மா. ரமேஷ்.